‘காத்துவாக்குல ஒரு காதல்’ திரைப்பட விமர்சனம்
ஒநடிகர் & நடிகைகள் :- மாஸ் ரவி, லட்சுமி பிரியா, மஞ்சுளா, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, சத்யா,பவர் ஸ்டார் சினிவாசன், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மிப்பு மொசக்குட்டி, சஞ்சனா சிங், பிரியதர்ஷினி, பிரியங்கா, ரோபோ சங்கர்,
மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- மாஸ் ரவி.
ஒளிப்பதிவாளர் :- ராஜதுரை & சுபாஷ் மணியன்.
படத்தொகுப்பாளர் :- கம்பம் மூர்த்தி & ராஜ்குமார்.
இசையமைப்பாளர் :- ஜிகேவி & மிக்கின் அருள்தேவ்.
தயாரிப்பு நிறுவனம் :- சென்னை புரொடக்ஷன்.
தயாரிப்பாளர்கள் :- எழில் இனியன், ராஜாத்தி எழில் இனியன்.
ரேட்டிங் :- 2.5./5.
வடசென்னையில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் கதாநாயகன் மாஸ் ரவி, சிறு வயது முதல் கதாநாயகி லட்சுமி பிரியாவை உருகி உருகிக் காதலித்து வருகிறார்.
வடசென்னை என்றாலே வெட்டு குத்து கொலை திருட்டு அனைத்து செயல்களும் ஈடுபடும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் பயணப்படும் கதாநாயகன் மாஸ் ரவி.
அந்தப் பகுதியில் உள்ள சாய் தீனா அப்பகுதி இளைஞர்கள் கையில் கத்தியைக் கொடுத்து இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்.
இந்த நிலையில் ஏரியா இளைஞர்கள் கையில் கத்தியை கொடுத்த சாய் தீனா மீது கோபம் அடையும் கதாநாயகன் மாஸ் ரவி அந்த ஏரியாவில் ‘மாஸ்’ எனும் அடைமொழியுடன் சாய் தீனாவை எதிர்க்கிறார்.
இருவரும் மோதல் முற்றும் தருவாயில் மாஸ் ரவியின் காதலை கதாநாயகி லட்சுமி பிரியா நிரந்தரமாக இழக்கிறாள்.
அதன் பின்பு, கதாநாயகன் மாஸ் ரவி கதாநாயகி லட்சுமி பிரியா இருவருடைய காதலும் காற்று வாக்கில் இருவரும் காதலில் இணைந்தார்களா? இஅலை இருவரும் இணையவில்லையா? என்பதுதான் காத்துவாக்குல ஒரு காதல் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘காத்துவாக்குல ஒரு காதல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக மாஸ் ரவி நடித்திருக்கிறார்.
இந்த ‘காத்துவாக்குல ஒரு காதல்’ திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி, சாதாரண மனிதராகவும் மற்றும் மிகப்பெரிய ரவுடிகளை எதிர்க்கும் அதிரடியான மனிதராகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த ‘காத்துவாக்குல ஒரு காதல்’ திரைப்படத்தில் மாஸ் ரவி கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிக்காமல் மற்ற நடிகர் நடித்திருந்தால் திரைபபடம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்த காத்து வாக்குல ஒரு காதல் திரைப்படத்தில், கதாநாயகியாக லட்சுமி பிரியா, நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சிரித்த முகத்தோடு மிகவும் அழகாக நமது பக்கத்து வீட்டு பெண் போல் மிக எளிமையாக இருந்தாலும், வலிமையான நடிப்பு மூலம் திரைப்படப் பார்க்கும் ரசிகர்களை எளிதில் மனதில் பதிந்து விடுகிறார்.
இந்த காத்து வாக்குல ஒரு காதல் திரைப்படத்தில், மற்றொரு கதாநாயகியாக மஞ்சுளா நடித்திருக்கிறார்
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் மஞ்சு நடிப்பில் எந்த ஒரு குறையும் இல்லாமல் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் மற்றும் சாய் தீனா நடிப்பு வழக்கத்தை விட கொஞ்சம் அதிகளவில் இருப்பதோடு, வித்தியாசமா நடிக்கிறோம் என்ற பெயரில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வெறுப்பேத்தி இருக்கிறார்கள்.
ஆதித்யா கதிர் மற்றும் தங்கதுரை வரும் காட்சிகள், கவுண்டமணி செந்தில் ஜோடி போல் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
கல்லூரி வினோத், சத்யா,பவர் ஸ்டார் சினிவாசன், கபாலி விஸ்வந்த், மேனக்சன் மிப்பு மொசக்குட்டி, சஞ்சனா சிங், பிரியதர்ஷினி, பிரியங்கா, ரோபோ சங்கர், என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியனின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தி திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள்.
இசைமைப்பாளர்கள் ஜிகேவி & மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
காதல் கதையை பல விதமான மர்ம திருப்பங்களுடன் முதல் பாதியில் காதலும், ரவுடிகளின் மோதலும் நிறைந்திருந்தாலும், இவை அனைத்தும் இந்த திரைப்படத்திற்கு பயனுள்ளதாக இல்லாதது நல்ல கதையை பலவீனமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் மாஸ் ரவி.
மொத்தத்தில், ‘காத்துவாக்குல ஒரு காதல்’ காதல்’ திரைப்படம் காதலும் மோதலும்.











