பார்க் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- தமன் குமார், ஸ்வேதா டோரதி, யோகிராம், லயன் ஈ.நடராஜ், பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், நீமாரே, சுரேந்தர், விஜித் சரவணன், ஜெயந்திமாலா, கராத்தே ராஜா, கிரேன் மனோகர், ரேகா சுரேஷ், விஜய் கணேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- E.K.முருகன்.

ஒளிப்பதிவாளர் :- பாண்டியன் குப்பன்.

படத்தொகுப்பாளர் :- குரு சூர்யா.

இசையமைப்பாளர் :- ஹமரா சி.வி.

தயாரிப்பு நிறுவனம் :- அக்ஷயா மூவி மேக்கர்ஸ்.

தயாரிப்பாளர் :- லயன் ஈ.நடராஜ்..

ரேட்டிங் :- 2./5.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கதாநாயகன் தமன்குமார், தன் தாயுடன் வசித்து வருகிறார்.

வழக்கம் போல், கதாநாயகன் தமன் குமார் மற்றும் கதாநாயகி ஸ்வேதா டோரத்தி கண்டதும் காதல் கொள்கிறார்கள்.

தொடர்ந்து கதாநாயகன் தமன் குமார் மற்றும் கதாநாயகி ஸ்வேதா டோரத்தி இருவரையும்  வில்லன் யோகி ராமின் ரெளடி கும்பல் ஒன்று துரத்துகிறது.

இந்நிலையில், யோகிராம் ரெளடி கும்பலுக்கு பயந்து பல நாட்கள் சீல் வைக்கப்பட்ட பார்க் ஒன்றில் தஞ்சம் புகுந்து விடுகிறார்கள்.

அந்த சில் வைக்கப்பட்ட பார்க்கில் கதாநாயகன் தமன் குமார் மற்றும் கதாநாயகி ஸ்வேதா டோரத்தி தஞ்சம் புகுந்த இவர்கள் மீது இரண்டு அமானுஷ்யம் உடலில் புகுந்து கொள்கிறது.

கதாநாயகன் தமன் குமார் மற்றும் கதாநாயகி ஸ்வேதா டோரத்தி இவர்கள் மீது புகுந்த அமானுஷ்யம் சக்தி இவர்களை விட்டதா?, விடவில்லையா?, என்பதுதான் இந்த பார்க் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்தப் பார்க் திரைப்படத்தில் கதாநாயகனாக தமன் குமார் நடித்திருக்கிறார்.

இந்த பார்க் திரைப்படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் தமன் குமார் பார்வையாளர்களை பயமுறுத்தியிருக்கிறார்.

கதாநாயகி ஸ்வேதா டோரத்தியை கண்டதும் காதல், டூயட், பிளாக் பாண்டி உடன் காமெடி, ஆக்‌ஷன் என அனைத்து கமர்ஷியல் விசயங்களிலும் பட்டய கிளப்பிய கதாநாயகன் தமன் குமார் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டவும் செய்திருக்கிறார்.

இந்த பார்க் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்வேதா போர்த்தி நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்திக்கு வழக்கமான கதாநாயகியின் வேலை என்றாலும், கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

கதாநாயகன் தமன் குமார் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிளாக் பாண்டி, தனது நடிப்பில் பல நடிகர்களின் பாடி லேங்வேச்களை வெளிப்படுத்திய அவருடைய காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.

கிரேன் மனோகர், ரேகா சுரேஷ், கராத்தே ராஜா, ஜெயந்தி மாலா, ரஞ்சன் குமார், ரஞ்சனா நாஞ்சியார், யோகி ராம், விஜய் கணேஷ் அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவருமே கதையோட்டத்திற்கு ஏற்றபடி ஒத்துழைத்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும் ஏகப்பட்ட காட்சிகளில் லைட்டிங் மற்றும் கலர் கிரேடிங் என மொத்தத்தில் ஒளிப்பதிவு சுமாராக உள்ளது

படத்தொகுப்பாளர் குருசூர்யாவின் படத்தொகுப்பு மூலம் காட்சிகளை வேகமாக பயணித்திருக்கிறார் .

இசையமைப்பாளர் ஹமரா.சிவி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமாராக இருக்கிறது.

வழக்கமான திகில் திரைப்படத்தின் கதை தான் என்றாலும், அதற்காக இயக்குநர் இ.கே.முருகன் பயன்படுத்தியிருக்கும் பூங்கா என்ற களம் புதிதாகவும், இருந்தாலும் திரைக்கதை மூலம் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருந்தால் பயங்கர திகில் படமாக அமைந்திருக்கும்.

நகைச்சுவை மற்றும் திகில் இரண்டும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், நகைச்சுவை என்ற பெயரில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை இயக்குநர் இ.கே.முருகன் கடுப்பேத்தி இருக்கிறார்

மொத்தத்தில், இந்த ‘பார்க்’ திரைப்படம் ரசிகர்கள் இளைப்பாற ஏற்ற பார்க்காக அமையவில்லை.

error: Content is protected !!