உன்னால் என்னால் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 2.25/5.
நடிகர் & நடிகைகள் :- சோனியா அகர்வால், டெல்லி கணேஷ், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, நெல்லை சிவா, ஜெகா , ஏ. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ், மோனிகா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர்
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா.
ஒளிப்பதிவு :- கிச்சாஸ்.
படத்தொகுப்பு :- எம். ஆர். ரஜீஷ்.
இசை :- ரிஸ்வான்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- ராஜேந்திரன் சுப்பையா.
ரேட்டிங் :- 2.25./ 5.
மூன்று இளைஞர்களின் குடும்பத்தில் வறுமையின் காரணமாக சென்னைக்கு சென்று ஏதாவது வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம் என கிராமத்தில் இருந்து சென்னைக்கு கிளம்புகிறார்கள்.
மூன்று இளைஞர்களின் ஒருவருக்கு வீட்டில் கடன் பிரச்சினை, மற்றொருவருக்கு தன் தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இன்னொருவருக்கு தன் காதலித்த பெண்ணை தந்தை பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் தான் எனது மக்களுடன் உனக்கு திருமணம் இப்படி மூன்று இளைஞர்களுக்கும் உள்ள பிரச்சனையை தீர்த்துக் கொள்ள பணத்தைத் தேடித் ஓடுகிறார்கள்.
மூன்று இளைஞர்களுக்கும் மூன்று விதமான பிரச்சனைகளுக்கு பணம் தேவைப்பட மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
மூன்று இளைஞர்களும் ஒரு கட்டத்தில் ஒன்று இனைய ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலையை பார்க்கிறார்கள்.
இவர்கள் மூவரும் இணைந்து ஒரு ப்ராப்பர்ட்டி ரிஜிஸ்ட்ரேஷன் செய்தால் நமக்கு கமிஷன் தொகை கிடைக்கும் அதை வைத்து நமது பிரச்சனைகள் தீர்த்துக் கொள்ளலாம் என ரிஜிஸ்டர் ஆபீஸில் காத்திருக்கும் போது பிராப்பர்டி வாங்கும் சேட் இறந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது.
பெரிதும் நம்பியிருந்த ரியல் எஸ்டேட் பிசினஸும் நமது வாழ்க்கையில் ஏமாற்றி விட் மூன்று பேருமே விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள்.
அப்போது மூன்று இளைஞர்களையும் தேடி ரியல் எஸ்டேட் தாதா சோனியா அகர்வாலின் ஆள் ரவிமரியா மூலம் பணம் கிடைக்க ஒரு வாய்ப்பு வருகிறது.
ஒரு நபரைக் நீங்கள் கொலை செய்தால் எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே ஒன்றை கோடி பணம் கிடைக்கும் என தாதா சோனியா அகர்வால் கூறுகிறார்.
இந்த நிலையில் அந்த மூன்று இளைஞர்களும் தாதா சோனியா அகர்வால் சொன்ன அந்த நபர் யார் எதற்காக அந்த நபர் கொலை செய்ய சொன்னார்கள்.
தாதா சோனியா அகர்வால் சொன்ன நபரை கொலை செய்துவிட்டு பணத்தை வாங்கி தங்கள் மூவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்தார்களா! தீர்க்கவில்லையா? என்பதுதான் இந்த உன்னால் என்னால் திரைப்படத்தின் மீதி கதை.
இந்த உன்னால் என்னால் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜெகா ,இயக்குநர் கே. ஆர். ஜெயகிருஷ்ணா, உமேஷ் நடித்துள்ளார்கள்.
அந்த மூன்று இளைஞர்கள் ஜீவன், ராஜ், கணேஷ் கதாபாத்திரத்தில் ஜெகா ,இயக்குநர் கே. ஆர். ஜெயகிருஷ்ணா, உமேஷ் முவரும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்
திரைப்படத்தை இயக்கி நடித்த இயக்குநர் கே. ஆர். ஜெயகிருஷ்ணா, விட அவர் சொல்லிக் கொடுத்து நடித்த ஜெகா, உமேஷ் என்ற இரண்டு இளைஞர்களும் குறை இல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள்.
முதன்மை கதை மூன்று இளைஞர்களின் ஜோடியாக நடித்திருக்கும் சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் மிக அருமையாக நடித்துள்ளார்கள்.
ரியல் எஸ்டேட் மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
இப்படி ஒரு கதாபாத்திரம் சோனியா அகர்வாலுக்கு சுத்தமாக சொட்டாகவில்லை
சோடா கோபால் கதாபாத்திரத்தில் வரும் ரவி மரியா வருகிறார்.
ரவி மரியாவின் நடிப்பு காமெடி என்ற பெயரில் திரைப்படம் பார்க்க நம்மை சோதிக்கிறார்.
ரவி மரியாவின் பேசும் வசனம் மற்றும் உடல் மொழியும் சிரிக்க வைப்பதற்குப் பதில் திரையரங்கில் அமர்ந்திருக்கும் அனைவரையும் எரிச்சலை உண்டு படுத்துகிறது.
ராஜேஷ், டெல்லி கணேஷ் போன்ற மூத்த நடிகர்களைச் சரியாக வேலை வாங்காமல் வீணடித்துள்ளார்கள்.
ஆர். சுந்தர்ராஜன், மோனிகா, நெல்லை சிவா ஆகியோரும் நமுத்துப்போன நகைச்சுவைக் காட்சிகளில் வருகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் மிக அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த அளவுக்கு ஒளிப்பதிவில் திரைப்படத்தை தேற்றி உள்ளார் என்று பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது தெரிகிறது.
இசையமைப்பாளர் ரிஸ்வான் ஒரு பெரிய திரைப்படத்திற்கான உழைப்பைப் போட்டுள்ளார்.
ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கான பாடல்களை போட்டு ஆறுதல் படுத்திருக்கிறார்.
கதையில் உள்ள பிரச்சினையைப் பற்றி நல்ல காட்சிகளைக் கொண்டு முறைப்படுத்தி எடுத்து இருந்தால் இது ஒரு நல்ல திரைப்படமாக அமைந்திருக்கும்.
ஆனால் கதை திரைக்கதை நகராமல் அலைபாய்ந்து திரைப்படம் பார்ப்பவர்களுக்கு அலுப்பூட்டுகிறது. காட்சி அமைப்புகளும் வசனங்களும் முதிர்ச்சி இல்லாமல் இருக்கிறது.
திருத்தம் இல்லாத கதை தெளிவில்லாத திரைக்கதை சுவாரசியம் இல்லாத காட்சிகள் என்று இருக்கும் திரைப்படத்தை மேலும் சிந்தித்து எடுத்திருந்தால் திரைப்படத்தை ஒரு வெற்றி திரைப்படமாக கொடுத்திருக்கலாம்.
மொத்தத்தில் உன்னால் என்னால் திரைப்படம் இளைஞர்களால் முடியும் என கூறும் படம்.











