பரம்பொருள் திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5/5.

நடிகர் & நடிகைகள் :- ஆர்.சரத்குமார், அமிதாஷ், காஷ்மீர் பர்தேஷி, சார்லஸ் வினோத், ரவி வெங்கட், டி.சிவா, பாலாஜி சக்திவேல், ஸ்வாதிகா, பாவா செல்லதுரை, கஜராஜ், வி.பாலகிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், செந்தில் குமரன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிஅரவிந்த் ராஜ்.

ஒளிப்பதிவு :- எஸ்.பாண்டிகுமார்.

படத்தொகுப்பு :- நாகூரன் ராமச்சந்திரன்.

இசையமைப்பாளர் :- யுவன் சங்கர் ராஜா.

தயாரிப்பு நிறுவனம் :- கவி கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- மனோஜ், கிரிஷ்.

ரேட்டிங் :- 3.5/ 5.

கதாநாயகன் அமிதாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது தங்கையை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என நினைத்து கவலையுடன் வாழ்ந்து வருகிறார்.

கதாநாயகன் அமிதாஷின் தங்கையை காப்பாற்றுவதற்கு பல லட்ச ரூபாய் தேவை என மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.

தன் தங்கையை காப்பாற்ற அந்த பல லட்ச ரூபாய் தேவைப்படுவதால் எப்படியாவது பணத்தை சம்பாதித்து விட வேண்டும் என முயற்சியில் இறங்குகிறார்.

ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த ஒரு ஐம்பொன் சிலை விவசாயி ஒருவரிடம் கிடைக்கிறது அந்த ஐம்பொன் சிலையை கடத்தல் காரன் ஒருவன் அவரை கொலை செய்துவிட்டு சிலையை திருடி சொல்கிறார்.

கடத்தல்காரன் திருடிய அந்த ஐம்பொன் சிலை கடத்தல்காரன் வீட்டில் இருக்கும் அந்த ஐம்பொன் சிலையை கதாநாயகன் அமிதாஷ் திருட முயற்சி செய்கிறார்.

காவல்துறை வேலையை வைத்து எந்த அளவிற்கு சம்பாதிக்க முடியுமோ அந்த அதிக அளவிற்கு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் காவல்துறை ஆய்வாளரான சரத்குமார்
வாழ்ந்து வருகிறார்.

அப்போது காவல்துறை ஆய்வாளரான சரத்குமார் வீட்டிலும் கதாநாயகன் அமிதாஷ் திருட முயற்சி செய்து அவரிடம் சிக்கிக்கொள்கிறார்.

காவல்துறை ஆய்வாளரான சரத்குமாரிடம் சிக்கிய கதாநாயகன் அமிதாஷ்க்கு சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து, அவரிடம் உள்ள ஐம்பொன் சிலையை கைப்பற்றி அதை மிகப் பெரிய அளவில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள்.

கதாநாயகன் அமுதாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் தங்கையின் மருத்துவ செலவுக்காக காவல்துறை ஆய்வாளரான சரத்குமாருடன் பயணிக்க கதாநாயகன் அமிதாஷ் சம்மதம் தெரிவித்து இருவரும் இணைந்து 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை ஒன்றை விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள்.

அதே சமயம், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை கடத்தல் விவகாரத்தில் கதாநாயகன் அமிதாஷை சிக்க வைத்து விட்டு விற்பனை செய்யும் மொத்த பணத்துடன் எஸ்கேப் ஆகவும் காவல்துறை ஆய்வாளரான சரத்குமார் திட்டம் தீட்டுகிறார்.

இறுதியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலையை விற்பனை செய்து இருவருக்கும் பணம் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? கதாநாயகன் அமிர்தாஷ் தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் கிடைத்ததா? கிடைக்கவில்லையா? இருவருக்கும் தேவையான பணம் பூர்த்தியானதா?
என்பதுதான் இந்த பரம்பொருள் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பரம்பொருள் திரைப்படத்தில் கதாநாயகனாக அமிதாஷ் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அமிதாஷ், அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு, ஆபத்தான சூழ்நிலைகளை அதிரடியாக சமாளிப்பது என்று கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.

மருத்துவமனையில் இருக்கும் தன் தங்கையை காப்பாற்றுவதற்காக பணத்திற்காக போராடுபவர், காவல்துறை ஆய்வாளர் சரத்குமாருடன் இணைந்து பயணிக்கும் போது இயல்பான நடிப்பை கதாநாயகன் அமிதாஷ் வெளிப்படுத்தி இருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கும் சரத்குமார் அந்த கதாபாத்திரத்தை அவர்கள் நடிப்பில் பலம் சேர்த்திருக்கிறார்.

அதிலும் காவல்துறையிடம் சட்டம் பேசும் இளைஞர்களை கஞ்சா வழக்கில் சிக்க வைத்துவிட்டு, அதை சாதாரணமாக கையாளும் காட்சியில் நடிப்பிலும் சரத்குமார் கவனிக்க வைத்திருக்கிறார்.

பணம் மட்டுமே முக்கியம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கும் சரத்குமார், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் தான் மோசமான போலீஸ் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இந்த பரம்பொருள் திரைப்படத்தில் காஷ்மீரா பர்தேசி கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி காஷ்மீரா பர்தேசி சிலை வடிக்கும் கலைஞராக மிக அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி காஷ்மீரா பர்தேசி அதிக காட்சிகள் இல்லை என்றாலும், அவர் வரும் ஒரு சில காட்சிகளிலேயே அழகு சிலை போல் இருக்கிறார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் குறைவான காட்சிகளில் வந்தாலும் மிகவும் நிறைவாக நடித்திருக்கிறார்.

ஒரு காட்சியில் காவல்துறை ஆய்வாளர் சரத்குமார் இயக்குநர் பாலாஜி சக்திவேல் சிலை விஷயத்தை பற்றி பேசும் போது, அதை கவனிக்காமல் வேறு ஒரு விசயம் பற்றி அவர் தொடர்ந்து பேசும் காட்சி திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கைதட்டலால் அதிர விடுகிறது.

சிலை கடத்தல்காரராக வரும் வின்செண்ட் அசோகன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் கதாநாயகன் அமிதாஷின் தங்கையாக நடித்திருக்கும் சுவாதிகா, சார்லஸ் வினோத், கஜராஜ், செந்தில் குமரன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.பாண்டி குமாரின் ஒளிப்பதிவின் மூலம் பகல் மற்றும் இரவு நேர குறிப்பாக குறைவான ஒளியில் கூட காட்சிகளை மிகவும் அழகாக ரசிக்கும்படியாக படமாக்கியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் காட்சிகளை படத்தொகுப்பின் மூலம் மிகவும் நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கும்படியாக இருக்கிறது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு சின்ன சிலையை வைத்துக்கொண்டு மிகப் பெரிய அளவில் திரைக்கதை அமைத்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நம்மை பரபரப்புடன் பயணிக்க வைத்திருப்பதோடு, இறுதியில் எதிர்பார்க்காத திருப்புமுனையோடு திரைப்படத்தை முடித்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் சி.அரவிந்த் ராஜ்.

மொத்தத்தில், ‘பரம்பொருள்’ திரைப்படம் பரபரப்புக்கு, பஞ்சமில்லாத திரைப்படம்.

error: Content is protected !!