கபில் ரிட்டன்ஸ் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.5/5.

நடிகர் & நடிகைகள் :- டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன், நிமிஷா, பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி, மற்றும் பலர்,

எழுத்து & இயக்கம் :- டாக்டர் ஸ்ரீனி செளந்தரராஜன்.

ஒளிப்பதிவாளர் :- ஷியாம் ராஜ்.

படத்தொகுப்பு :- வில்சி.

இசையமைப்பாளர் :- ஆர்.எஸ். பிரதாப் ராஜ்.

தயாரிப்பு நிறுவனம்:- தனலட்சுமி கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- டாக்டர் ஸ்ரீனி செளந்தரராஜன்.

ரேட்டிங் :- 2.5/ 5.

மிகப்பெரிய IT நிறுவனத்தில் பணிபுரியும் கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜனுக்கு கிரிக்கெட் விளையாட்டு என்றாலே பிடிக்காது அவர் வசிக்கும் தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடலாம் சண்டை போட்டு விரட்டி விடுவார்.

கிரிக்கெட் விளையாட்டு நமது வாழ்க்கையில் தேவை இல்லை என வாழும் கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜன் அவருடைய மகனுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது மிகப்பெரிய ஆர்வம் ஏற்படுகிறது.

ஆனால் கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜன் மகனுக்கு மறுப்பு தெரிவிப்பதோடு, உன் படிப்பில் ஆர்வம் காட்டி நீ இன்ஜினியராக வேண்டும் என கூறுகிறார்.

தாய் டாக்டராக வேண்டும் என கூறுகிறார் மறுபக்கம் கலெக்டராக வேண்டும் என்று தாத்தாவும் கனவு காண்கிறார்கள்.

திடீரென தேசிய கிரிக்கெட் அகாடமியில் கிரிக்கெட் விளையாடும் பெரிய வாய்ப்பு மகனுக்கு வருகிறது.

இதற்கிடையே. தேசிய கிரிக்கெட் அகடாமி சார்பில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு நடைபெறுகிறது.

அந்த தேர்வில் கலந்துக்கொள்ளும் கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜனின் மகன் சேர்ந்து கலந்துக்கொண்டு தவறாக பந்து வீசியதால் அவனை தேசிய கிரிக்கெட் அகடாமி நிராகரித்து விடுகிறது.

ஆனால், கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டும் இடம் தப்பாக இருப்பாதால் வீரர்கள் அனைவரும் பந்து வீசுவது தவறாகிறது.

என்பதை அறிந்த கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜன் தேர்வுக் குழுவினரிடம் உண்மையை சொல்லி விளக்குவதோடு, தனது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்கிறார்.

கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜன் மகனுக்கு கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு கிடைத்தா? கிடைக்கவில்லையா?

இதற்கு கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜன் சப்போர்ட் செய்தாரா? செய்யவில்லையா?
கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜன் கிரிக்கெட்டை வெறுப்பதற்கு காரணம் என்ன? என்பதுதான் இந்த கபில் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த கபில் ரிட்டன் திரைப்படத்தில் அறிமுக கதாநாயகனாக ஸ்ரீனி செளந்தரராஜன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீனி செளந்தரராஜன், முதல் திரைப்படம் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜனின் மனைவியாக நடித்திருக்கும் நிமிஷா, தனது கதாபாத்திரத்திற்கு உணர்ந்து அருமையாக நடித்திருக்கிறார்.

தனது கணவன் தடுமாறும் இடங்களில் அவரது பிரச்சனையை அறிந்து அவரை மீட்டெடுக்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டும்படி இருக்கிறது.

சிறு வயதில் ஸ்ரீனி செளந்தரராஜன் கதாப்பத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் பரத் மற்றும் ஸ்ரீனி செளந்தரராஜன் மகனாக நடித்திருக்கும் மாஸ்டர் ஜான் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

மாஸ்டர் பரத், நடிப்பை மிக சாதாரணமாக கையாள்கிறார்.

பல ஆசையை தன் மீது திணித்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விளையாட்டாக பயணிக்கும் மாஸ்டர் ஜான் இயல்பாக நடித்திருக்கிறார்.

ஆட்டோ ஓட்டுநர் கதாப்பத்திரத்தில் நடித்திருக்கும் வையாபுரி, கேப்பு கிடைக்கும் காட்சிகளில் எல்லாம் தனது பஞ்ச் வசனங்கள் மூலம் சிரிக்க வைப்பதோடு, நல்ல குணச்சித்திர நடிகராகவும் பயணித்திருக்கிறார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர் கதாப்பத்திரத்தில் நடித்திருக்கும் ரியாஸ் கான், ஆரம்பத்தில் தனது வில்லத்தனத்தால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானாலும், அதன் பின்பு கதாநாயகன் ஸ்ரீனி செளந்தரராஜனுக்கு கொடுக்கும் ஒத்துழைப்பால் சிறந்த குருவாக முத்திரை பதித்திருக்கிறார்.

பருத்தி வீரன் சரவணன், பணியை குறையில்லாமல் செய்து ரசிகர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.

ஒளிப்பதிவாளர் ஷியாம் ராஜ் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஆர்.எஸ். பிரதாப் ராஜ் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய ஒரு கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனி செளந்தரராஜன்.

தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன் என்று முதல் திரைப்படத்திலேயே அனைத்து பணிகளை சிறப்பாக செய்து கவனம் ஈர்க்கும் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனி செளந்தரராஜன்,

மொத்தத்தில் கபில் ரிட்டன்ஸ் திரைப்படம் திரைப்பட ரசிகர்கள் மனதின் கவனத்தை ஈர்க்கும்.