‘ஐந்தாம் வேதம்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :-  சாய் தன்சிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரன், கிரிஷா குருப், ராம்ஜீ, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- நாகா.

ஒளிப்பதிவாளர் :- ஸ்ரீனிவாசன் தேவராஜன்.

படத்தொகுப்பாளர் :- ரெஜீஷ். எம். ஆர்.

இசையமைப்பாளர் :- ரேவா.

தயாரிப்பு நிறுவனம் :- அபிராமி மெகா மால் பிரைவேட் லிமிடெட்.

தயாரிப்பாளர்கள் :-  அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன்.

ரேட்டிங் :- 3.75/5

1989கவாஹி  1991 பத்தர் கே பூல் இந்த இரண்டு திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக 1996களின் மர்மதேசம் என்ற தொலைக்காட்சி தொடரை இயக்கிய அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு ஆனந்தபுரத்து வீடு திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் இயக்குநராக அறிமுகமானார்.

இயக்குனர் நாகா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் தான் “ஐந்தாம் வேதம்”.

ஜீ5-ல் வரும் 25 ஆம் தேதி வெள்ளி முதல் இத்தொடர் ஸ்டிரீமாக இருக்கிறது.

காசியில் சென்று தன் தாயின்  அஸ்தியை கரைப்பதற்காக   சென்ற கதாநாயகி சாய் தன்ஷிகாவிடம், தங்கியிருந்த விடுதியில் சாமியார் ஒருவர் மரப்பெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, அதனை தமிழகத்தில் தென்கோடியில் உள்ள அய்யங்கார்புரம் என்ற கிராமத்தில் உள்ள கோவிலில் இருக்கும் அர்ச்சகரிடம் கொடுத்து விட வேண்டும் என சாமியார் கூறுகிறார்

உனது வம்சத்தைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமேதான் கொடுக்க வேண்டும் என்பது விதி என்று கூறி அதை கதாநாயகி சாய் தன்ஷிகாவின் கையில் அந்த மரப்பெட்டியை  கொடுத்தவுடன் அந்த சாமியார் கழுத்து அறுபட்டு இறந்து விடுகிறார்.

கதாநாயகி சாய் தன்ஷிகாவிடம் அந்த சாமியார் கொடுத்த  மரப்பெட்டியை வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக  எடுத்து கொண்டு தமிழகம் நோக்கி புறப்படுகிறார்.

காசியிலிருந்து புறப்பட்ட கதாநாயகி சாய் தன்ஷிகா பாண்டிச்சேரி செல்வதற்கு  திட்டமிடுகிறார்.

அதன் பிறகு நடைபெறும் திடீர் நிகழ்வுகள் கதாநாயகி சாய் தன்ஷிகாவிடம் அந்த சாமியார் மரப்பெட்டியை எந்தக்கோவிலில்  ஒப்படைக்க சொன்னாரோ  அந்தக் கோவில் உள்ள  அய்யங்கார்புரத்திற்கு அவர்களை அறியாமல்  வரவழைத்து விடுகிறது.

அய்யங்கார்புரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள அர்ச்சகரிடம்  கதாநாயகி சாய் தன்ஷிகா அந்த மரப்பெட்டியை கொடுக்கிறார்.

அய்யங்கார்புரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் உள்ள அர்ச்சகருக்கு அவர் தந்தை மூலம் அந்த மரப்பெட்டியைப் பற்றி ஏற்கனவே தெரிந்ததால் அந்த அர்ச்சகர், அந்த மரப்பெட்டியை  வாங்குவதற்கு மறுத்து விடுகிறார்.

அந்த மரப்பெட்டியை அந்த சிவன் கோவிலில் விட்டுவிட்டு அந்த ஊரை விட்டு உடனடியாக கிளம்ப நினைக்கிறார் கதாநாயகி சாய் தன்ஷிகா.

ஆனால், அய்யங்கார்புரத்தில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ள ஊரைவிட்டு  கதாநாயகி சாய் தன்ஷிகாவால் வெளியேற முடியவில்லை.

மர்மம் நிறைந்த அந்த மரப்பெட்டியை அடைய கும்பல் ஒன்று முயற்சிக்கின்றனர்.

ஐந்தாம் வேதம் என்றால் என்ன,? அந்த ஐந்தாம் வேதத்தை கண்டுபிடிப்பதற்கு தடையாக இருக்கும் கும்பல் யார்,?  அந்த மரப்பெட்டியில் இருக்கும் மர்மம் என்ன,? கதாநாயகி சாய் தன்ஷிகா அந்த மரப்பெட்டியை ஒப்படைத்தாரா?, ஒப்படைக்கவில்லையா,? என்பதுதான் ஐந்தாம் வேதம் இணைய தொடரின் மீதிக்கதை.

இந்த ஐந்தாம் வேதம் இணைய தொடரில் கதையின் நாயகியாக
சாய் தன்ஷிகா நடித்திருக்கிறார்.

கதாநாயகி சாய் தன்ஷிகா மார்டனாக வந்து தனது கதாப்பாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார்.

இந்த இணைய தொடரில் கதாநாயகி சாய் தன்ஷிகாவின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது.

அகோரி கதாபாத்திரத்தில் தோன்றிய நடன இயக்குனர் ராம்ஜியின் நடிப்பும் பாராட்டும் படியாக அமைந்திருக்கிறது.

இந்த ஐந்தாம் வேதம் இணைய தொடரில் நடித்திருக்கும்  சந்தோஷ் பிரதாப்,
விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரன், கிரிஷா குருப், தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன், அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து மிகவும்  இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜனின் ஒளிப்பதிவு மூலம் இந்த இணைய தொடருக்கு மிகப்பெரிய அளவில் பக்க பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ரேவா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் இந்த ஐந்தாம் வேதம் இணையத் தொடருக்கு மிகப்பெரிய அளவில் பலன் சேர்த்து உள்ளது.

புராணத்தையும் தற்போது வளர்ந்து வரும் ஏன்ற  தொழில்நுட்பமானது தவறான பாதைக்கு அழைத்து செல்லும் என்ற விஷயத்தையும் கற்பனை கலந்து இந்த ஐந்தாம் வேதம் இணைய தொடரில் அருமையாக இயக்குனர் நாகா  விளக்கியிருக்கிறார்.

புராணக் காலத்தில் உள்ள ஓலைச்சுவடி முதல் இன்று இருக்கும் கணினி வரை  இதுதான் என்னமோ விஞ்ஞானம் வளர்ச்சியா.? கதையை கையில் எடுத்து அதை மிகவும் நேர்த்தியாக திரைக்கதையில் மிக அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் நாகா.

மொத்தத்தில், இந்த ஐந்தாம் வேதம் இணையத் தொடர்– அருமையாக உள்ளது அனைவரும் கண்டு களிக்க வேண்டிய இணைய தொடர்.

error: Content is protected !!