ஷூட் தி குருவி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.75/5.

நடிகர் நடிகைகள் :- அர்ஜை, சிவ ஷா ரா, ஆஷிக் ஹுசைன், ராஜ்குமார் G, சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மதிவாணன்.

ஒளிப்பதிவு :- பிரண்டன் சுஷாந்த்.

படத்தொகுப்பு :- கமலக்கண்ணன் K.

இசை :- மூன்ராக்ஸ்.

தயாரிப்பு நிறுவனம் :- ராசா ஸ்டுடியோ & ஷார்ட்ஃபிக்ஸ்.

தயாரிப்பாளர்:- K.J.ரமேஷ், சஞ்சீவி குமார்.

ரேட்டிங் :- 2.75 / 5.

சிறுவயதில் இருந்து தனது திறமையாலும், பலத்தாலும் பெரும் கேங்க்ஸ்டராக உருவெடுத்து நிற்பவர் கதாநாயகன் அர்ஜை.

காவல்துறைக்கு தன்னை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாமல் வெளி உலகத்திற்கு எதுவும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் அர்ஜை.

சாதாரண இரண்டு நண்பர்கள் சேர்ந்து கதாநாயகன் அர்ஜை கொலை செய்து விடுகிறார்கள்..

கொல்லப்படுவதோடு குருவி ராஜன் என்ற பெயர் மற்றும் சாம்ராஜ்யம் அனைத்தும் அழிந்து விடுகிறது.

யார் அந்த குருவி ராஜன்? அவனது சாம்ராஜ்யத்தை அழித்து அவனையும் அழித்த அந்த இரண்டு சாமனியர்கள் யார்? எதற்காக குருவி ராஜனை கொலை செய்தார்கள் என்பதுதான் இந்த ‘ஷூட் தி குருவி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஷூட் தி குருவி திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜை நடித்திருக்கிறார்.

குருவி ராஜன் கதாபாத்திரத்தில் அவரது தோற்றமும் நடிப்பும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

பல திரைப்படங்களில் இனை துனை கதாபாத்திரங்களில் நடித்த அர்ஜை குருவி ராஜன் கதாபாத்திரத்தில் அருமையாக பொருந்தி இருக்கிறார்.

நடிகர் ஷாரா வழக்கமான அவர் நடிப்பை அருமையாக கொடுத்து இருக்கிறார்.

நண்பரின் தாயாரிடம் தொலைபேசியில் பேசும்போது செண்டிமெண்ட் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.

ஆஷிக் ஹுசைன் கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஆஷிக் ஹுசைன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

வயதான கதாபாத்திரத்தில் ராஜ்குமார்.ஜி மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

சுரேஷ் சக்ரவர்த்தி, மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என அனைத்து கதாபாத்திரங்களும் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரண்டன் சுஷாந்த் ஒரு சிறு அறைக்குள் வைத்தே பெரும்பாலான காட்சிகளை திரைப்படம் ஆக்கி இருக்கிறார்.

இசையமைப்பாளர் மூன்ராக்ஸ் இசையில் பின்னணி இசையின் சவுண்ட் மிக்சிங் கொஞ்சம் கூடுதலாக உள்ளது, கொஞ்சம் குறைத்து இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்.

படத்தொகுப்பாளர் கமலக்கண்ணன் படத்தொகுப்பு வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் திரைப்படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார்.

கேங்ஸ்டர் திரைப்படமாகவும், அதே சமயம் பிளாக் காமெடி கதை களத்தை திரைக்கதையோடு இயக்குநர் மதிவாணன் இயக்கி இருக்கிறார்.

சிறு கதையை அமைத்து பெரும் திரைக்கதையை வடிவமைத்து, அதில் ஆக்‌ஷன் காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து அம்சங்களையும் அசத்திருக்கிறார் இயக்குனர் மதிவாணன்.

மொத்தத்தில், ‘ஷூட் தி குருவி’ சிறிய திரைப்படம்தான் ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத போலே உள்ளது.