சிறுவன் சாமுவேல் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3.5 / 5.
நடிகர் நடிகைகள் :- அஜிதன் தவசிமுத்து, K.G விஷ்ணு, S.செல்லப்பன், S.B.அபர்பணா, M.A.மெர்சின், J.ஜெனிஸ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சாது ஃபெர்லிங்டன்.
ஒளிப்பதிவு :- V.சிவானந்த காந்தி .
படத்தொகுப்பு :- எஸ்.ஏ.அஜித் ஸ்டீபன்.
இசை :- S.சாம் எட்வின் மனோகர் & J.ஸ்டாண்ட்லி ஜான்.
தயாரிப்பு நிறுவனம் :- கண்ட்ரிசைடு பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் :- சாது ஃபெர்லிங்டன்.
ரேட்டிங் :- 3.5 / 5.
தமிழ் திரைப்பட உலகில் அத்தி பூத்தது போல் மிகச் சிறந்த உணர்வுபூர்வமான கதைகள் வெளிவருவதுண்டு அப்படியான கதையோடு வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் சிறுவன் சாமுவேல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் பேசும் தமிழில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படமான, சிறுவன் சாமுவேல், உலக திரைப்பட விழாக்கள் கலந்து கொண்டு பல விருதுகளைப் வாங்கி பாராட்டுக்களைப் பெற்றது.
திரைப்படத்தின் மையக்கரு கன்யாகுமரி மாவட்டத்தின் பிரத்யேகப் பேச்சு வழக்குத் தமிழின் சிறப்பையும் அந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சிறப்பையும் ஒருங்கே முன் வைக்கிறது.
கதாநாயகி கதாநாயகன், வில்லன் என்று பார்த்து பார்த்து சலித்து போன நிலையில், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக வந்துள்ளது, சிறுவன் சாமுவேல் திரைப்படம்.
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இரண்டு சிறுவர்கள் அஜிதன் தவசிமுத்து, K.G விஷ்ணு இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.
இவர்களால் கிரிக்கெட் பேட் வாங்க கூட இருவர் குடும்பத்திலும் வசதி இல்லாத நிலையில் உள்ளதால், தென்னை மட்டையில் கிரிக்கெட் பேட் மற்றும் பழைய மரக்கட்டை போன்றவற்றில் பேட் செய்து விளையாடி வருகின்றனர்.
சிறுவன் அஜிதன் தவசிமுத்து எப்படியாவது ஒரு கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறான்.
ஐநூறு கிரிக்கெட் கார்டுகளைச் சேகரித்தால், சச்சின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் கிடைக்குமென பள்ளி செல்லும் வேன் டிரைவர் கூறுகிறார்.
கிரிக்கெட் கார்டுகளைச் சேகரிக்க முயல்கிறான் சிறுவன் அஜிதன் தவசிமுத்து.
இதனால் அஜிதன் தவசிமுத்து நண்பன் K.G விஷ்ணு, மீது திருட்டு பழி விழுகிறது.
எந்த ஒரு தவறு செய்யாத K.G விஷ்ணு, மீது திருட்டு பழி விழுவதற்கு காரணமான அஜிதன் தவசிமுத்து, அதனை பொருட்படுத்தாமல் கிரி க்கெட் பேட் வாங்க மட்டும் கிரிக்கெட் காட் எப்படி சேர்ப்பது என்று மட்டுமே முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.
இறுதியில் இந்த சிறுவன் அஜிதன் தவசிமுத்து கிரிக்கெட்
பேட் வாங்கினானா? வாங்க வில்லையா?
இதனால் K.G விஷ்ணு, மீது விழுந்த திருட்டு பழியை எப்படி எதிர்கொள்கின்றனர்? என்பதுதான் இந்த சிறுவன் சாமுவேல் திரைப்படத்தின் மீதிக்கதை.
சாமுவேலாக நடித்திருக்கும் சிறுவன் அஜிதன் தவசிமுத்து மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
எந்த தவறுமே செய்யாத தனது நண்பன் கே.ஜி.விஷ்ணு
தண்டிக்கப்படும் இடங்களில் அனுதாபங்களின் மூலம் அஜிதன் தவசிமுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
எப்படியாவது கிரிக்கெட் பேட் வாங்கி விட வேண்டும் என அவனது முகத்தில் நடிப்பு அருமையாக இருக்கிறது.
ராஜேஷாக நடித்திருக்கும் கே.ஜி.விஷ்ணு அருமையாக நடித்திருக்கிறார்.
கே.ஜி.விஷ்ணுவின் அவனது திருட்டு பார்வையே ஒரு தினுசாக இருக்கிறது.
கே.ஜி.விஷ்ணு பார்வை மட்டுமே இவனை ஒரு திருடன் என நம்ப வைக்கிறது.
கே.ஜி.விஷ்ணு, வித்யாசமான பார்வை, அப்பாவி முகம், குடும்ப ஏழ்மை என அனைத்தையும் வித்யாசப்படுத்தி நடிப்பில் காண்பித்துள்ளார்.
இந்த சிறுவன் சாமுவேல் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் என்பதை விட கேமராவுக்கு முன்னால் அவர்கள் எதார்த்தமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வி.சிவானந்த் காந்தி கிராமத்து பின்னணியை ஒளிப்பதிவில் அழகாகவும் அற்புதமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் எஸ்.சாம் எட்வின் மனோகர் மற்றும் ஜே.ஸ்டாண்ட்லி ஜான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி பகுதியில் நடக்கும் கதை என்பதால் அங்கிருக்கும் சிறுவர்களையே தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததில் சுத்தமான குமரித் தமிழைப் திரைப்படம் முழுதும் கேட்க நேர்கிறது.
முழுக்க முழுக்க இரண்டு சிறுவர்கள் மட்டுமே வைத்து கதை மற்றும் திரைக்கதை அமைத்து திரைப்படத்தை அருமையாகவும் சுவாரசியமாகவும் இயக்கியிருக்கிறார் இயக்குனர் சாது ஃபெர்லிங்டன்.
நிச்சயம் இந்த சிறுவர்கள் மற்றும் இயக்குனருக்கு தேசிய விருது அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
இந்தத் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என்றால் தேசிய விருது தேர்வு செய்யும் கமிட்டி தப்பு என கூறலாம்.
மொத்தத்தில் சிறுவன் சாமுவேல் – நல்ல முயற்சி திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.