சித்தா திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.5./5
நடிகர் & நடிகைகள் :- சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஶ்ரீ, S.ஆபியா தஸ்னீம் பாலாஜி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- S. U. அருண் குமார்.
ஒளிப்பதிவு :- பாலாஜி சுப்ரமணியம்.
படத்தொகுப்பு :- சுரேஷ் A பிரசாத்.
இசையமைப்பாளர் :- திபு நினைன் தாமஸ்-விஷால் சந்திரசேகர்.
தயாரிப்பு நிறுவனம்:- இடாகி என்டர்டெயின்மென்ட்.
தயாரிப்பாளர் :- சித்தார்த்.
ரேட்டிங் :- 3.5./ 5.
அண்ணன், திடீரென இறந்து விட அண்ணன் பணிபுரிந்த அந்த மாநகராட்சியில் சூப்பர்வைசர் பணி கதாநாயகன் சித்தார்திற்கு கிடைக்கிறது.
தனது அண்ணன் இறந்துவிட அண்ணனின் 7 வயது மகள் சிட்டா மற்றும் அண்ணி அஞ்சலி நாயர் தனக்கு கிடைத்த மாநகராட்சி சூப்பர்வைசர் பணியை பார்த்து கொண்டு தனது அண்ணன் குடும்பத்தோடு மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் சித்தார்த்.
அண்ணன் மகளை 7 வயது சிட்டாவை தனது மகள் போல் பாவித்து மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார் கதாநாயகன் சித்தார்த்.
தன் நண்பனின் அக்கா மகளும் கதாநாயகன் சித்தார்த் அண்ணன் மகளும் இருவரும் இணை பிரியாத தோழிகளாக ஒரே பள்ளியில் ஒன்றாக படித்து வருகின்றனர்.
தன் நண்பனின் அக்கா மகளிடமும் கதாநாயகன் சித்தார்த் மிகவும் அதிகமான பாசத்துடன் இருக்கிறார்.
இந்த சூழலில், தனது அண்ணனின் மகள் சிட்டாவின் தோழி தனியாக ஒரு இடத்திற்கு சென்று வருகிறார்.
அன்றிலிருந்து ஆண்கள் யாரை பார்த்தாலும் யார் தொட்டாலும் அஞ்சி நடுங்குகிறார்.
ஒருநாள், கதாநாயகன் சித்தார்த் அருகில் செல்லும் போது அந்த சிறுமி தள்ளிச் செல்கிறாள்.
அந்த நடுக்கத்திற்கு ஒரு ஆண் காமூகன்தான் காரணம் என அதன் பிறகு தெரிய வருகிறது
காமூகன் ஒருவன் அந்த சிறுமியிடம் அத்துமீறியதால் அந்த சிறுமி நடுங்கியிருக்க, அந்த பழி கதாநாயகன் சித்தார்த் மீது விழுகிறது.
அது கதாநாயகன் சித்தார்த் என்று தெரிந்து அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் வைத்து அவரை அவருடைய நண்பன் அடித்து விடுகிறான்.
இச்சமயத்தில், அண்ணன் மகள் சிட்டாவை யாரோ கடத்தி விடுகின்றனர்.
இந்த நிலையில் தனது நண்பனின் அக்கா மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன் யார் என தேடி கண்டுபிடித்தாரா? கண்டுb பிடிக்கவில்லையா? கடத்தப்பட்ட அண்ணன் மகள் சிட்டாவை மீட்கப்பட்டாளா.? மீட்கப்படவில்லையா? இதற்கு காரணமான காமூகன் யார் என்று கண்டுபிடித்தார்களா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த சித்தா திரைப்படத்தின் மீதிக் கதை.
இந்த சித்தா திரைப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதாநாயகன் சித்தார்த், தனது அனுபவ நடிப்பை கச்சிதமாக இந்த சித்தா திரைப்படத்தில் மிக அருமையாக நடித்துள்ளார்.
