J பேபி திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஊர்வசி, தினேஷ், மாறன், சேகர் நாராயணன், மெலடி டார்கஸ், தாட்சாயிணி, இஸ்மத் பானு, சபீதா ராய், மாயா ஸ்ரீ, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சுரேஷ் மாரி.
ஒளிப்பதிவாளர் :- ஜெயந்த் சேது மாதவன்.
படத்தொகுப்பாளர் :- சண்முகம் வேலுச்சாமி.
இசையமைப்பாளர் :- டோனி பிரிட்டோ.
தயாரிப்பு நிறுவனம் :- நீலம் புரொடக்ஷன்ஸ், நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியா.
தயாரிப்பாளர்கள் :- இயக்குனர் பா.ரஞ்சித், அபயானந்த் சிங், பியூஷ் சிங், சௌரப் குப்தா, அதிதி ஆனந்த், அஷ்வினி சவுதாரி.
கதையின் நாயகி ஊர்வசிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தை 3 ஆண் குழந்தை ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்து கணவரை இழந்து ஐந்து குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறார்.
கதையின் நாயகி ஊர்வசிக்கு ஐந்து குழந்தைகளின் இரண்டு பெண் பிள்ளைகள், மூன்று ஆண் பிள்ளைகளை பெற்றெடுத்த கதையின் நாயகி ஊர்வசி, அனைத்து பிள்ளைகளுக்கும் கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்து விடுகிறார்.
கதையின் நாயகி ஊர்வசி திருமணம் செய்து கொடுத்த தனது ஐந்து பிள்ளைகளின் வீட்டில் ஒவ்வொருவர் வீட்டிலும் சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.
தன்னுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை போலவே அனைத்து பிள்ளைகளிடமும் அன்பு செலுத்தும் கதையின் நாயகி ஊர்வசி, திடீரென்று ஒரு நாள் காணாமல் போய் விடுகிறார்.
இளைய மகன் தினேஷ் மற்றும் மூத்த மகன் மாறன் இருவரையும் காவல்துறையை சேர்ந்த காவலர் ஒருவர் இருவருக்கும் போன் செய்து காவல் நிலையத்துக்கு வரச் சொல்லி கூறுகிறார்.
காணாமல் போன கதையின் நாயகி ஊர்வசி கொல்கத்தாவின் ஹவுரா நகரில் இருப்பதாக அங்கிருக்கும் தமிழ் ராணுவ வீரர் மூலம் இளைய மகன் தினேஷ் மற்றும் மூத்த மகன் மாறன் இருவருக்கும் காவல்துறை ஆய்வாளர் கதிரவன் பாலு மூலம் காணாமல் போன தாய் இருக்கும் ஊர் தெரிய வருகிறது.
காவல்துறை ஆய்வாளர் கதிரவன் பாலுவின் அறிவுரைப்படி மூத்த மகன் மாறனும், இளையமகன் தினேஷும் தன் தாய் கதையின் நாயகி ஊர்வசி அழைத்து வருவதற்கு கொல்கத்தா கிளம்பி செல்கிறார்கள்..
தன் தாய் கதையின் நாயகி ஊர்வசி இருப்பதாக சொல்லப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று பார்க்கும் போது, இங்கு உங்கள் தாய் இல்லை என ஒரு பெண் காவலர் மூலமாக தகவல் கிடைக்க அங்கிருந்து அரசு மகளிர் காப்பகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக சொல்கிறார்.
அரசு மகளிர் காப்பகத்திற்கு ராணுவ வீரர் மற்றும் இளைய மகன் தினேஷ் மற்றும் மூத்த மகன் மாறன் மூவரும் சென்று பார்த்தால், உங்களது தாய் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறுகிறார்கள்.
