வாஸ்கோடகாமா திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- நகுல், அர்த்தனா பினு, கே.எஸ். ரவிக்குமார், வம்சி கிருஷ்ணா, ஆனந்தராஜ், முனிஷ்காந்த், ரெடிங் கிங்ஸ்லி, பிரேம்குமார், படவா கோபி, சேசு, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஆர் ஜி கே.
ஒளிப்பதிவாளர் :- என் எஸ் சதீஷ்குமார்.
படத்தொகுப்பாளர் :- தமிழ் குமரன்.
இசையமைப்பாளர் :- என்.வி அருண்.
தயாரிப்பு நிறுவனம் :- 56 56.
தயாரிப்பாளர் :- டத்தோ பி.சுபாஸ்கரன்
ரேட்டிங் :- 1.5./5.
நன்மை செய்பவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்து வாஸ்கோடகாமா என்ற சிறை சாலையில் அடைக்கும், கெட்டது மட்டுமே செய்பவர்களை சிறைச்சாலைங இருந்து விடுதலை செய்து இப்படிப்பட்ட மாறுபட்ட சமூகத்தில் தொடர்ந்து நல்லவனாக மட்டுமே இருக்கும் கதாநாயகன் நகுல் நல்லவனாக இருந்து விட்டு கெட்டவராக மாறி வாஸ்கோடகாமா சிறைச்சாலைக்குள் நுழைவதற்காக கெட்டவனாக இருந்து நல்லவராக நடிக்கும் வம்சி கிருஷ்ணாவும் கைதிகளாக
வாஸ்கோடகாமா சிறைக்குள் செல்கிறார்கள்.
தற்போது பலவிதமான தொழில் நுட்பங்களை வைத்து பலவிதமான முன்னேற்றங்களை கண்டு வரும் இந்த உலகம் எதிர்காலத்தில் நல்ல செயல்களில் ஈடுபடும் மக்களை குற்றவாளிகளாகவும், குற்ற செயல்கள் மற்றும் தீய செயல்களில் ஈடுபடுபவர்களை உத்தமர்களாகவும் பார்க்கப்படலாம், என்ற கற்பனை கதையை காமெடியாக சொல்வதே ‘வாஸ்கோடகாமா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த வாஸ்கோடகாமா திரைப்படத்தின் கதாநாயகனாக நட்பில் நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் நகுல் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் நகுல் எப்படி இந்த கதையை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை என
இந்த வாஸ்கோடகாமா திரைப்படத்தின் கதாநாயகியாக அர்த்தன பினு நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும்
அர்த்தன பினு, கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், பிரேம்குமார், படவா கோபி, சேசு என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ். சதீஷ்குமார் ஒளி பதிவின் மூலம் இந்தக் கதைக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.வி. அருணின் இசையில் பாடல்களும், மற்றும் பின்னணி இசை அனைத்தும் மகா மட்டமாக உள்ளது.
காமெடி கதைகளில் லாஜிக் இல்லை காமெடி லாஜிக் பார்க்க கூடாது என கூறுவார்கள், ஆனால் கதையையே பார்க்க கூடாது என்று யாரும் கூறவில்லையே புதிய கண்ணோட்டத்தில் இயக்குநர் ஆர்.ஜி.கே, கண்டபடி தேவையில்லாத ஒரு கதையை சொல்லி தமிழ் திரைப்பட ரசிகர்களை காமெடி என்ற பெயரில் கடுப்பேற்று இருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் எடுக்காமல் இருந்திருந்தால் ரசிகர்கள் தண்டனையில் இருந்து தப்பி இருப்பார்கள்.











