ராங்கி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5 / 5.
நடிகர் நடிகைகள் :- த்ரிஷா, அனஸ்வர ராஜன், ஜான் மகேந்திரன், கௌதம் ஸ்ரீ ஹர்ஷா, லிசி ஆண்டனி, கோபி கண்ணதாசன், முரளி, பூஜா சேத்தியா, ஆலிம், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எம். சரவணன்.
ஒளிப்பதிவு :- கே.ஏ. சக்திவேல்.
படத்தொகுப்பு :- எம்.சுபாரக்.
இசை :- சி. சத்யா.
தயாரிப்பு :- லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்:- சுபாஷ்கரண்.
ரேட்டிங் :- 3.5 / 5.
சமூக ஊடகங்களின் மூலம் இளம்பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் சர்வதேச எண்ணெய் வளம் அரசியலையும் தொடர்புபடுத்தி சுவாரசியமான கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதற்கு கச்சிதமான இரண்டு மணி நேரத் திரைக்கதையை அமைத்து ஆங்காங்கே மிகக் கூர்மையான வசனங்களையும் வைத்து எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் எம்.சரவணன்.
இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷாவுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்த நிலையில், அவர் தனி கதாநாயகியாக நடித்து அதிரடி காட்டி உள்ள ராங்கி திரைப்படம் வெளிவந்திருக்கிறது.
ஒரு தனியார் ஆன்லைன் மீடியாவில் பத்திரிகையாளராக கதாநாயகி திரிஷா பணியாற்றும் வருகிறார்.
இவரின் துணிச்சல் காரணமாக கதாநாயகி திரிஷாவின் குடும்பம் இவரை விட்டு கொஞ்சம் தள்ளியை இருக்கின்றனர்.
கதாநாயகி திரிஷாவின் அண்ணன் மகள் சுஷ்மிதாவின் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கு ஒன்று இயங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த கணக்கின் ஃப்ரோபைல் பிச்சரில் கதாநாயகி திரிஷாவின் அண்ணன் மகள் சுஷ்மிதாவின் புகைப்படம் இருக்கிறது.
கதாநாயகி திரிஷாவின் அண்ணனுக்கு அவரது மகள் சுஷ்மிதாவின் ஆபாசமான வீடியோ ஒன்று அவருடைய கைபேசிக்கு வருகிறது.
இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அவர் கதாநாயகி திரிஷாவிடம் கூறுகிறார்.
இதனை கண்டுபிடிப்பதற்காக கதாநாயகி திரிஷா அந்த ஃபேஸ் புக் கணக்கில் பேசத் தொடங்குகிறார் பிரச்சினையை முடிக்கலாம் என்று நினைக்கும் போது பிரச்சினை ஒரு தீவிரவாதியின் மூலம் தொடர்கிறது.
அதில் இருந்து சுஷ்மிதாவை மீட்க நினைக்கும் கதாநாயகி திரிஷா அந்த போலி கணக்கின் மூலம் லிபியாவைச் சேர்ந்த தீவிரவாதி ஆலிமுடன் உரையாடத் தொடங்குகிறாள்.
சுஷ்மிதா என்று நினைத்து அந்த தீவிரவாதியும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறான்.
அந்நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாட விரும்பும் வல்லரசு நாடுகளின் முகவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் கதாநாயகி திரிஷாவும் அண்ணன் மகள் சுஷ்மிதாவும் தீவிரவாதியை பிடிப்பதற்கு இருவரையும் பகடைக்காய் பயன்படுத்துகிறார்கள்.
இறுதியில் கதாநாயகி திரிஷா தன் அண்ணன் மகளை காப்பாற்றினாரா? காப்பாற்றப்படவில்லையா? இந்த பிரச்சினையில் இருந்து அவர் எப்படி வெளியேறினார்கள்? அந்த தீவிரவாதி யார்? என்பதுதான் இந்த ராங்கி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ராங்கி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார்.
ராங்கி திரைப்படத்தில் தையல் நாயகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திமிரான பத்திரிகையாளரான கதாநாயகி திரிஷா உடல் மொழியில், அடங்க மறுக்கும் அழுத்தமான கதாபாத்திரத்தில் முழுமையான தனது நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைத்துள்ளார்.
சுஷ்மிதா கதாபாத்திரத்தில் வரும் அனஸ்வரா தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
சக்திவேல் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.
இசையமைப்பாளர் சி. சத்யா இசை பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.
இசையமைப்பாளர் சி சத்யா இந்த திரைப்படத்தில் பின்னணி இசையில் பலவிதமான அரபி நாட்டு இன்ஸ்ட்ருமெண்ட் வைத்து பின்னணி இசையில் வாசித்திருக்கிறார்.
எல்ல திரைப்படங்களில் வரும் வழக்கமான காதல் காட்சிகள் இல்லை என்றாலும் அவற்றை வசனத்தில் கூறியுள்ளார் இயக்குனர் எம் சரவணன்.
அரசியல், தொழில் நுட்பம், காதல் என பலவற்றை சரியான விதத்தில் பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்ந்திருக்கும் இயக்குனர் எம்.சரவணன் பாராட்டலாம்.
மொத்தத்தில் ராங்கி – திரைப்படம் எதற்கும் துணிந்தவள்.