டக்கர் திரைவிமர்சனம் ரேட்டிங் 2.25/5.

நடிகர் நடிகைகள் :- சித்தார்த், திவ்யன்ஷா, RJ விக்னேஷ், யோகிபாபு, முனிஷ்காந்த், அபிமன்யு சிங், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கார்த்திக் ஜி கிரிஷ்.

ஒளிப்பதிவு :- வாஞ்சிநாதன் முருகேசன்.

படத்தொகுப்பு :-  ஜி.வி.கௌதம்.

இசை :- நிவாஸ் கே பிரசன்னா.

தயாரிப்பு நிறுவனம் :-  பேஷன் ஸ்டுடியோஸ்.

தயாரிப்பாளர் :- சுதன் சுந்தரம் – ஜெயராம்

ரேட்டிங் :- 2.25/ 5.

வாழ்க்கையில் எப்படியாவது பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் கதாநாயகன் சித்தார்த் வாழ்ந்து வருகிறார்.

இதற்காக தனது தன்மானத்தை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் பல இடங்களில் மாறி மாறி வேலை பார்த்து வருகிறார்.

எந்த வேலையிலும் கதாநாயகன் சித்தார்த் நீடிக்க முடியவில்லை.

கடைசியாக ஒரு பெரிய இடத்தில் பென்ஸ் கார் ஓட்டும் டிரைவராக கதாநாயகன் சித்தார்த் வேலைக்கு சேர்கிறார்.

இதனிடையே மிகப்பெரிய வசதி படைத்த குடும்பத்தில் வாழும் கதாநாயகி திவ்யான்ஷா கௌஷிக்கை சந்திக்க நேர்கிறது.

மறுபுறம் பணத்திற்காக இளம் பெண்களை கடத்தி விற்பனை செய்யும் ஒரு மிகப்பெரிய கும்பல் கதாநாயகி திவ்யான்ஷா கௌஷிக்கை கடத்த முயற்சி செய்கிறது.

அப்போழுது கதாநாயகன் சித்தார்த் டிரைவராக பணிபுரியும் பென்ஸ் கார் சேதமடைய, மிக விலையுரந்த கார் என்பதால் இதனை ஈடு செய்ய சில வருடங்கள் கதாநாயகன் சித்தார்த் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று முதலாளி கூறிவிடுகிறார்.

மேலும் கதாநாயகன் சித்தார்த்தை தரக்குறைவாக நடத்தி அடித்தும் விடுகின்றனர்.

இதனால் அசிங்கப்பட்ட கதாநாயகன் சித்தார்த் மனமுடையும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார்.

அச்சமயம் ஒரு சில பிரச்சினை ஏற்பட கடத்தல் கும்பலை கதாநாயகன் சித்தார்த் அடித்து நொறுக்கி, விட்டு அங்கிருந்து தப்பிப்பதற்காக கடத்தல் கும்பலின் காரை எடுத்து கொண்டு தப்பி விடுகிறார்.

அந்த காரின் டிக்கியில் கதாநாயகி திவ்யான்ஷா கௌஷிக் அடைத்து வைத்து இருக்கிறார்கள்.

இறுதியில் என்ன ஆனது? கடத்துல் கும்பலிடம் இருந்து எப்படி தப்பிக்கின்றனர்? என்பதுதான் இந்த டக்கர் திரைப்படத்தின் மீதிக்கதை. 

இந்த டக்கர் திரைப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடித்திருக்கிறார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

சித்தார்த், நடிப்பில் மூலம் கவனம் பெறுகிறார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்யான்ஷா கௌஷிக் நடித்திருக்கிறார்.

கதாநாயகி திவ்யான்ஷா கௌஷிக் கிளாமரிலும், காதல் காட்சிகளிலும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளார்.

யோகிபாபுவின் கலக்கல் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறது.

முனீஸ் காந்துக்கு படத்தில் வேலை இல்லை என்றாலும் அவருடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

மேலும் திரைப்படத்தில் வரும் பிற கதாப்பாத்திரங்கள் அவர்களின் பணியை அழகாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை திரைப்படத்திற்கு பெரிய பலம்.

இந்த திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள் தேர்வு பலமாக அமைந்துள்ளது.

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சற்று கூடுதலாக கவனம் செல்லுத்தியிருக்கலாம்.

சில இடங்களில் சற்று தொய்வு ஏற்படுவது போன்ற எண்ணம் தோன்றுகிறது.

மொத்தத்தில் டக்கர் திரைப்படம் டக்கர் என்று பெயர் வைக்காமல் இருந்திருக்கலாம்.

CLOSE
CLOSE
error: Content is protected !!