‘பயாஸ்கோப்’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் – சத்யராஜ் ராஜ்குமார், வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, எஸ்.எம். செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, மோகனபிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம், ராஜேஷ்கிருஷ்ணன், ரஞ்சித், நிலா, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – சங்ககிரி ராஜ்குமார்.

ஒளிப்பதிவாளர் – முரளி கணேஷ்.

படத்தொகுப்பாளர்

இசையமைப்பாளர் – தாஜ்நூர்.

தயாரிப்பு நிறுவனம் – புரொடியூசர் பஜார்.

தயாரிப்பாளர் – சந்திர சூரியன், பிரபு & பெரியசாமி.

ரேட்டிங் – 2.5./5.

கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார் கிராமத்தில் தன்னுடைய சித்தப்பா, தாத்தா, பாட்டி மற்றும் சொந்த பந்தங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

சிறு வயதிலிருந்தே தனது சித்தப்பா மீது கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறார் .

திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற தனது கனவை தன் சித்தப்பாவிடம் சொல்ல கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

சென்னைக்கு வந்து திரைப்பட எடுக்கும் தொழில்நுட்ப விஷயங்களை அனைத்தையும் கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார் கற்றுக் கொள்கிறார்.

எப்படியாவது திரைப்படத்தை இயற்கையாக வேண்டும் என தொடர்ந்து தயாரிப்பாளர்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்.

ஒருநாள் ஊரில் இருந்து கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமாருக்கு அழைப்பு வர, அவசரமாக நமது கிராமத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார்.

கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார் சித்தப்பா ஜோதிடர் ஒருவரிடம் ஜாதகம் பார்க்கச் செல்ல இனி வரும் காலங்கள் உனக்கு கெட்ட காலம்தான் என்று ஜோதிடர் கூற மனமுடைந்த கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமாரின் சித்தப்பா தற்கொலை செய்து கொள்கிறார்.

கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார் தன் சித்தப்பா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து உடைந்து போகிறார்.

இப்படியான ஜோதிடம் என்ற மூட நம்பிக்கைகளை நம்பி மக்கள் ஏமாந்து இருக்கிறார்களே என்று கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார் கவலைப்படுகிறார்.

இதுகுறித்து மூடநம்பிக்கையை பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயற்சி செய்கிறார் கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார்.

மூடநம்பிக்கையை பற்றி திரைப்படம் எடுப்பதற்காக பல தயாரிப்பாளர்களை தேடி அலைய, தயாரிப்பாளர்கள் கிடைக்காததால், அந்த திரைப்படத்தை தானே சொந்த செலவில் எடுக்க முயற்சிக்கிறார் கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார்.

தனது வீட்டில் உள்ள ஆடு மாடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து தனது கிராமத்தில் தனது தாத்தா, பாட்டி, தம்பி, தங்கை என இவர்களை வைத்துக் கொண்டு சிறிய ஒரு செட்-அப் வைத்துக் கொண்டு, எந்த வித ஆடம்பர உபகரணம் இல்லாமல், திரைப்படத்தை இயக்க தொடங்குகிறார்.

இறுதியில் கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார் அந்தத் திரைப்படத்தை எடுத்து முடித்தாரா?, திரைப்படத்தை எடுத்து முடிக்கவில்லையா?, என்பதுதான் இந்த பயாஸ்கோப் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பயாஸ்கோப் திரைப்படத்தில் கதாநாயகனாக சங்ககிரி ராஜ்குமார் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார், தான் இயக்க நினைத்த திரைப்படத்தை இயக்கி முடிப்பதற்குள் அவர் அவஸ்தைப்படும் காட்சிகளில் உயிரோட்டமாக இருக்கிறது.

அதிலும், அந்த ