முடக்கறுத்தான் திரைவிமர்சனம் ரேட்டிங் 1.5/5.
நடிகர் & நடிகைகள் :- டாக்டர். கே. வீரபாபு, மஹானா, சூப்பர் சுப்பராயன், சமுத்திரக்கனி, மயில்சாமி, பாவா லட்சுமணன், சத்யா, முத்துகாளை, வைஷ்ணவி,
பேபி ஷாலினி ரமேஷ், தயாளன், சாம்ஸ், ‘காதல்’ சுகுமார், ரமேஷ், இந்திரஜித், வெங்கல் ராவ், சுமதி, அம்பானி சங்கர், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- டாக்டர் கே.வீரபாபு.
ஒளிப்பதிவாளர்கள் :- பாலாஜி ரங்கா – அருள்செல்வன்.
படத்தொகுப்பாளர் :- ஆகாஷ்
இசையமைப்பாளர் :- சிற்பி.
தயாரிப்பு நிறுவனம் :- வயல் மூவிஸ்
தயாரிப்பாளர் :- டாக்டர்.K.வீரபாபு.
ரேட்டிங் :- 1.5 /5.
கதாநாயகன் டாக்டர் கே.வீரபாபு, பலவகையான மூலிகைகளை தேடி பறித்து வியாபாரம் செய்து வருவதோடு, மட்டுமல்லாமல் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அந்த கிராமத்தில் தன் வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.
கதாநாயகன் டாக்டர் கே.வீரபாபு கற்கும் கதாநாயகி மஹானாவுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கு இரு வீட்டு பெரியோர்களால் நிச்சயம் செய்யப்படுகிறது..
தன் திருமணத்திற்காகவும் மற்றும் தான் பராமரித்து வரும் ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்களுக்கு புது துணி வாங்குவற்கு சென்னை செல்லும் கதாநாயகன் டாக்டர் கே.வீரபாபு, தனது உறவினரின் குழந்தையை காணாமல் போக அந்தக் குழந்தையை தேடும் முயற்சியில் இறங்குகிறார்.
இந்த நிலையில் குழந்தைகளை கடத்தி வாடகைக்கு மற்றும் பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கு பின்னணியில் மிகப்பெரிய அளவில் மாபியா கும்பல் இருப்பதை கதாநாயகன் டாக்டர் கே.வீரபாபு கண்டுபிடிக்கிறார்.
அந்த குழந்தை கடத்தல் மாஃபியா கும்பலிடம் இருந்து உள்ள அனைத்து குழந்தைகளை மீட்பதற்கான கதாநாயகன் டாக்டர் கே.வீரபாபு முயற்சியில் ஈடுபடுகிறார்.
குழந்தைகள் கடத்தல் மாபியா கும்பலின் பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் எப்படி இயங்குகிறது குழந்தைகளை எதற்காக கடத்துகிறார்கள்.
அந்த குழந்தை கடத்தல் மாஃபியா கும்பலால் கடத்தப்பட்ட குழந்தைகளை காப்பாற்றினார்? காப்பாற்றவில்லையா?
கடத்தப்படும் குழந்தைகளின் நிலை என்ன என்பதுதான் இந்த முடக்கறுத்தான் திரைப்படத்தின் மீதி கதை.
இந்த முடக்கறுத்தான் திரைப்படத்தில் கதாநாயகனாக மூலிகை மருத்துவர் டாக்டர் கே.வீரபாபு நடித்திருக்கிறார்.
டாக்டர் கே.வீரபாபு அவர்களுக்கு திரைப்படத் துறையில் தானும் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசை வந்தது தப்பில்லை.
ஆனால் திரைப்படத்துறையில் கதாநாயகன் ஆக வேண்டும் என்றால் அவருடைய மருத்துவர் இமேஜை கெடுத்துக்கொள்ளும் அளவிற்கு, கதாநாயகனாக முடக்கறுத்தான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இவர் கதாநாயகன் நடிக்காமல் இருந்தாலே இவரை கொரோனா தொற்றின் போது மூலிகை வைத்தியம் மூலம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றி ரியல் கதாநாயகனாக டாக்டர் கே.வீரபாபு பார்த்த மக்கள் இவர் கதாநாயகனா நடித்த முடக்கறுத்தான் திரைப்படத்தை பார்ப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.
இந்த முடக்கறுத்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக மஹானா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மஹானா ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலையைக் காட்டியிருக்கிறார்.
குழந்தைகளை கடத்தும் கொடூர
வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன் அதிரடியாக நடிப்பை காட்டி அசத்தி இருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சூப்பர் சுப்பராயன் இந்த வயதில்
டூப் இல்லாமல் சண்டைக்காட்சியில் நடிப்பில் வியக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கௌரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யா மிகவும் அருமையாக பெண்மை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரது கூட்டணி காமெடி சில காட்சிகளில் கடிக்கும் அளவிற்கு இருந்தாலும், சில காட்சிகளில் சிரிப்பு வெடியாகவும் மாறி இருக்கிறது.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மயில்சாமி மற்றும் மனைவியாக வரும் சுமதி வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா மற்றும் அருள் செல்வனின் ஒளிப்பதிவு மிகவும் சாதாரணமாக இருக்கிறது.
திரைப்படத்திற்கு கலர் கரெக்ஷன் செய்தார்களா? என்ற கேள்வி எழும் அளவுக்கு காட்சிகளில் ஒளிப்பதிவின் தரம் தெரிகிறது.
இசையமைப்பாளர் சிற்பியின் இசையில் பழநி பாரதியின் வரிகளில் அனைத்து பாடல்களும் சுமாராகத்தான் உள்ளது.
நல்ல ஒரு கதையை எடுத்துக் கொண்ட திரைக்கதையிலும் மற்றும் நடிகர் நடிகைகள் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
தமிழ் திரைப்படம் ஹாலிவுட் நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி எல்லாம் திரைப்படங்கள் வந்தால் கோடம்பாக்கத்தை தாண்டுமா கண்டிப்பாக தாண்டாது.
மொத்தத்தில் முடக்கறுத்தான் திரைப்படம் ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன்ட் இறந்துவிட்டார் என்பது போல் இருக்கிறது.











