யோலோ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன், சுவாதி, திவாகர், கலைகுமார், நித்தி, சுப்பிரமணியன், தீபிகா, டீப்சன், கிரி துவாரகேஷ், மாதங்கி, கோவிந்த் ராஜ், பிரபு, பூஜா ஃபியா, கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ்.சாம்.
ஒளிப்பதிவாளர் :- சூரஜ் நல்லுசாமி.
படத்தொகுப்பாளர் :- ஏ.எல்.ரமேஷ்
இசையமைப்பாளர் :- சகிஷனா சேவியர்.
தயாரிப்பு நிறுவனம் :- எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ்.
தயாரிப்பாளர் :- மகேஷ் செல்வராஜ்.
ரேட்டிங் :- 2.5./5.
கதாநாயகன் தேவ் நண்பர்களுடன் இணைந்து யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்
அந்த யூட்யூப் சேனலில் அடிக்கடி கதாநாயகன் தேவ் பிராங்க் வீடியோ வெளியிடுகின்றன.
கதாநாயகி தேவிகா தன்னுடைய தந்தை படவா கோபியின் சொல்லை மீறாமல் மதித்து அவர் சொல்படியே நடக்கிறார்.
கதாநாயகி தேவிகாவிற்க்கு தந்தை படவா கோபி மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கதாநாயகி தேவிகாவை பெண் பார்க்க வரும் விஜே நிக்கிக்கு, கதாநாயகி தேவிகாவை பிடித்துப் போகிறது.
ஆனால் விஜே நிக்கியின் குடும்பத்தினர் கதாநாயகி தேவிகாவிற்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது ஏற்கனவே திருமணம் நடந்த பெண்ணை எங்கள் குடும்பத்தில் தள்ளப் பார்க்கிறீர்களா என்று மாப்பிள்ளை வீட்டார் கேட்க அதிர்ச்சியாக ஒரு தகவலை கூறிவிட்டு செல்கிறார்கள்.
கதாநாயகன் தேவுக்கும் கதாநாயகி தேவிகாவிற்க்கும் அவர்கள் இருவருக்கும் தெரியாமல் திருமணம் நடந்து அந்தத் திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கதாநாயகன் தேவுக்கும் கதாநாயகி தேவிகாவிற்க்கும் இவர்கள் இருவருக்கும் தெரியாமல் எப்படி திருமணம் நடந்தது? என்பதுதான் இந்த யோலோ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த யோலோ திரைப்படத்தில் புதுமுக கதாநாயகனாக தேவ் நடித்திருக்கிறார்.
புதுமுக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் தேவ் மிகவும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நமக்கு ஒரு அழகான பெண்ணுடன் திருமண நடந்து விட்டது என ஆச்சரியத்தில் ஆழ்ந்த போகும் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் ஏற்கனவே பல படங்கள் எடுத்த நடிகர்கள் போல் நடித்திருக்கிறார்.
இந்த யோலோ திரைப்படத்தில் கதாநாயகியாக தேவிகா நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தேவிகா மிகவும் அழகாக வந்து நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
காமெடி கதாபாத்திரத்தில் விஜே நிக்கி செயற்கையான நடிப்பை கொடுத்து காமெடி செய்து சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்கிறார்.
கதாநாயகி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படவா கோபி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன், சுவாதி, திவாகர், கலைகுமார், நித்தி, சுப்பிரமணியன், ஆகாஷ் பிரேம்குமார், தீபிகா, டீப்சன், கிரி துவாரகேஷ், மாதங்கி, கோவிந்த் ராஜ், பிரபு, பூஜா ஃபியா, கோபாலகிருஷ்ணன் அனைவரும் கொடுத்த வேலை மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிகவும் கலர் ஃபுல்லாக காட்சிகள் அனைத்தையும் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
இசையமைப்பாளர் சகிஷனா சேவியர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
கதாநாயகன் கதாநாயகி இருவருக்கும் அவர்களுக்கே தெரியாமல் பொய்யாக திருமணம் எப்படி நடந்தது என உண்மையிலேயே காதலராக மாறுவார்கள் என்பது மட்டும் ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது.
இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று இருவரும் விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்து நிற்பது ட்விஸ்ட் வைத்து மிக அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.சாம்.
மொத்தத்தில் யோலோ திரைப்படம் பொழுது போகும் வகையில் ஒருமுறை பார்க்கலாம்.











