பிரபல தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் பி.எஸ். ஸ்வாமிநாதன் காலமானார்.! 

பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான பிரமிட் சாய்மிரா ஸ்வாமிநாதன்அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் உயிர் நீத்தார். இவரது மனைவி பெயர் உமா ஸ்வாமிநாதன் மற்றும் இவருடைய மகள் தற்போது மருத்துவம் படித்து வருகிறார். இவருக்கு இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் இறுதி சடங்கு நடக்கவுள்ளது.
 
இவரது நிறுவனம் 2000 களில் தமிழ் சினிமா, இசை மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளில் தனக்கென நிரந்தர இடம் பிடித்த ஒன்று. 
இவரது நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு  ‘கண்ணாமூச்சி  ஏனடா’ என்ற படத்தை யூடிவி, ராடன் மீடியாவுடன் இணைந்து தயாரித்தார், மற்றும் ‘மொழி’ படத்தை விநியோகம் செய்துள்ளார். பின்னர் ஸ்பை த்ரில்லர் படமான முக்பீர் (2008) ஐ இந்தியில் தயாரித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘குசேலன்’, தளபதி விஜய்யின் ‘அழகிய தமிழ் மகன்’, அஜித்தின் ‘பில்லா’, ஜோதிகாவின் ‘மொழி’, மாதவனின் ‘எவனோ ஒருவன்’, ஆர்யாவின் ‘நான் கடவுள்’ போன்ற வெற்றி படங்களை விநியோகம் செய்திருக்கிறார். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படத்தை தயாரித்து, விநியோகம் செய்துள்ளார்.

Residence.. 
Flat 6A…
FIFTH BLOCK
RANI MEYAMMI TOWERS
RAJA ANNAMALAIPURAM
CHENNAI 600028…