“அலங்கு” திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத், சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்ஷா, மஞ்சுநாதன், தர்மலிங்கம், ஆவுடை நாயகம், அப்புனி சசி, தீபம் பிலிபோஸ், அற்புதநாத், கங்காதரணி, சக்தி, குமார், ஜோஃபி, ஆனந்த், கலை, தசரதன், கிரிஷ், நிரோஷா, அர்ச்சனா, தீதன், ரென்ஸி, ம.இலையமாறன், சரவணபுதியவன், மதுரவீரன், தாமரை, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- எஸ் பி சக்திவேல்.
ஒளிப்பதிவாளர் :- பாண்டிக்குமார்.
படத்தொகுப்பாளர் :- சான் லோக்கேஷ்.
இசையமைப்பாளர் :- அஜீஷ்.
தயாரிப்பு நிறுவனம் :- DG பிலிம் கம்பெனி, மேக்னஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- சபரிஷ், சங்கமித்ரா செளமியா அன்புமணி.
ரேட்டிங் :- 3.5./5
கோவை மாவட்டம் அருகில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் கதாநாயகன் குணாநிதி தனது தாய் ஸ்ரீரேகா மற்றும் தங்கையோடு அங்குள்ள மலைக்காட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
தனது மகன் கதாநாயகன் குணாநிதியின் தாய் ஸ்ரீரேகா வட்டிக்கு கடன் வாங்கி டிப்ளமோ வரை படிக்க வைக்கிறார்.
ஆனால், கல்லூரியில் சில காரணங்களுக்காக கதாநாயகன் குணாநிதியை சஸ்பெண்ட் செய்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் கதாநாயகன் குணாநிதி சாக கிடந்த ஒரு நாயை காப்பாற்றி தன்னுடனே வளர்த்து வருகிறார்
இந்த சூழலில், கடன் கொடுத்தவர் பணம் கேட்டு தனது தாயை மிரட்ட, இதனால் கதாநாயகன் குணாநிதி தனது நண்பர்களுடன் வளர்த்த அந்த நாயையும் தன்னுடனே அழைத்து கொண்டு கேரளாவில் உள்ள லப்பர் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்கிறார்.
கேரளாவில் கதாநாயகன் குணாநிதி வேலைக்குச் செல்லும் ரப்பர் தோட்டத்தின் முதலாளியாக இருக்கும் செம்பன் வினோத். சிறு வயதில் முதல் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, பெரும் பணக்கரணாகி அப்பகுதியின் நகராட்சி தலைவராக இருக்கிறார்.
ரப்பர் தோட்டத்தின் முதலாளியாக இருக்கும் செம்பன் வினோத்க்கு திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்த ஒரு பெண் குழந்தை மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார்.
பல வருடங்களுக்கு பிறகு பிறந்த தனது செல்ல மகள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் செம்பன் வினோத்.
செம்பன் வினோத் வீட்டில் வைத்து நாய் ஒன்று தனது செல்ல மகளை பிறந்தநாள் அன்று கடித்து கொதறி விட, இதனால் கோபம் கொண்ட செம்பன் வினோத், தனது ஆட்களை கூப்பிட்டு அந்த ஏரியாவில் ஒரு நாயும் இருக்கக் கூடாது அனைத்தையும் கொன்று விடுமாறு கூறுகிறார்.
செம்பன் வினோதின் அடியாட்களும் இந்த ஏரியாவில் உள்ள கையில் கிடைக்கும் நாய்கள் அனைத்து நாய்களையும் கொன்று குவிக்க கதாநாயகன் குணாநிதியின் நாயையும் பிடித்துச் செம்பன் வினோத்தின் ஆட்கள் பிடித்து சென்று விட்டார்கள்.
கதாநாயகன் குணாநிதியின் நாயை கண்டுபிடித்தார்களா?, கண்டு பிடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த “அலங்கு” திரைப்படத்தில் மீதிக்கதை.
இந்த அலங்கு திரைப்படத்தில் கதையின் நாயகனாக குணாநிதி நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் குணாநிதி, இதற்கு முன்பு செல்ஃபி திரைப்படத்தில் கதாநாயகன் ஜிவி பிரகாஷின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.”
இந்த “அலங்கு” திரைப்படம்தான் குணாநிதி முதல்முறையாக கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் குணாநிதிக்கு முதல் திரைப்படத்தில் நடிப்பது போல் இல்லாமல், இந்த “அலங்கு” திரைப்படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை அளவான நடிப்பை கொடுத்து ஜொலித்திருக்கிறார்
ஐந்தறிவு ஜீவன் நாய் மீது வைத்திருக்கும் பாசமாக இருக்கட்டும், தனது தாய் மற்றும் தங்கை மீது வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டும் காட்சிகளாக இருக்கட்டும், இறுதிக்கட்ட காட்சிகளில் பேசும் எனக்கு இரண்டு உயிரும் ஒன்றுதான் என வசன உச்சரிப்பாக இருக்கட்டும் பல காட்சிகளில் ஆச்சரியம் கொடுக்கும் அளவில் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் கதையின் நாயகன் குணாநிதி.
குணாநிதியை தமிழ் திரைப்பட உலகில் நிச்சயம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மலையாள திரைப்பட உலகில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருக்கும் செம்பன் வினோத், தன் மகள் மீது பாசம் வைப்பதும் மற்றும் தனது கண் பார்வையிலேயே தனது கதாபாத்திரத்தின் நடிப்பின் மூலம் உச்சத்தை தொட்டு விடுகிறார்.
இந்த கதாபாத்திரத்திற்கு எந்த ஒரு அளவிற்கு நடிப்பை கொடுக்க வேண்டுமோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார்.
இந்த “அலங்கு” திரைப்படத்தில் மிகவும் ஆச்சர்யப்பட வைத்தவரும் அசர வைத்தவரும மலையாள திரைப்பட நடிகை ஸ்ரீரேகா மட்டும்தான்.
கதையின் நாயகன் தாயாக மிரட்டலான லுக், ஆக்ரோஷமான வசனம், எதற்கும் துணிந்தவராகவும், வேகம் என தங்கம் என்ற கதாபாத்திரத்தை உயிர் கொடுத்து மிரட்டலான நடிப்பை கொடுத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் நடிப்பில் மூலம் மிரள வைத்திருக்கிறார்.
மேலும், கதையின் நாயகனின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள், கதையின் நாயகன் மாமாவாக நடித்த காளி வெங்கட் மற்றும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்முகம் முத்துசாமி, திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களில் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
செம்பன் வினோத்தின் வலது கையாக வரும் சரத் அப்பாணி, மிகவும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பாண்டிக்குமாரின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் நடக்கும் சண்டைக் காட்சி லைட்டிங் அனைத்தும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகவும் அருமையாக பயணித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பாண்டிக்குமாரின் ஆனைக்கட்டி மற்றும் கேரளாவின் பசுமையும் மிகவும் அழகாகவும் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கும்படியான ஒளிப்பதிவையும் கொடுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அஜீஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே திரைப்படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்திருக்கிறது.
இந்த பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் ஒன்று தான் என்ற ஒற்றை வார்த்தையை வைத்து, கொண்டு முழு திரைப்படத்திற்கும் உயிர் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்து மிகவும் அருமையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பி சக்திவேல்.
மொத்தத்தில் – “அலங்கு” திரைப்படம் நாய்களை கண்டால் ஒதுங்கிச் செல்லும் ஆறறிவு ஜீவன்கள் கூட, திரைப்படத்தை பார்த்தால் ஐந்தறிவு ஜீவன்கள் மீது அளவு கடந்த அன்பையும் கொடுப்பார்கள்.