‘வேடுவன்’ இணையத் தொடர் விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஶ்ரீ காந்த், ஐஸ்வர்யா ரகுபதி, விணுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- பவன் குமார்.

ஒளிப்பதிவாளர் :- சீனிவாசன் தேவராஜ்.

படத்தொகுப்பாளர் :- எஸ்.சுராஜ் கவி.

இசையமைப்பாளர் :- விபின் பாஸ்கர்.

தயாரிப்பு நிறுவனம் :-  ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்.

தயாரிப்பாளர் :- ஸ்ரீநிதி சாகர், சாகர் பெண்டேலா.

ரேட்டிங் 3.5./5.

தமிழ் திரைப்பட உலகில் மிகப் பெரிய அளவில் கதாநாயகனாக இருக்கும் கதாநாயகன் கண்ணா ரவி சமீபத்திய அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி அடையவே சமூக வலைத்தளம் மீது மிகவும் கோபத்தில் இருக்கிறார்.

அனைத்து திரைப்படத்தின் கதையிலும் மூக்கை நுழைத்து அவர் கதையைக் கெடுப்பதும் அவரது தோல்விக்கு ஒரு காரணம் என்ற கருத்து சமூக வலைதளங்களில் இருந்து வருகிறது . 

இந்த நிலையில் கதாநாயகன் கண்ணா ரவிக்கு ஒரு இயக்குநர் கதை சொல்ல வருகிறார்.

இந்த கதை ஒரு என்கவுண்டர் காவல்துறை அதிகாரியின் உண்மை கதை என கூறுகிறார்.

அந்த கதையை கதாநாயகன் கண்ணா ரவி கேட்க ஆரம்பித்த சில நிமிடங்களில் கேட்ட கதை பிடித்து போகவே இந்த திரைப்படத்தில் நான் கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என ஒத்துக் கொள்கிறார்.

கதைப்படி, கதாநாயகன் கண்ணா ரவி ரகசிய காவல்துறை அதிகாரியாக பயணித்து மிகப்பெரிய தாதாவான ஒருவரை என்கவுண்டர் செய்ய வேண்டும் என காவல்துறை ஆணையர் உத்தரவிடுகிறார்.

அந்த மிகப்பெரிய தாதாவான ஒருவரை பீச்சில் பிச்சைக்காரனாக அலைந்து என்கவுண்டர் செல்கிறார்.

முதல் என்கவுண்டர் வெற்றி பெறவே இரண்டாவது என்கவுண்டராக முன்னாள் தாதா சஞ்சீவை என்கவுண்டர் செய்ய காவல்துறை ஆணையர் உத்தரவிடுகிறார்.

இரண்டாவது என்கவுண்டர் கான முயற்சியில் கதாநாயகன் கண்ணா ரவி ஈடுபடும் போது, அவர் என்கவுண்டர் செய்ய உள்ள சஞ்சீவ், தனது முன்னாள் காதலி கதாநாயகி வினுஷா தேவியின் கணவர் என்பது தெரிய வருகிறது.

அதே சமயம், சஞ்சீவ் ஒரு காலத்தில் தாதாவாக இருந்திருந்தாலும், தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு தன் ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் மனிதராக இருப்பதை கதாநாயகன் கண்ணா ரவி உணர்கிறார்.

இந்த நிலையில், தனது அதிகாரி காவல்துறை ஆணையர் கொடுக்கப்பட்ட பணியை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கும் கதாநாயகன் கண்ணா ரவி, தான் திட்டமிட்டபடி சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா ? சஞ்சீவை என்கவுண்டர் செய்யவில்லையா? என்பதுதான் இந்த வேடுவன் இணைய தொடரின் மீதிக்கதை.

இந்த வேடுவன் இணையத் தொடரில் கதாநாயகனாக கண்ணா ரவி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் கண்ணா ரவி ஒரு நடிகர் என்பதால் பலவித கதாபாத்திரங்கள் போட கூடிய வாய்ப்பு இந்த இணையத் தொடரில் கண்ணா ரவிக்கு கிடைத்திருக்கிறது.

காவல்துறை அதிகாரி, பிச்சைக்காரர், சமையல்காரர் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக தன்னை பொறுத்திக் கொண்டு கதாநாயகன் கண்ணா ரவி, நடிப்பில் மிகப்பெரிய அளவில் அசத்தியிருக்கிறார்.

அதிகாரி நமக்கு கொடுக்கப்பட்ட கடமையா ? அல்லது தன்னுடைய மனசாட்சியா ? என குழம்பும் காட்சியில் தன்னுடைய நடிப்பின் மூலம் தடுமாற்றத்தை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஆதிநாதன் என்ற தாதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சீவ், தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா என பெண் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களது நடிப்பை மிகவும் சிறப்பாக செய்து உள்ளார்கள். 

ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் விபின் பாஸ்கரின் இசையில் பாடல்கள் பின்னனி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

வித்தியாசமான கதை சொல்லல் மூலம் புதுவிதமான ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் தொடரை மிகவும் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் பவன் குமார்.

மொத்தத்தில், ‘வேடுவன்’ இணையத் தொடருக்கு பாஸ் மார்க் போட வைத்துவிட்டது.

error: Content is protected !!