விமானம் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.75./ 5.

நடிகர் & நடிகைகள் :- சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், அனசுயா பரத்வாஜ், தன்ராஜ் – ராகுல் ராமகிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன்
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிவ பிரசாத் யானாலா.

ஒளிப்பதிவு :- விவேக் கலேபு.

படத்தொகுப்பு :-  மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்.

இசை :- சரண் அர்ஜுன்.

தயாரிப்பு நிறுவனம் :-  ZEE ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர் :- கிரண் கொரபதி.

ரேட்டிங் :- 2.75./ 5.

 

வறுமையோடு போராடும் மாற்றுத் திறனாளியான சமுத்திரக்கனி பொது கழிப்பறையை சுத்தம் செய்து கொண்டு அதில் வரும் வருமானத்தை வைத்து மனைவி இல்லாமல் தனது செல்ல மகன் துருவனை வளர்த்து வருகிறார்.

தன் செல்ல மகன் துருவனுக்கு விமானம் என்றால் கொள்ள பிரியம் எப்படியாவது ஒரு நாள் அதில் பறந்து விட வேண்டும் ஆசையில் வளர்ந்து வருகிறேன்.

தனது செல்ல மகன் துருவனை எப்படியாவது ஒரு ஒரு நாள் விமானத்தில் பயணித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு சமுத்திரக்கனி இருக்கிறார்.

ஒரு நாள் பள்ளிகள் மகன் துருவனை கோவையில் உள்ள மிகப்பெரிய பள்ளியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறுகிறார்கள்

அந்த சந்தோஷத்தில் இருக்கையில் மகன் துருவன் மயங்கி கீழே விழுந்து விடுகிறான்.

மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றதில் தன் மகனுக்கு புற்றுநோய் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்.

உங்கள் மகன் துருவன் சிறிது காலமே உயிருடன் இருப்பான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது மகன் இறப்பதற்கு முன்பு ஒரு தடவையாவது விமானத்தில் தன் மகனை பயணிக்க வைத்து அவனது ஆசையை நிறைவேற்றி விட வேண்டும் என்று சமுத்திரகனி நினைக்கிறார்.

வறுமையோடு போராடும் மாற்றுத் திறனாளியான சமுத்திரகனி தனது மகனின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என போராடுகிறார்.

சமுத்திரக்கனி விமான டிக்கெட் போடும் ஏஜென்சி சென்று டிக்கெட் விலை என்னவென்று கேட்க திருப்பதிக்கு செல்ல பத்தாயிரம் ரூபாய் என கூறுகிறார்கள்.

தன் செல்ல மகனுக்காக கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து கொஞ்சம் கொஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் சேர்க்க முயற்சிக்கிறார்.

இதனிடையே சமூத்திரகனிக்கு வாழ்க்கையில் பல விதமான பிரச்சினை வருகிறது.

இறுதியில் தனது செல்ல மகன் துருவனை விமானத்தில் பயணிக்க வைத்து விட வேண்டும் என்று ஆசையை சமுத்திரகனி நிறைவேற்றினாரா? நிறைவேற்றவில்லையா? என்பதுதான் இந்த விமானம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த விமானம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளியாக சமுத்திரகனி அற்புதமாகவும் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

தனது மகன் துருவன் கனவு எப்படியாவது நிறைவேற்ற விட வேண்டும் என போராடும் பாசம் உள்ள தந்தையாக பல இடங்களில் கண்கலங்க வைத்துள்ளார் சமுத்திரக்கனி.

சமுத்திரக்கனியின் மகனாக மாஸ்டர் துருவன் நடித்துள்ளார்.

மாஸ்டர் துருவன் நடிப்பில் பல இடங்களில் கைத்தட்டல் பெறுகிறார்.

திரைப்படத்தில் நடித்திருக்கும் மீரா ஜாஸ்மின், அனசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைக்கதைக்கு பெரிதும் உதவி இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் விவேக் கலேபு அவருடைய பணியை மிகவும் சரியாக செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சரண் அர்ஜுனின் இசை மற்றும் பின்னணி இசை ஓகே.

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உணர்வுகளை அழகாக பதிவு செய்ய முயற்சித்துள்ளார் இயக்குனர் சிவா பிரசாத் யென்னாலா.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கதை மற்றும் திரைக்கதை கொஞ்சம் விறுவிறுப்பு இல்லாததால் சற்று சோர்வு ஏற்படுகிறது.

மொத்தத்தில் விமானம் திரைப்படம் அதிகம் உயரத்தில் பறக்கவில்லை.

CLOSE
CLOSE
error: Content is protected !!