அந்தகன் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பிரஷாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, K.S.ரவிகுமார், ஊர்வசி, யோகி பாபு, மனோ பாலா, வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், செம்மலர், பூவையார், பெசன்ட் நகர் ரவி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- தியாகராஜன்.
ஒளிப்பதிவாளர் :- ரவி யாதவ்.
படத்தொகுப்பாளர் :- சதிஷ் சூரியா.
இசையமைப்பாளர் :- சந்தோஷ் நாரயணன் .
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்டார் மூவிஸ்.
தயாரிப்பாளர்கள் :- பிரீத்தி தியாகராஜன், சாந்தி தியாகராஜன்,
ரேட்டிங் :- 4.25/5.
இந்தி திரைப்பட உலகில் அக்டோபர் 05 2018ஆம் ஆண்டு வெளியாகி இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் தமிழில் மொழிமாற்றம் செய்து ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று வெளிவரும் “அந்தகன்” திரைப்படத்தில் கதாநாயகனாக டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிப்பில் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ளது.
இந்த அந்தகன் திரைப்படத்தை இயக்குனர் நடிகர் தியாகராஜன் மிக பிரமாண்டமாக இயக்கி தயாரித்திருக்கிறார்.
பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என ஆசைப்படும் கதாநாயகன் பிரசாந்த், பார்வையற்ற இளைஞனாக லண்டனுக்கு சென்று பியானோ வாசிக்க வேண்டும் என மிகப் பெரிய லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார்.
அதன் பிறகு பார்வையற்ற இளைஞனாக இருக்கும் கதாநாயகன் பிரசாந்த் ஒரு பியனோ இசை கலைஞராக இருக்கும் இவர் சிலருக்கு பியானோ கற்றுக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் சம்பாத்தியத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்.
ஒரு நாள் ரோட்டை கிராஸ் பண்ணும் போது சிறிய விபத்தில் கதாநாயகி பிரியா ஆனந்த் கதாநாயகன் பிரசாந்தை சந்திக்க இருவருடைய பழக்கம் ஏற்படுகிறது.
கதாநாயகி பிரியா ஆனந்த் தன் தந்தையுடன் சேர்ந்து நடத்தி வரும் பாரில் பார்வையற்றோரா இருக்கும் கதாநாயகன் பிரசாந்துக்கு இரவு நேரத்தில் பியானோ வாசித்து அந்த பார்க் வருபவர்களை மகிழ்விக்கும் வேலையை கதாநாயகி பிரியா ஆனந்த் வாங்கி கொடுக்கிறார்.
இந்த நிலையில் கதாநாயகி பிரியா ஆனந்த் நடத்தி வரும் அந்த பாருக்கு ரெகுலர் கஸ்டமர் ஆக வரும் முன்னாள் நடிகர் கார்த்திக் தன் மனைவி சிம்ரன் திருமண நாளை முன்னிட்டு தன் மனைவி சிமரனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தனது வீட்டிற்கு பியானோ வாசிக்க கதாநாயகன் பிரசாந்தை வரச் சொல்கிறார் நடிகர் கார்த்திக்.
இதையடுத்து நடிகர் கார்த்திக் வீட்டுக்கு செல்லும் கதாநாயகன் பிரசாந்துக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது.
நடிகர் கார்த்தி வீட்டிற்கு பியானோ வாசிக்க சென்ற இடத்தில் நடிகர் கார்த்திக் கொலை செய்யப்பட்டு கிடக்க அதை அவருடைய மனைவி சிம்ரனுடன் ஏற்கனவே கள்ள உறவில் இருக்கும் காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனி உதவியுடன் கண் தெரியாத கதாநாயகன் பிரசாந்தின் கண் எதிரிலேயே நடிகர் கார்த்திக்கின் பாடியை அப்புறப்படுத்துகிறார்.
இந்த நிலையில் பார்வை இல்லாத கதாநாயகன் பிரசாந்துக்கு தெரிய வர அவர் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்.