ராணுவ வீரர் மற்றும் இளைய மகன் தினேஷ் மற்றும் மூத்த மகன் மாறன் தனது தாய் கதையின் நாயகி ஊர்வசியை கண்டுபிடித்தார்களா? கண்டுபிடிக்கவில்லையா? கதையின் நாயகி ஊர்வசி எதற்காக வீட்டை விட்டு கொல்கத்தாவிற்கு சென்றார் அதற்கான காரணம் என்ன என்பதுதான் இந்த J பேபி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த J பேபி திரைப்படத்தில் கதையின் நாயகியாக ஊர்வசி நடித்திருக்கிறார்.
பேபியம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி, குழந்தை உள்ளம் படைத்த முதியவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அருமையாக நடித்து நடிப்பு ராட்சசி என்பதை நிரூபித்திருக்கிறார்.
இந்த J பேபி திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை ஊர்வசி அவர்களுக்கு இந்த J. பேபி திரைப்படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்.
கதையின் நாயகி ஊர்வசியின் இளைய மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தினேஷ், உடல் எடை அதிகரித்து தொப்பையுடன் தன்னை கதாபாத்திரத்திற்காக முற்றிலும் மாற்றிக்கொண்டு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
கதையின் நாயகி ஊர்வசியின் மூத்த மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லொள்ளு சபா மாறன், சிறந்த குணச்சித்திர நடிகராக இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
தனது தம்பி மீது உள்ள பகையை அவர் வெளிப்படுத்தும் விதமாகட்டும், போதையில் இரவு நேரத்தில் புலம்பும் காட்சியாகட்டும் அனைத்தையும் அளவாக நடித்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
தனது வழக்கமான டைமிங் வசனங்கள் மூலம் அவ்வபோது சிரிக்க வைத்து விடுகிறார்.
உண்மையான பேபியம்மா காணாமல் போய் கொல்கத்தாவில் கண்டுபிடித்து காப்பாற்றி, அவர்களுடைய மகன்களிடம் ஒப்படைத்த ராணுவ வீரரான சேகர் நாராயணன், நிஜ வாழ்க்கையில் நடந்ததை அதே கதாபாத்திரத்தில் J பேபி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம்.
அதைவிட ஆச்சரியம் விஷயம் எந்தவிதமான திரைப்படத் துறையில் முன் அனுபவம் இன்றி பயம் இல்லாமல் ராணுவ வீரரான சேகர் நாராயணன் மிக சிறப்பாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.
திரைப்படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியில் காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதிரவன் பாலு மிகவும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்த கதிரவன் பாலு உண்மையான காவல்துறை அதிகாரிகள் எப்படி எல்லாம் மிரட்டுவார்களோ அதே போல் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகி ஊர்வசியின் இளைய மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மெலடி டார்கஸ், மூத்த மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாட்சாயிணி, தினேஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இஸ்மத் பானு, லொள்ளு சபா மாறனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சபீதா ராய் என அனைவரும் நடுத்தர குடும்பத்து பெண்களை பிரதிபலிக்கும் வகையில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிக நேர்த்தியாக ரசிர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.
கதையின் நாயகி ஊர்வசியின் ஒவ்வொரு அசைவுகளையும் மிக நேர்த்தியாக ஒளிப்பதிவின் மூலம் மிக அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் டோனி பிரிட்டோவின் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை அனைத்தும் காட்சிகளை உயிரோட்டம் உள்ளதாக அமைந்திருக்கிறது.
அந்த உண்மை சம்பவத்தை உயிரோட்டம் மிக்க உணர்ச்சிமிக்க காட்சிகளோடு, மிக மிக உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்து ஒட்டு மொத்த தமிழ் திரைப்பட ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் இயக்குனர் சுரேஷ் மாரி.
இயக்குனர் சுரேஷ் மாரியின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தில் நடந்த தனது பெரியம்மாவின் கதையை கருவாக கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் சுரேஷ் மாரி அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில், இந்த ’J பேபி’ படத்தை தேசிய விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் தேசிய விருதுக்கான அனைத்து அம்சங்களும் உள்ள ஒரே திரைப்படம் J பேபி’.











