’சூது கவ்வும் 2’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சிவா, ஹரிஷா ஜஸ்டின், கருணாகரன், வாகை சந்திர சேகர், MS பாஸ்கர், கவி,கல்கி, அருள் தாஸ், யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, ராதா ரவி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- எஸ் ஜே அர்ஜுன்.

ஒளிப்பதிவாளர் :- கார்த்திக் கே தில்லை.

படத்தொகுப்பாளர் :- இக்னேஷியஸ் அஸ்வின்.

இசையமைப்பாளர் :- எட்வின் லூயிஸ் விஸ்வநாத்- ஹரி எஸ்.ஆர்.

தயாரிப்பு நிறுவனம் :- திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் & தங்கம் சினிமாஸ்.

தயாரிப்பாளர்கள் :- சி வி குமார் & எஸ் தங்கராஜ்.

ரேட்டிங்:- 2.5./5.

கதாநாயகன் சிவா, மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஆள் கடத்தல் செய்து கொண்டு பணம் சம்பாதித்து எந்த நேரமும் சரக்கு அடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

தமிழக நிதி அமைச்சர் கருணாகரன், தமிழகத்தில் உள்ள ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, மட்டுமல்லாமல் தன் கட்சிக்கு ஏராளமான நிதிகளை பெற்றுக்கொடுப்பதிலும்  முதலிடத்தில் இருந்து வருகிறார்.

அதே சமயம் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் 60000 ஆயிரம் கோடி பணத்தை வரும் தேர்தலில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.

அதனால் தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாத முதல்வர், ராதாரவி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாகரனிடம் ஒப்படைக்கிறார்.

அதன்படி, வங்கியில் இருந்து கொடுக்கப்பட்ட டிவைஸ் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு பணத்தை கொடுக்க திட்டம் போடுகிறார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய திட்டமிடும் கருணாகரன் அதற்காக ரூ.60000 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்து, அந்த பணத்தை உடனடியாக மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு கருவியை வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்.

முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம் போல், கற்பனை காதலியுடன், கடத்தல் தொழில் செய்து வரும் கதாநாயகன் சிவா, தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது கதாநாயகன் சிவா தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்தி விடுகிறார்.

அதனால் அரசியலில் மட்டும் இன்றி தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும்
கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனுக்கு ஏற்ப்பட்ட மாற்றம் என்ன? என்பதுதான் இந்த ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார்.

கதாநாயகன் மிர்ச்சி சிவா குருநாத் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.

‘சூது கவ்வும்’ முதல் பாகத்தில் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி என்ன செய்தாரோ அதையே தான் இந்த சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் சிவா குருநாத் என்ற கதாபாத்திரத்தில் செய்திருக்கிறார்.

சூது கவ்வும் கதையின் மையப்புள்ளியான அருமை பிரகாசம் கதாபாத்திரத்தில் கருணாகரன், மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஆளும் கட்சி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி, வாகை சந்திரசேகர், அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அரசியல் மோதல்கள் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்கள்.

அருள்தாஸ், கல்கி, கவி, யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, கற்பனை பெண்ணாக நடித்திருக்கும் ஹரிஷா ஜஸ்டின் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை, ஒளிப்பதிவு மூலம் முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், முதல் பாகத்தை மனதில் வைத்தே காட்சிகளை மிக அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஷ்வநாத்தின் இசையில் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப மிகவும் அருமையாக பயணித்து
இருக்கிறார்.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை, அதன் முந்தைய தொடர்ச்சியாக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதியிருக்கும் கதையில், அரசியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் மிக்கதாக உள்ளது.

மொத்தத்தில், ‘சூது கவ்வும் 2’ முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் சுமாராக உள்ளது.

error: Content is protected !!