எந்தெந்த காட்சிகளில் எவ்வளவு நடிப்பு தேவை என்பதை அளவு எடுத்தாற் போல் அளந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார் கதாநாயகன் சித்தார்த்.
தனது அண்ணன் மகளை காணவில்லை எனத் தெரிந்ததும் தவிக்கும் தவிப்பில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கண்களை குளமாக்கி விடுகிறார்.
இந்த சித்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நிமிஷா சஜயன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாகவும் அருமையாகவும் பொருந்தியிருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன் ஆரவாரம் இல்லாத நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிகிறார்.
திரைப்படத்தின் ஆரம்ப காட்சியில் ஆரம்பித்து, கதாநாயகன் சித்தார்த் உடனான உரையாடல் வரைக்கும் சக்தி கேரக்டராகவே நமது கண் முன் பதிய வைத்துவிட்டு செல்கிறார்.
கதாநாயகன் சித்தார்த்தின் அண்ணியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயரும் மிக அழகாகவும் அளவாகவும் நடித்திருக்கிறார்.
காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் நடித்திருக்கும் மிக அருமையாக நடித்திருக்கிறார்.
திரைப்படத்தின் மிகப்பெரும் பலமே நடித்த நடிகர்கள் மட்டும்தான் கதாபாத்திரத்திற்கு உகந்தவாறு சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து திரைப்படத்தில் நடிக்கவைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு காட்சிகளை காட்சிகளாக நமது கண்களுக்கு பழனியில் உள்ள சுற்று வட்டாரங்களை அப்படியே மிகவும் அருமையாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் திபு நினைன் தாமஸ் இசையில் பாடல்கள் சூப்பரான மெல்லிசைதான்.
இசையமைப்பாளர் விஷால் சந்திர சேகரின் பின்னணி இசையில் இறுதி காட்சிகளில் கண்ணீர் சிந்த வைத்துவிட்டார்.
தன் நண்பனின் அக்கா மகளிடமும் கதாநாயகனை சித்தார்த்தை வீட்டில் இறக்கி விடும்போது என்ன பிரச்சனை என்று கேட்க சித்தார்த்தை கண்டு விலகி ஓட அதை வீடியோ எடுத்து மாட்டி விட்டது யார் என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லவில்லை.
சிறு குழந்தைகளை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வில்லனை மிகவும் கொடூரமாக பழிவாங்குவதை காண்பித்திருக்க வேண்டும் அதை காண்பிக்கவும் தவறிவிட்டார் இயக்குனர் அருண் குமார்.
கதாநாயகன் சித்தார்த் கதாநாயகி நிமிஷா சஜயன் சிறுவயதில் காதலித்தார்கள் என்பதை தெளிவாக காண்பித்து இருக்கலாம்.
பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கான இந்த திரைப்படத்தை விழிப்புணர்வு திரைப்படமாகவே எடுத்து இருக்கிறார் இயக்குனர் அருண் குமார்.
அதுமட்டுமல்லாமல் ஆண் பெண் குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதிகமாக பேசவும், அவர்களிடம் செல்போனை அதிகமாக கொடுத்து அடிமைப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் மிக அருமையாகவும் தெள்ளத் தெளிவாகவும் இந்த சித்தா திரைப்படத்தில் கூடியிருப்பது இயக்குனருக்கு அருண்குமாருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
பெண் குழந்தைகளை பெற்றெடுத்த ஒவ்வொரு பெற்றோர்களும் கட்டாயம் பார்க்கும்படியான ஒரு அருமையான படைப்பைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் குமார்.
நடிகர் சித்தார்த்தின் தமிழ் திரைப்பட உலகில் இந்த சித்தா திரைப்படம் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் அவருக்கு ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் இந்த சித்தா திரைப்படம் பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்களும் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான திரைப்படம்.
சித்தா திரைப்படத்தில் குறைகள் 40% சதவீதம் நிறைகள் 60% சதவீதம்.











