பெல் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2./5.

நடிகர் & நடிகைகள் :- குரு சோமசுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், அமரர் நிதீஷ் வீரா,  பீட்டர் ராஜ், ஜாக் அருணாச்சலம், ஷார்மிஷா, துர்கா, சுவேதா டோராத்தி, ஜோஸ்பின், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வெங்கட் புவன்‌.

ஒளிப்பதிவு :- பரணிக்கண்ணன்‌.

படத்தொகுப்பு :- தியாகராஜன்

இசை :- ராபர்ட்‌.

தயாரிப்பு நிறுவனம் :-  புரோகன்‌ மூவிஸ்‌

தயாரிப்பாளர் :- பீட்டர்‌ ராஜ்

ரேட்டிங் :- 2./ 5.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்தியர்‌, மகாசித்தர் பாதுகாக்கப்படவேண்டிய ஆறு ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய ஆறு சீடர்களுக்குச்‌ சொல்லி அதை பாதுகாக்கவும்‌ வைக்க கட்டளையிட்டார்.

அந்த ரகசியங்களைப்‌ பாதுகாப்பதில்‌ ஏற்பட்ட நன்மைக்கும்‌ தீமைக்கும்‌ இடையே நடந்த போராட்டமே இந்த பெல் திரைப்படம்.

அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகளில் ஒன்றான நிசம்ப சூதனி என்ற ஒரு முக்கியமான மருந்தை காலகாலமாக பாதுகாத்து வருகிறார் கதாநாயகன் ஶ்ரீதர்.

மருத்துவக்குறிப்புகளில் ஒன்றான நிசம்ப சூதனி மருந்தை கண்டுபிடித்து வெளிநாடுகளுக்கு விற்று கோடி கோடியாக வில்லன் குரு சோமசுந்தரம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்

இதற்காக பல சூழ்ச்சிகள் செய்து கதாநாயகன் ஸ்ரீரிதரிடம் இருந்து அந்த மருந்தை எப்படியாவது வில்லன் குரு சோமசுந்தரம் கைப்பற்ற நினைக்கிறார்.

இறுதியில் கதாநாயகன் ஸ்ரீரிதரிடம் இருந்து நிசம்ப சூதனி மருந்தை வில்லன் குரு சோமசுந்தரம் கைப்பற்றினாரா? கைப்பற்ற வில்லையா ?நிசம்ப சூதனி மருந்தை கதாநாயகன் ஶ்ரீதர் கால காலமாக பாதுகாக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் பெல் திரைப்படத்தில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கண் தெரியாதவராக நடன இயக்குனர் ஸ்ரீதர், யதார்த்தமாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

நடன இயக்குனர் ஸ்ரீதருக்கு இணையாக மற்றோரு கதாநாயகனாக நடித்து இருக்கும் அமரர் நித்தீஷ் வீரா சிறப்பாக நடித்து இருக்கிறார்.

குரு சோமசுந்தரம் வில்லனாக மிரட்ட முயற்சி செய்து இருக்கிறார்

பீட்டர் ராஜ், ஜாக் அருணாச்சலம், ஷார்மிஷா, துர்கா, சுவேதா டோராத்தி, ஜோஸ்பின், நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் எவரும் பெரியதாக கவரவில்லை.

ஒளிப்பதிவாளர் பரணிகண்ணன் ஒளிப்பதிவு பசுமை நிறைந்ததாக மலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலே கதைக்களம் என்பதால் காட்சிகள் பசுமையாக அமைத்து இருக்கிறார்

இசையமைப்பாளர் இராபர்ட்டின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

பழங்கால அகத்தியர் சித்த மருத்துவ அவசியத்தையும், பெருமையையும் வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட்புவன்.

மொத்தத்தில் பெல் திரைப்படம் சத்தம் இல்லாத பெல்.

error: Content is protected !!