அன்னபூரணி திரை விமர்சனம் ரேட்டிங்:-2.5/5.
நடிகர் & நடிகைகள் :- நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலர்,
எழுத்து & இயக்கம் :- நிலேஷ் கிருஷ்ணா.
ஒளிப்பதிவாளர் :- சத்யன் சூரியன்.
படத்தொகுப்பாளர் :- பிரவீன் ஆண்டனி.
இசையமைப்பாளர் :- தமன் எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ்.
ரேட்டிங் :- 2.5/ 5.
திருச்சி பக்கத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் பிராமண குடும்பத்தில் சேர்ந்த கதையின் நாயகி நயன்தாரா, சிறு வயதில் இருந்தே இந்திய அளவில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணராக வேண்டும் என ஆசைப்படுகிறார்.
ஆனால், ஆச்சாரமான பிராமண குடும்பத்திற்கு சமையல் கலை கலைஞர் ஆவதற்கு சரிபட்டு வராது என்று கூறி அவரது தந்தை ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடுகிறார்.
தந்தையின் போட்ட தடையை மீறி தன் தந்தைக்கு தெரியாமல் சமையல் கலை படிப்பு கதையின் நாயகி நயன்தாரா கேட்டரிங் காலேஜ் சேர்ந்து படித்து வருகிறார்
கதையின் நாயகி நயன்தாராவின் லட்சியப் பாதையில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.
தன் தந்தையின் தடையை மீறி தன் தந்தையிடம் எம்பிஏ படிப்பதற்காக கூறிவிட்டு கேட்டரிங் காலேஜில் படித்துவிட்டு மிகப்பெரிய செவன் ஸ்டார் ஹோட்டலில் சமையல் கலை கலைஞராக பணிபுரிகிறார்.
நாள் இரவு டூட்டி முடிந்த பின்பு அவருடன் பணிபுரியும் ஒருவரால் கேக் ஆர்டர் வந்திருக்கிறது செய்து கொடுக்கும்படி கேட்கிறார்.
கேக் தயாரிக்கும் போது மைக்ரோ ஓவனில் கேக் வைத்து விட்டு வந்த போனை பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென விபத்து ஏற்படுகிறது.
அந்த விபத்தில் உடல் ரீதியாக கதைய நாயகி நயன்தாராவிற்கு ஏற்படும் பாதிப்பால் இனி அவரால் சுவைக்கவும் முடியாது சுவையாக சமைக்கவும் முடியாது என்ற நிலை ஏற்படுகிறது.
கதையின் நாயகி நயன்தாரா பலவிதமான தடைகளையும் தாண்டி வந்து இந்திய அளவில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணராக சாதித்தாரா? சாதிக்கவில்லையா? என்பதுதான் அன்னபூரணி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த அன்னபூரணி திரைப்படத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
திரில்லர், ஆக்ஷன் திகில், அமானுஷ்யம் போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்த நயன்தாரா, முதல் முறையாக ஒரு உணர்வூப்பூர்வமான கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் கதையின் நாயகி நயன்தாரா நடித்திருந்தாலும், அவருடைய கதாபாத்திரம் திரைப்பட ரசிகர்களிடத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது அவருக்கு மட்டும் அல்ல திரைப்படத்திற்கும் மிகப்பெரிய அளவில் பலவீனமாக அமைந்திருக்கிறது.
இந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜெய் நடித்திருக்கிறார்.
கதையின் நாயகி நயன்தாராவின் கதாபாத்திரத்தை தாங்கிப் பிடிக்கும் ஒரு நல்ல அருமையான கதாபாத்திரத்தில் ஜெய் நன்றாகவே நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் ஜெய்க்கு பெரிய அளவு வேலை இல்லை.
சிறந்த சமையல் கலை நிபுணராக நடித்திருக்கும் சத்யராஜின் கதாபாத்திரம் மற்றும் அவரது அனுபவமான நடிப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பக்க பலமாக அமைந்திருக்கிறது.
கதையின் நாயகி நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார், அலட்டிக்கொள்ளாமல் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
தனது பிராமண குடும்பத்து ஆச்சாரத்திற்கு களங்கும் களங்கம் விளைவிக்கும் தன் மகள் கதையின் நாயகி நயன்தாராவால் ஒவ்வொரு முறையும் தலைகுணியும் போதும் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல், தனது வருத்தத்தையும், கோபத்தையும் தனது நடிப்பு மூலம் மிக அருமையாக கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படத்தில் சிறிது நேரம் வந்தாலும் அவர் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறோம்.
ரெடின் கிங்ஸ்லி பல காட்சிகளில் வந்தாலும் அவர் என்ன காமெடியாக பேசினாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரவில்லை என்பதுதான் உண்மை.
கார்த்தி குமாருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
கார்த்தி குமார், வில்லத்தனத்தை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, மட்டுமல்லாமல் வில்லாதி வில்லன் புரட்சித் தமிழன் சத்யராஜையே வில்லத்தனத்தில் மிரட்டவும் செய்திருக்கிறார்.
சுரேஷ் சக்ரவர்த்தி, ரேணுகா, குமாரி சச்சி என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதை ஓட்டத்திற்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
நடிகை நயன்தாராவின் வயது முதிர்வை மறைப்பதற்கு அதிக அளவில் மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு கதை களத்திற்கு ஏற்ப அருமையான கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு லைட்டிங் அனைத்து காட்சிகளில் அற்புதமாக இருக்கிறது.
இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
”உலகை வெல்ல போகிறாள்” பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.
பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
சாதாரண கதைக் களத்தை மிகவும் எளிமையான முறையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, காட்சிகளை கூட மிக எளிமையாக வடிவமைத்திருப்பது திரைப்படத்தை தொய்வடைய செய்துவிடுகிறது.
மொத்தத்தில் ‘அன்னபூரணி’ திரைப்படத்தில் என்னதான் சமையலுக்கு டிகிரி படித்து விட்டு சமைத்தாலும் சமைத்து சாப்பாட்டில் ருசி என்பதே இல்லவே இல்லை.











