ஜெயிலர் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75/ 5.
நடிகர் & நடிகைகள் :- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார், தமன்னா, வஸந்த் ரவி, சரவணன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், சுனில், மிர்னா மேனன், நாக பாபு, ஜாஃபர் சாதிக், கிஷோர், பில்லி முரளி, சுகுந்தன், கராத்தே கார்த்தி, மிதுன், அர்ஷத், ஜி.மாரிமுத்து, நமோ நாராயணா, மாஸ்டர் ரித்விக், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர், கலை அரசன், உதய் மகேஷ், VTV கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- நெல்சன் திலிப் குமார்.
ஒளிப்பதிவு :- விஜய் கார்த்திக் கண்ணன்.
படத்தொகுப்பு :- ஆர். நிர்மல்.
இசை :- அனிருத் ரவிச்சந்திரன்.
தயாரிப்பு நிறுவனம்:- சன் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- கலாநிதி மாறன்.
ரேட்டிங் :- 2.75/ 5.
காவல்துறையில் ஜெயிலராக பணியாற்றி விட்டு ஓய்வு பெற்ற கதாநாயகன் ரஜினிகாந்த் தனது மனைவி ரம்யா கிருஷ்ணன் மற்றும் உதவி கமிஷனராக பணி புரியும் மகன் வசந்த ரவி பேரன் ரித்திக் மருமகள் மிர்னா மேனன் அரக்கோணத்தில் அமைதியான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
தனது பேரனை பள்ளிக்கு அழைத்து செல்வது வீட்டில் உள்ள வேலைகள் மற்றும் காய்கறிகள் வாங்குவது போன்ற வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் கதாநாயகன் ரஜினிகாந்த் செய்து வருகிறார்.
மிகவும் நேர்மையான உதவி கமிஷனராக இருக்கும் வசந்த் ரவி, சிலை கடத்தல் கும்பலில் சேர்ந்த ஒருவரான சரவணனை பிடித்து விசாரிக்கிறார்.
என்ன ஆனாலும் சிலை கடத்தல் கும்பலிலை விட்டுவிடக்கூடாது என வசந்த ரவி முடிவாக இருக்கிறார்.
சிலை கடத்தல் கும்பலை பிடிக்க செல்லும்போது கதாநாயகன் ரஜினிகாந்தின் மகன் வசந்த ரவி அந்த கும்பல் கொலை செய்து விடுகிறது,
நேர்மையாக வளர்த்த தன் மகனை சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கொலை விட்டதாக எண்ணி கதாநாயகன் ரஜினிகாந்த் தமது மகனை கொலை செய்த அந்த சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை பலி வாங்கினாரா? பலிவாங்க வில்லையா? என்பதுதான் இந்த ஜெயிலர் திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் ரஜினிகாந்த் சாதாரண காட்சிகளை தனது அனுபவ நடிப்பின் மூலம் மாஸ் காட்சியாக மாற்றி அசத்தியுள்ளார்.
கதாநாயகன் ரஜினிகாந்த் வழக்கமான நடிப்பு போன்று இல்லாமல் அவருக்கு உண்டான காமெடி கலந்த நடிப்பை அட்டகாசமான கொடுத்திருக்கிறார்.
இந்த வயதிலும் வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஜெயிலர் மூலம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.
கதாநாயகன் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் ரம்யா கிருஷ்ணன் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி நடிப்பை அழகாக கொடுத்துள்ளார்.
மாஸ்டர் ரித்விக் மிகவும் சுற்றித்தனமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
வசந்த ரவியின் மனைவியாக வரும் மிர்ணா மேனன் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்.
மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா என முன்னணி நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது பாராட்டக்கூடிய விஷயமாக இருந்தாலும் இந்த கதைக்கு இவர்கள் கண்டிப்பாக தேவையில்லை.
இல்லனாக நடித்திருக்கும் விநாயகன் மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் மிரட்டி இருக்கிறார்.
யோகி பாபு மற்றும் சுனில் இருவரின் நடிப்பும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.
யோகி பாபுவின் நகைச்சுவை சில காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை.
சரவணன் நாக பாபு, ஜாஃபர் சாதிக், கிஷோர், பில்லி முரளி, சுகுந்தன், கராத்தே கார்த்தி, மிதுன், அர்ஷத், ஜி.மாரிமுத்து, நமோ நாராயணா, அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர், கலை அரசன், உதய் மகேஷ், VTV கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன், அடிக்கடி ஹெலிகேம் ஷாட்டுகளால் பிரம்மாண்டத்தையும், குளோசப் ஷாட்டுகளால் எமோஷ்னல்களையும் காட்டி சிறப்பிக்கிறார்.
படத்தொகுப்பாளர் நிர்மல், கலை இயக்குநர் கிரண் அவரவர் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
அனிருத்தின் இசை மற்றும் பின்னணி இசையும் பாடல்களும் ரசிகர்களை ஆட்டம் போட செய்துள்ளது.
மேலும் திரைப்படத்தின் கதை ஏற்கனவே தமிழ் திரைப்பட உலகில் அரைத்த மாவுதான் என்பதால் ஒரு கட்டத்தில் இனி என்ன நடக்கும் என்பதை திரைப்படம் பார்க்கும் ரசிகர்களால் ஊகிக்கமுடிகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் எடுத்துக்கொண்ட கதைக்கரு பழைய மாவு என்றாலும், சொன்னவிதம் மிகவும் புதிது.
இதுல என்னடா புதுசு என திரைப்படம் பார்த்தவர்கள் கேட்டால் தெரியாது எனக் கூறலாம்.
கிட்டத்தட்ட ரெண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் ஜெய்லர் திரைப்படத்தில் ஆங்காகே கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.
திரைப்படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் ஜெயிலர் திரைப்படம், மிகவும் சுமாரான முதல் பாதி, இழுவையான இரண்டாம் பாதி தோல்விப் திரைப்படங்களின் வரிசையில் ’ஜெயிலர்’ இணைகிறது.