இதைத்தொடர்ந்து உண்மையில் கதாநாயகன் பிரசாந்துக்கு நடிகர் கார்த்திகை கொலை செய்தது எப்படி தெரியும்? கொலை செய்த கொலையாளிகளிடம் இருந்து கதாநாயகன் பிரசாந்த் தப்பித்தாரா?, தப்பிக்கவில்லையா?, என்பதுதான் இந்த அந்தகன் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அந்தகன் திரைப்படத்தில் கதாநாயகனாக டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்திருக்கிறார்.
சில வருடங்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்த் ஏற்கனவே இருந்த அதே இளமையோடும், அதே புத்துணர்ச்சியோடும் இந்த அந்தகன் திரைப்படத்தில் கதாநாயகனாக தோன்றுகிறார்.
பார்வையற்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருக்கும் கதாநாயகன் பிரசாந்த் சிறு சிறு அசைவுகளை கூட மிக நுணுக்கமாகவும் அருமையாகவும் நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த அந்தகன் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் பிரஷாந்த் வாழ்க்கையில் திடீர் தேவதை போல்எண்ட்ரி கொடுக்கும் கதாநாயகி பிரியா ஆனந்த், மிகவும் அழகாக இருக்கிறார்.
மிகவும் அருமையான சிமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன், கிடைக்கும் இடங்களில் தனது நடிப்பை வெளிக்காட்ட முயற்சித்து அதில் மிகப்பெரிய அளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கதாநாயகன் பிரசாந்த் தன்னை ஏமாற்றப்பட்டது தெரிந்தவுடன் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில் மிகவும் அழகாக நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, சூழ்நிலைக்கு ஏற்றது போல் தனது முகத்தை மாற்றி மாற்றி ரியாக்ஷன் கொடுக்கும் காட்சிகள் மிகவும் அசத்தலாக நடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரி சமுத்திரக்கனியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், சில காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான அதிரடி சரவெடியாக வெடித்திருக்கிறார்.
நடிகர் கார்த்தி கார்த்திக் ஆகவே மிகவும் அருமையாக அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.
பூவையார், ஊர்வசி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் திரைக்கதையின் திருப்பங்களுக்கு ஏற்ப சிறப்பாக கதாபாத்திரத்தை அருமையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரவி யாதவின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தையும் கலர்புல்லாகவும், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.
படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா படத்தொகுப்பு திரைக்கதையில் இடம்பெறும் திருப்பங்களை எந்தவித குழப்பமும் இன்றி ரசிகர்களிடத்தில் அருமையாக கொண்டு சேர்த்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் பின்னணி இசையில் காட்சிகளுக்கு ஏற்ப வித்தியாசத்தை காட்டியிருப்பவர், திரைப்படத்தில் முக்கிய கதா பத்திரமாக இருக்கும் பியானோ உள்ளிட்ட மென்மையான இசைக்கருவிகள் மூலம் பின்னணி இசையை ஒரு கதாபாத்திரமாக திரைப்படத்தில் பயணிக்க வைத்திருக்கிறார்.
இந்தி திரைப்பட உலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் மொழி மாற்றம் என்றாலும், தமிழுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களுடன் இந்தத் திரைப்படத்தை மிக அருமையாக இயக்கி இருக்கிறார் தியாகராஜன்.
படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நம்மை திரைக்குள் இழுத்து சென்று விடுகிறார்.
திரைப்படத்தில் தோன்றும் சிறு சிறு கதாபாத்திரங்கள் கூட முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலம் அமைந்திருக்கிறது.
சில காட்சிகளில் வந்தாலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை அருமையாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் தியாகராஜன் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மொத்தத்தில், ‘அந்தகன்’ திரைப்படம் ஏ பி சி அனைத்து சென்டர் மக்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான திரைப்படம்.











