அமீகோ கேரேஜ் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ‘மாஸ்டர்’ மகேந்திரன், ஜி.எம்.சுந்தர், ஆதிரா ராஜ், தீபா பாலு, தாசரதி நரசிம்மன், முரளிதரன் சந்திரன், உதயா, மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பிரசாந்த் நாகராஜன்.
ஒளிப்பதிவாளர் :- விஜயகுமார் சோலைமுத்து.
படத்தொகுப்பாளர் :- ரூபன் – சிஎஸ் பிரேம்குமார்.
இசையமைப்பாளர் :- பாலமுரளி பாலு.
தயாரிப்பு நிறுவனம் :- பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ்.
தயாரிப்பாளர்கள் :- முரளி ஸ்ரீனிவாசன், ராமச்சந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஸ்வின் குமார் வி.ஜி.
கதாநாயகன் மகேந்திரன் பள்ளி பருவத்தில் இருந்து தன்னுடைய நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு ஜாலியாக ஊர் சுத்தி கொண்டிருக்கிறான்.
ஒரு நாள் பள்ளியில் ஆசிரியர் கதாநாயகன் மகேந்திரனை அடித்துவிடுவதால் வருத்தப்பட்டு, அதே ஏரியாவில் கேரேஜ் வைத்துக் கொண்டு போதை பொருள் விற்று வரும் ஜி.எம்.சுந்தரிடம் போய் ஆசிரியர் தன்னை அடித்ததாக கூறுகிறான்.
ஜி.எம்.சுந்தர் அந்த ஆசிரியரை தூக்கி வந்து கேரேஜ்யில் வைத்து அடித்து உதைக்கிறார்.
இந்த நிலையில் ஜி.எம்.சுந்தருடன் கதாநாயகன் மகேந்திரனுக்கு மிகவும் நெருங்கிய பழக்கம் ஏற்படுகிறது.
அடிக்கடி ஜி.எம்.சுந்தர் இருக்கும் கேரேஜ்க்கு கதாநாயகன் மகேந்திரனை அடிக்கடி சென்று வருகிறார்.
அதே ஊரில் மிகப்பெரிய பெரிய தாதா முரளிதரன் சந்திரன் தம்பியான தாசரதி நரசிம்மன், ஒரு நாள் பாரில் மது அருந்திவிட்டு வரும் தாசரதி நரசிம்மனுடன் கதாநாயகன் மகேந்திரனுக்கு சிறு தகராறு ஏற்பட அவரை அடித்து விடுகிறார்.
பாரில் மது போதையில் நடந்த அந்தத் தகராறு மிகப் பெரிய அளவில் முற்றி பழி வாங்குவதற்காக இருவரும் வெறித்தனமாக இருந்து வருகிறார்கள்.
கதாநாயகன் மகேந்திரனை எப்படியாவது தாசரதி நரசிம்மனை தீர்த்து கட்ட வேண்டும் என திட்டம் போடுகிறார்.
இறுதியில் மிகப்பெரிய பெரிய தாதா முரளிதரன் சந்திரன் தம்பியான தாசரதி நரசிம்மன், கதாநாயகன் மகேந்திரனை பழி வாங்கினாரா? பழிவாங்கவில்லையா? தாதா முரளிதரன் சந்திரன் தம்பியான தாசரதி நரசிம்மனிடம் இருந்து கதாநாயகன் மகேந்திரன் உயிர் தப்பித்தாரா? உயிர் தப்ப வில்லையா? என்பதுதான் இந்த அமிகோ கேரேஜ் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அமீகொ கேரேஜ் திரைப்படத்தில் கதாநாயகனாக மாஸ்டர் மகேந்திரன் நடித்திருக்கிறார்.
இந்த அமீகோ கேரேஜ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன், காதல், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்திலும் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த அமீகோ கேரேஜ் திரைப்படத்தில் கதாநாயகியாக அதிரா ராஜ் மற்றும் தீபா பாலு இருவரும் நடித்திருக்கிறார்.
இந்த அமீகோ கேரேஜ் திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடித்து இருக்கும் அதிரா ராஜ் மற்றும் தீபா பாலு ஆகியோருக்கு திரைப்படத்தில் பெரியதாக நடிப்பதற்கு ஒன்றும் வேலை இல்லை.
அமீகோ கேரேஜ் முதலாளியாக வரும் ஜி.எம்.சுந்தர், சிறு வயது பசங்களை கூட வைத்துக் கொண்டு மிகவும் ஜாலியாக நடித்து இருக்கிறார்.
குரு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாசரதி நரசிம்மன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பின் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.
இவரது நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலமாக அமைந்துள்ளது.
தாசரதி நரசிம்மன் ஏற்கனவே வெளியான சினம் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.
இவரது உடலமைப்பு, பார்க்கும் பார்வை மிகவும் கூர்மையாக அமைந்து இருக்கிறது.
தமிழ் திரைப்பட உலகிற்கு தாசரதி நரசிம்மன் ஒரு மிரட்டலான வில்லன் ஒருவர் கிடைத்திருக்கிறார்.
இந்த அமீகோ மேரேஜ் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
அறிமுக ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவு மூலம் சிறப்பு சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவின் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவின் பின்னணி இசை திரைப்படத்தின் ஓட்டத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
கதாநாயகன் மகேந்திரனின் பள்ளி பருவம், கல்லூரி பருவம் , வாலிபர் என வித்தியாசம் காண்பிக்காமல் திரைப்படத்தை இயக்கியிருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.
இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கொலை கொள்ளை கற்பழிப்பு என அதிகமான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என போதையினால் ஒரு சாதாரண இளைஞன் நியாயமான கோபத்தால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து இந்த அமிகோ கேரேஜ் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன்.
மொத்தத்தில் இந்த அமீகோ கேரேஜ் போதை வஸ்துகளால் பாதிக்கப்படும் இளைஞர்களைப் பற்றிய திரைப்படம் கண்டிப்பாக பார்க்கலாம்.











