செல்ல குட்டி திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- டாக்டர் டிட்டோ, மகேஷ், தீப்ஷிகா, சிம்ரன், சாம்ஸ், மதுமிதா, திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லக்ஷ்மி, புஷ்பதா, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சகாயநாதன்.
ஒளிப்பதிவாளர் :- பால் லிவிங்ஸ்டன், பாலா பழனியப்பன்.
படத்தொகுப்பாளர் :- புவன்.
இசையமைப்பாளர் :- சிற்பி,
டி.எஸ். முரளிதரன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீ சித்ரா பௌர்ணமி பிலீம் –
தயாரிப்பாளர் :- வி. மணிபாய்.
ரேட்டிங் :- 2./5.
கதாநாயகன் மகேஷ் மற்றும் அவருடைய நண்பர் டாக்டர் டிட்டோ,ர மற்றும் கதாநாயகி தீபிக்ஷா 1990- காலகட்டங்களில் ஒரே பள்ளியில் 12ஆம் வகுப்பு பிடித்து வருகிறார்கள்.
கதாநாயகன் மகேஷ் அப்பா அம்மா இல்லாத காரணத்தால் அவர் மீது கதாநாயகி தீபிக்ஷாவிற்க்கு இரக்கம் காட்டுவதால், அதை தன்னை காதலிக்கிறார் என நினைத்துக் கொண்டு கதாநாயகன் மகேஷ், கதாநாயகி தீபிக்ஷா ஒருதலையாக காதலித்து வருகிறார்.
ஆனால், கதாநாயகி தீபிக்ஷா கதாநாயகன் மகேஷின் நன்றாக இருக்கும் டாக்டர் டிட்டோவை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகன் மகேஷ் கதாநாயகி தீபிக்ஷாவிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என கூற அந்தக் காதலை, கதாநாயகி தீபிக்ஷா நிராகரித்து விடுகிறார்.
அந்தக் காதலை மட்டுமே நினைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாத கதாநாயகன் மகேஷ் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார்.
கதாநாயகன் மகேஷ்சுடன் படித்த அனைவரும் தேர்ச்சி பெற்று பொறியியல் பட்டம் பெற்று வாழ்க்கையில் முன்னேறி விடுகிறார்கள்.
இதற்கிடையே, கதாநாயகி தீபிக்ஷாவின் காதலித்து வரும் கதாநாயகன் டாக்டர் டிட்டோ அவரது வாழ்க்கை துணையாக அமைய வேண்டும் என காலம் நேரம் சூழ்நிலையை உருவாக்குகிறது.
ஆனால், தனது நண்பன் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துகொண்டு மிகப்பெரிய துரோகம், என கருதும் டாக்டர் டிட்டோ தீபிக்ஷாவை நிராகரித்து விடுகிறார்.
தான் ஆசைப்பட்டாலும், விருப்பம் இல்லாதவரை மணக்க கூடாது என்று கதாநாயகி தீபிக்ஷாவும் டாக்டர் டிட்டோவை வேண்டாம் என கூறி விட, அதன் பிறகு இவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் இந்த செல்ல குட்டி திரைப்படத்தின்
மீதிக்கதை.
இந்த செல்ல குட்டி திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகர்களாக நடித்திருக்கும் புதுமுக நடிகர்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பது மட்டுமல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இந்த செல்ல குட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக தீபிக்ஷா நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தீபிக்ஷா குடும்பத்து அழகிய முகத்தோடு, அளவான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ஈர்க்கிறார்.
மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் குறைவான காட்சிகளில் வந்தாலும், இன்னும் சற்று கூடுதலான காட்சிகளில் வந்திருக்கலாமே!, என தோன்றும் அளவிற்கு மிக அழகாக நடித்திருக்கிறார்.
கல்லூரி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மதுமிதாவும், ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாம்ஸ் சில இடங்களில் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்..
மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திடியன், சாப்ளின் சுந்தர், மணி, லட்சுமி, புஷ்பதா என அனைத்து நடித்திருக்கும் நடிகர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு முலம் கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் டி.எஸ். முரளிதரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் மெல்லிசையாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் சிற்பியின் பின்னணி இசை அதை ஓட்டத்திற்கு மிகவும் இனிமையாக பயணிக்கிறது.
முக்கோண காதல் கதையாக இருந்தாலும், ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் காதலை பலவிதமான திருப்பங்களுடன் பயணிக்க வைத்து, இறுதியில் இரு வேறு மனங்களிலும் ஒன்றாக பூப்பது தான் உண்மையான காதல், என்பதை கமர்ஷியலாகவும், இருக்கிறார் இயக்குனர் சகாயநாதன்.
மொத்தத்தில், இந்த ’செல்ல குட்டி’ திரைப்படம் தமிழக மக்கள் மனதில் வெல்லக்கட்டியாய் இனிக்க வேண்டும்.











