அயோத்தி திரைவிமர்சனம் ரேட்டிங்:- 4.5./5

நடிகர் நடிகைகள் :- சசிகுமார், யஷ்பால் சர்மா, புகழ், அஞ்சு அஸ்ரானி, பிரீத்தி அஸ்ரானி, அத்வைத், போஸ் வெங்கட்,
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மந்திரமூர்த்தி.

ஒளிப்பதிவு :- மாதேஷ் மாணிக்கம்.

படத்தொகுப்பு :- ஷான் லோகேஷ்.

இசை :- என்.ஆர். ரகுநந்தன்.

தயாரிப்பு நிறுவனம் :- டிரைடன்ட் ஆர்ட்ஸ்.

தயாரிப்பாளர்:- ஆர்.ரவீந்திரன்.

ரேட்டிங் :- 4.5. / 5.

தமிழ் திரைப்பட உலகில் இதுவரையில் வந்த எவ்வளவோ கதைகள் வந்திருக்கிறது.

ஆனால், இந்த மாதிரியான ஒரு கதை இதுவரை தமிழ் திரைப்பட உலகில் வந்ததில்லை என தாராளமாகச் சொல்லலாம்.

சமீபகாலமாக தமிழ் திரைப்பட உலகில் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் அயோத்தி திரைப்படம் வெளியாகியுள்ளது.

ஜாதி மதம் முக்கியம் அல்ல, மனிதம்தான் முக்கியம் என கூறும் சமூகத்தில் மனிதமே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்து அயோத்தி திரைப்படமத்தை தயாரிப்பாளர் டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவீந்திரன் எடுத்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கு இயக்குனர் மந்திரமூர்த்தி திரைக்கதை வசனம் எழுதி  இயக்கி உள்ளார்.

அயோத்தியில் இந்து மத நம்பிக்கையின் மீது முழு ஈடுபாடுடன் வசித்து வருபவர் யஷ்பால் ஷர்மா அவருடைய மனைவி, அஞ்சு அஸ்ரானி மற்றும் மகள், ப்ரீத்தி அஸ்ரானி மகன் அத்வைத் ஆகியோரை அடிமைத்தனத்துடன் தனது குடும்பத்தை நடத்துபவர்.

யஷ்பால் சர்மா தனது குடும்பத்தினரை மீது எரிந்து விழும் நபராக இருக்கிறார்.

மனைவி அஞ்சு அஸ்ரானி எந்நேரமும் அடக்கி, ஒடுக்கி மகள் ப்ரீத்தி அஸ்ரானி மகன் அத்வைத் மூவரிடமும் அன்பு பாசம் காட்டாமல் எப்பொழுது பார்த்தாலும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

புனித பயணமாக ராமேஸ்வரம் செல்ல போகிறோம் என தந்தை யஷ்பால் சர்மா கூற நூறு சந்தோசத்துடன் இருக்கிறார்கள்.

தீபாவளி திருநாளில் இவர்கள் அனைவரும் புனிதப்பயணமாக ராமேஸ்வரத்திற்கு கிளம்பி செல்கிறார்கள்.

அயோத்தியில் இருந்து மதுரைக்கு ரெயிலில் வந்து இறங்கி அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு வாடகை காரில் செல்கிறார்கள்.

யஷ்பால் சர்மாவின் முரட்டுத்தனமான நடவடிக்கையால் கார் ஓட்டுனரின் கவனம் தவறிவிட  பெரிய விபத்தில் சிக்கிகிரார்கள்.

யஷ்பால் சர்மாவின் குடும்பம்  மிக கடுமையாக  பாதிக்கப்படுகிறார்கள்.

கார் டிரைவர் கதாநாயகன் சசிகுமாருக்கு போன் செய்து கார் விபத்துக்குள்ளான விஷயத்தை கூறுகிறார்.

கதாநாயகன் சசிகுமார் மற்றும் புகழ் இருவரும் வந்து ஆம்புலன்ஸ் மூலம்  மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

இறுதியில் விபத்தில் சிக்கிய யஷ்பால் சர்மாவின் குடும்பம் என்ன ஆனது?  ராமேஸ்வரம் சென்றார்களா? இல்லை மீண்டும் சொந்த ஊரான அயோத்திக்கு சென்றார்களா? பல்ராம் குடும்பத்தை கதாநாயகன் சசிகுமார் காப்பாற்றினாரா? காப்பாற்றவில்லையா? என்பதுதான் இந்த அயோத்தி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த அயோத்தி திரைப்படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகன் சசிகுமார் இயல்பான குணத்தோடு திரைப்படத்தில் வருகிறார்.

பல காட்சியகங்களில நடிப்பால் உருக வைக்கிறார் கதாநாயகன் சசிகுமார்.

இந்த அயோத்தி திரைப்படத்தில் பிரீத்தி அஸ்ராணி கனமான கதாபாத்திரத்தை ஏற்று போகிற போக்கில் நடிப்பில் அருமையாக அசத்தியிருக்கிறார்.

பிரீத்தி அஸ்ராணி கடைசி காட்சியில் தன் தந்தையை தள்ளிவிட்டு நீ செத்துப் போ என வசனத்தை பேசி நடிப்பில் உச்சத்துக்கு சென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

தந்தை பல்ராமாக கதாபாத்திரத்தில் கோபக்கார தந்தையாக யஷ்பால் ஷர்மா மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்.

பான்பரக்கை வாயில் போட்டு  மெல்லும் வாயுடன் கடு கடு வென முகத்துடனும் இருந்தவரை, அழத்தெரியாத ஒருவன் அழுவதைக் காட்டும் இன்னொரு முகம் பார்த்து, திரையரங்குகளில் கைதட்டல் கேட்கிறது.

விஜய் டிவி புகழ் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக செய்து இருக்கிறார்.

யஷ்பால் ஷர்மாவின்  மனைவியாக வரும் அஞ்சு அஸ்ராணி, மகன் அத்வைத் ஆகியோர் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் மனதில்  நிறைந்து நிற்கிறார்கள்.

இசையமைப்பாளர்  என்.ஆர். ரகுநந்தன் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு மிகவும் அருமை.

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் படத்தொகுப்பு அருமையாக உள்ளது.

ஜாதி மதம் முக்கியம் அம்மா மனிதனுக்கு மனிதம்தான் முக்கியம் என உணர்ச்சிப்பூர்வமான திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மந்திரமூர்த்தி.

இயக்குனர் மந்திரமூர்த்தி திரைப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களிடையே மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

இயக்குனர் மந்திரமூர்த்தி தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.

மொத்தத்தில் அயோத்தி  திரைப்படம் ஜாதி மதத்திற்கு அப்பால் ஒரு சிறந்த படைப்பு.!