‘மகாசேனா’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், ஆல்பிரட் ஜோஸ், சிவ கிருஷ்னா, சுபாங்கி ஜா, இலக்கியா, விஜய் செயோன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தினேஷ் கலைசெல்வன்.

ஒளிப்பதிவாளர் :- டி.ஆர். மானஸ் பாபு.

படத்தொகுப்பாளர் :- நாகூரான் ராமச்சந்திரன்.

இசையமைப்பாளர்கள் :- A.பிரவீன் குமார்
பின்னணி இசை – உதய் பிரகாஷ் U P R.

தயாரிப்பு நிறுவனம் :- மருதம் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- டாக்டர் செல்வராஜு.

ரேட்டிங் :- 2./5.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த கதாநாயகன் விமல் மனைவி கதாநாயகி சிருஷ்டி டாங்கே, மகள் இலக்கியா, மற்றும் சேனா என்ற யானையை வளர்த்துக்கொண்டு அந்த மலை கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த மலைக்கிராமத்தில் உள்ள யாளிஷ்வரன் கோவிலில் இருக்கும் சிலையை  வனத்துறை அதிகாரியான ஜான் விஜய், மற்றும் மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்களை வைத்து யாளிஷ்வரன் கோவிலில் இருக்கும் சிலையை எப்படியாவது கடத்த வேண்டும் என திட்டமிடுகிறார்.

இதற்கிடையே கதாநாயகன் விமல் மகனைப் போல் வளர்த்துக் கொண்டிருக்கும் சேனா என்ற யானைக்கு மதம் பிடித்து போகவே அவருடைய மகள் இலக்கியாவை தாக்கி கொன்றுவிட்டு காட்டுக்குள் ஓடிவிடுகிறது.

தனது மகள் இலக்கிய இறந்த சோகத்திலிருந்து சிலநாட்கள் கழித்து சேனா என்ற யானையை தேடி கதாநாயகன் விமல் மற்றும் நன்பர்கள் வனத்துறை அதிகாரிகள் காட்டுக்குள் ட செல்கிறார்கள்.

காட்டுக்குள் ஓடிப்போன சேனா என்ற யானையை கதாநாயகன் விமல், கண்டுபிடித்தாரா?,  கண்டு பிடிக்கவில்லையா?, 

யாளி மலையில் உள்ள யாளிஷ்வரன் கோவிலில் இருக்கும் சிலையை கடத்துவதற்கு முயற்சி செய்யும் வனத்துறை அதிகாரி ஜான் விஜய் மற்றும் மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடியினர் கடத்தல் திட்டத்தை கதாநாயகன் விமல் முறியடித்தாரா?, முறியடிக்க வில்லையா?, என்பதுதான் இந்த ‘மகாசேனா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
 
இந்த ‘மகாசேனா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் விமல் கதையின் நாயகனாக இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக இருக்கிறார்.

பழங்குடி இனத்தை சேர்ந்தவராக நடித்திருக்கும் விமல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவராக  கதாபாத்திரத்திற்கு சிறிதும் எள்ளளவு கூட மெனக்கெடாமல் வழக்கம் போல் நடித்திருக்கிறார்.

இந்த ‘மகாசேனா’  திரைப்படத்தில் கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே, நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, வீர பெண்ணாக கம்பீரமான கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தாலும், வீரத்தை வெளிக்காட்ட வேண்டிய காட்சிகளில் பெண்களின் மானத்திற்கு போராடும் நிலையில் கூட வீரத்தை வெளி காட்டாமல் நடித்திருக்கிறார்.

சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு  நகைச்சுவை காட்சிகள் அனைத்துமே திரைப்படத்திற்கு எள்ளளவு கூட எடுபடவில்லை.

வனத்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் ஓவராக  கோமாளித்தனமாக  நடித்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபாங்கி ஜா, கதாநாயகன் விமல் மகள அல்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி இலக்கியா அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர், ஒளிப்பதிவு மூலம்  திரைப்படத்தின் தரத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறார்.
 
இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் அனைத்துமே சுமாராக உள்ளது.

இசையமைப்பாளர் உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிக சிறப்பாக பயணித்திருக்கிறார். 

திரைப்படத்தின் தலைப்பு கவனம் ஈர்த்தாலும் கதை மற்றும் திரைக்கதை  காட்சியமைப்புகள் அனைத்தும் எந்தவிதத்திலும் ரசிகர்களை  ஈர்க்க வில்லை.
 
சொல்ல வந்த கதையை எந்த ஒரு தெளிவும் இல்லாமல் காட்சி அமைப்புகள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பயன்படுத்தாமலும் நாயகனையும் பயன்படுத்தாமலும் சரியான முறையில இந்தத் திரைப்படத்தை கையாள தவறியிருக்கிறார் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன்.

மொத்தத்தில், ‘மகாசேனா’ ஒருமுறை பார்க்கலாம்.

error: Content is protected !!