சில நொடிகளில் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 3./ 5.

நடிகர் & நடிகைகள் :- ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த், லிடியா டேனிஸ்தான், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- வினய் பரத்வாஜ்.

ஒளிப்பதிவாளர் :- அபிமன்யு சதானந்தன்.

படத்தொகுப்பாளர் :- ஷைஜல் பி.வி.

இசையமைப்பாளர் :- மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாகாட்டோ & ரோஹித் மாட்.

தயாரிப்பு நிறுவனம் :- ஸ்கொயர் புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- புன்னகை பூ கீதா.

ரேட்டிங் :- 3./ 5.

லண்டனில் காஸ்மெட்டிக் மருத்துவரான கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி தனது மனைவி கதாநாயகி புன்னகை பூ கீதாவுடன் லண்டனில் வாசித்து வருகிறார்கள்.

இதற்கிடையே மாடலிங்க் துறையில் இருக்கும் மாடல் அழகியான யாஷிகா ஆனந்துடன் பழக்கம் ஏற்படுகிறது.

இந்த பழக்கம் காதலாக மாற, பின் இருவரும் தனது மனைவி கதாநாயகி புன்னகை பூ கீதாவிற்க்கு தெரியாமல் யாஷிகா ஆனந்தவுடன் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது.

கதாநாயகி புன்னகை பூ கீதா வீட்டில் இல்லாத சமயத்தில் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியும் யாஷிகா ஆனந்துடன் வீட்டில் உல்லாசமாக இருக்கிறார்கள்

போதை மாத்திரை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் எதிர்பாராத விதமாக யாஷிகா ஆனந்த் இறந்து விட, டெட் பாடியை ஒரு மரப்பெட்டியில் வைத்து காட்டுப் பகுதியில் சென்று குழி தோண்டி புதைத்து விடுகிறார்.

அதன்பிறகு, அடிக்கடி யாஷிகா ஆனந்தின் நினைவுகள் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியை தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறது.

கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி வீட்டிலும் அவர் பணி புரியும் நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறார்.

மனைவி கதாநாயகி புன்னகை பூ கீதாவுடன் அடிக்கடி சண்டை போடுகிறார்.

இந்த சமயத்தில், பெண் பத்திரிகையாளர் ஒருவர், யாஷிகா ஆனந்தை பற்றி கூறி கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியை மிரட்டி பணம் பறிக்க முயல்கிறார்.

கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

மாடல் அழகியான யாஷிகா ஆனந்துடன் இருக்கும் பழக்கத்தையும் நடந்த உண்மைகளையும் தன் மனைவி கதாநாயகி புன்னகை பூ கீதாவிடம் சொல்ல, அவர் என்ன செய்தார்? கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியை மிரட்டும் பெண் பத்திரிகையாளருக்கு யாஷிகா ஆனந்த் இறந்தது பற்றிய உண்மை தெரிந்தது எப்படி?,   என்பதுதான் இந்த சில நொடிகளில் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த சில நொடிகளில் திரைப்படத்தில் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் மருத்துவர் கதாபாத்திரத்திற்கு ரிச்சர்ட் ரிஷி பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.

தனது கதாபாத்திரத்தை ரிச்சர்ட் ரிஷி மிகவும் ஸ்டைலிஷாக கையாண்டிருக்கிறார்.

பயம், பதட்டம், குற்றவுணர்ச்சி, இயலாமை, காதல் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய பலமான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து அருமையாக அசத்தியிருக்கிறார்.

இந்த சில நேரங்களில் திரைப்படத்தில் கதாநாயகியாக புன்னகை பூ கீதா நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகி புன்னகை பூ கீதா, தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை பற்றி தெரிந்தாலும் அதைப்பற்றி கோபம் கொள்ளாமல் கணவரிடம் சண்டை போடாமல் அதை சரியான முறையில் கையாண்டு அவருக்கு பாடம் புகட்டுவது புத்திசாலித்தனமாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

இடைவேளைக்கு முன் தனது கணவன் கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியிடம் சண்டை, ஆட்டம் பாட்டம் என்று இருப்பவர், இடைவேளைக்குப்பின் தனது மற்றொரு முகத்தை காட்டும் போது நடிப்பின் மூலம் மிரட்டியிருக்கிறார்.

இந்த சில நேரங்களில் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார்.

மாடல் அழகி கதாபாத்திரத்திற்கு ஏற்ப யாஷிகா ஆனந்த் மிகவும் கவர்ச்சியாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

உடலில் மொழியில் மட்டும் இன்றி தனது பேசும் வசனங்களிலும் கவர்ச்சியை வெளிப்படுத்தி, கள்ளக்காதலிக்கானv கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.

கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷியிடம் யாஷிகா ஆனந்துடன் உள்ள தொடர்பு விஷயத்தை சொல்லி பணம் கேட்டு மிரட்டும் இளம்பெண்ணின் வில்லத்தனம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

இந்த சில நொடிகளில் திரைப்படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் யாரும் மனதில் நிற்கவில்லை.

ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன், ஒளிப்பதிவு அழகான லண்டனை மிகவும் அழகாகவும் மிக பிரமாண்டமாகவும காட்சிப்படுத்தியிருக்கிறார்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளின் அமைதி மற்றும் அழகையும் மிக நேர்த்தியாக திரைப்படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன்.

லண்டன் நகரத்தின் குளிர்ச்சியை திரைப்படம் பார்ப்பவர்களிடமும் மனதில் ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன் பதிந்து விட்டார்.

இசையமைப்பாளர்கள் மசாலா காஃபி, பிஜோன் சுரரோ, தர்ஷன்.கே.டி, ஸ்டக்கட்டோ மற்றும் ரோகித் மேட் என இந்த சில நொடிகளில் திரைப்படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார்.

ஐந்து பேரின் இசையும் பாடல்களும் இனிமை.

பாரில் ஒலிக்கும் பாடலை கூட இனிமையான பாரதியார் பாடலாக பயன்படுத்தியது பாரதியாரை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.

பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப கதைக்கு ஏற்ப ஐந்து இசையமைப்பாளர்கள் மிக அருமையாக பயணித்திருக்கிறார்கள்.

கள்ளக்காதல் பற்றிய கதையும் ஒரு இறப்பு நடக்கும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை சஸ்பென்ஸாக திரைக்கதையின் மூலம் நகர்த்தி செல்லும் இயக்குநர் வினய் பரத்வாஜ், இறுதியில் யூகிக்க முடியாத ஒரு திப்பத்தை வைத்து திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனம் ஈர்ப்பதோடு, இறுதியில் கள்ளக்காதலில் ஈடுபடும் கணவர்மார்களுக்கு சவுக்கடி கொடுத்து திரைப்படத்தை முடித்து மிகப்பெரிய அளவில் பாராட்டு பெறுகிறார் இயக்குநர் வினய் பரத்வாஜ்.

லண்டனில் கதை நடந்தாலும் காட்சிகள் அனைத்தையும் மிக எளிமையான முறையில் மிக அருமையாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் வினய் பரத்வாஜ்.

ஒரு வீட்டுக்குள் வைத்தே பெரும்பாலான காட்சிகளை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வினய் பரத்வாஜ்.

இந்த திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு முழு திரைக்கதையையும் நகர்த்தியிருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘சில நிமிடங்களில்’ ஒரு நல்ல அருமையான எழுத்தாளரின்  புத்தகத்தை படித்த அனுபவத்தை கொடுக்கிறது.

error: Content is protected !!