சூரகன் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5 /5.
நடிகர் & நடிகைகள்:- V.கார்த்திகேயன், சுபிக்ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி, கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், கலைமாமணி ஶ்ரீதர், தியா, ஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சதீஷ் கீதா குமார்.
ஒளிப்பதிவாளர் :- சதீஷ் கீதா குமார், ஜேசன் வில்லியம்ஸ்.
படத்தொகுப்பாளர் :- ராம் சுதர்ஷன்.
இசையமைப்பாளர் :- அச்சு ராஜாமணி.
தயாரிப்பு நிறுவனம் :- தே3வது கண் சினி கிரியேஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- V.கார்த்திகேயன்.
ரேட்டிங் :- 2.5 /5.
விபத்தொன்றில் அவரின் பார்வை பாதிக்கப்பட்டு அவர் பார்க்கும் அனைத்துமே தலைகீழாக தெரிவதால் காவல்துறை அதிகாரியான கதாநாயகன் கார்த்திகேயன் அவருடைய பார்வை பிரச்சனையாக தவறுதலாக ஒரு.பெண்ணை சுட்டுவிடுகிறார்
அந்தப் பெண்ணை தவறுதலாக சுட்டதால் காவல்துறை அதிகாரியான கதாநாயகன் கார்த்திகேயன் தற்காலிகமாக பணியிடம் நீக்கம் செய்யப்படடுகிறார்.
இந்நிலையில் ரோட்டில் அடிபட்டு கிடக்கும் அந்த பெண்ணை காப்பாற்றி முதல் உதவிக்காக மருத்துவமனையில் சேர்க்கிறார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண் இறந்து விட அவரை யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என கதாநாயகன் கார்த்திகேயன் அறிந்து அந்த பெண்ணை விபத்துக்குள்ளாக்கினார்கள் யார் என்பதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென முயற்சி மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் கதாநாயகன் கார்த்திகேயனால் அந்த கொலையாளியை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? பணியிடம் நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி பணிக்கு மீண்டும் சேர்ந்தாரா? சேரவில்லையா? என்பதுதான் இந்த சூரகன் திரைப்படத்தின் மீதிக்கதை
இந்த சூரகன் திரைப்படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
தான் கற்ற வித்தைகளை எப்படியாவது திரையில் காட்டி விட வேண்டும் என ஆர்வம் கதாநாயகன் வி.கார்த்திகேயன் நடிப்பில் தெரிகிறது.
ஆக்ஷன், நடனம், நடிப்பு என இன்னும் கொஞ்சம் அதிகளவில் ரிஸ்க் எடுத்து இருக்கலாம்.
இந்த சூரகன் திரைப்படத்தில் கதாநாயகியாக சுபிக்ஷா கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகி சுபிக்ஷாவுக்கு ஒரு சில காட்சிகள் மட்டும் தான் வருகிறார்.
பெரிய அளவில் இந்த திரைப்படத்தில் வேலை ஒன்னும் இல்லை.
வில்லனாக வரும் வின்சென்ட் அசோகன், விபத்தில் மரணம் அடைந்த பெண்ணின் தாத்தாவாக வரும் நிழல்கள் ரவி, மன்சூர்.அலிகான், கதாநாயகனின் சகோதரியாக வரும் வினோதினி வைத்தியநாதன் கதாநாயகனின் மாமாவாக வரும் பாண்டியராஜன் காவல்துறை அதிகாரியாக வரும் ஜீவா ரவி, மற்றொரு வில்லனாக வரும் சுரேஷ் மேனன் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தும் விபச்சார தலைவியாக வரும் ரேஷ்மா பசுபுலேட்டி வில்லனுக்கு வலது கையாக வரும் டேஞ்சர் மணி அமைச்சராக வரும் கே. எஸ். ஜி வெங்கடேஷ், என அனைத்து கதாபாத்திரங்களும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்தை திரையில்.காட்டி இருக்கும் இயக்குனர் சதீஷ் கீதா குமார் அவர்களை சரியாக பயன்படுத்தினாரா என்றால் இல்லையென்றே தோன்றுகிறது.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தொகுப்பாளர் ராம் சுதர்ஷனின் படத்தொகுப்பு மூலம் கதையை கோர்வையாக தரத் தவறியிருக்கிறது பல. காட்சிகள் சில இடங்களில் ஜம்ப் ஆகிறது.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசை மற்றும் பின்னணி இசை பாடல்களை மெலடியாகவும் குத்தாட்டமாகவும் கொடுத்திருக்கிறார்.
அதேபோல் விபத்தில்.பார்வை நரம்பு பாதிக்கப்பட்ட விஷயம் புதுசாக இருந்தாலும் அதை திரைப்படத்திற்கு பொருத்தி பார்க்க முடியாத ளவுக்கு காட்சிகள் எல்லாமே வழக்கமான கோணத்திலேயே திரைப்படமாக இருப்பதால் வித்தியாசமாக யோசித்த இயக்குனர் பார்வை பாதிப்பு குறைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காததால் காட்சிகள் தொய்வு தெரிகிறது.
மொத்தத்தில் சூரகன் திரைப்படம் இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் மெனக்கெட்டு இருந்தால் மிகப்பெரிய அளவில் வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கும்.











