’ஆழி’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- சரத்குமார், தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, இந்திரஜித் ஜெகஜித், பிர்லா போஸ், சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மாவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா. மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- மாதவ் ராம தாசன்.

ஒளிப்பதிவாளர் :- ஆனந்த் என் நாயர்.

படத்தொகுப்பாளர் :- கே.ஸ்ரீனிவாஸ்.

இசையமைப்பாளர் :- ஜாசி கிஃப்ட்.

தயாரிப்பு நிறுவனம் :- 888 புரொடக்ஷன்ஸ், &  செல்லுலாய்டு கிரியேஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- சஜித் கிருஷ்ணன்.

மக்கள் தொடர்பு :- நிகில் முருகன்.

ரேட்டிங் :-  2.5./5.

மீன்பிடிக்கும் படகுகள் மெக்கானிக் பணியில் இருக்கும் சரத்குமார், மெக்கானிக் வேலையை பகுதி நேரமாக செய்து கொண்டு, போதைப் பொருள் விற்பனை, மற்றும் ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் செய்து வருகிறார்.

இதற்கிடையே, கல்லூரியில் படித்து வரும் சரத்குமாரின் ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும் மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தை இருவரும் காதலிக்கிறார்கள்.

வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித் மற்றும் தேவிகா சதீஷ் காதலிக்கும் விஷயம் சரத்குமாருக்கு தெரிய வரும் நிலையில் கோபம் கொள்ளும் அவர் இந்திரஜித் ஜெகஜித்தை ஆழ்கடலில் இருக்கும் தனது படகுக்கு அழைத்து சென்று விடுகிறார்.

ஆழ்கடலுக்கு நடுவில் வைத்து இந்திரஜித் ஜெகஜித் கொலை செய்ய திட்டமிடும் நிலையில் சரத்குமாரிடம் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு  பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திரஜித் ஜெகஜித், சரத்குமாரிடம் இருந்து உயிர் தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் இந்த ஆழி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஆழி திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார்.

தேவிகா சதீஷ் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமார்  புதிதல்ல என்றாலும், அதில் முடிந்தவரை  பாசக்கார தந்தை ஒரு பக்கம் என்றால்,  மறுபக்கம் கொடூரமான வில்லனாக, மிகவும் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

கதாபாத்திரத்திற்கு, வேறுபாடு வேண்டும் என்பதால் அதிகளவில் தலைமுடி, தாடி என்று கதாபாத்திரத்தின் வேறுபாட்டை காட்டியிருந்தாலும், அது பெரிதாக எடுபடவில்லை.

இளம் நாயகனாக நடித்திருக்கும் இந்திரஜித் ஜெகஜித், வித்தியாசமான தோற்றத்தில், கதாபாத்திரத்திற்கு  கொஞ்சம் கூட ஒட்டாமல் நடித்திருக்கிறார்.

மரண பயத்தை காட்டிய காதலி தேவிகா சதீஷ் தந்தை சரத்குமாரிடம்  இருந்து தப்பிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள்  அனைத்தும் விறுவிறுப்பு அவருடைய நடிப்பில் இருந்திருந்தால்  மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்.

சரத்குமாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவிகா சதீஷ், இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார்.

சரத் குமார் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ், மிகப்பெரிய அளவில் திரைப்படத்தில் வேலை குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் நின்று விடுகிறார்.

மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரை செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜு மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா ஆகியோர்  சிறு கதாப்பாத்திரங்களில் தலை காட்டியது தவிர திரைக்கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒளிப்பதிவாளர் ஆனந்த் என்.நாயர், ஒளிப்பதிவு மூலம்  காட்சிகளை அனைத்து மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் ஒகே ரகம்.

இசையமைப்பாளர் வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.

ஆழ்கடலில் நடக்கும் மீன்பிடி படகு ஒன்றில் கதை மற்றும் திரைக்கதை நடப்பதும்    அதில் இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களுக்கு இடையிலான மனம் மற்றும் உடல் ரீதியான போராட்டங்களை வைத்துக் கொண்டு இந்த திரைப்படத்தை இரண்டு மணி நேரம் மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் மாதவ் ராமதாசன்

மொத்தத்தில், ‘ஆழி’  திரைப்படத்தில் உள்ள திரைக்கதையில் ஆழம் அதிகமாக இல்லை.

error: Content is protected !!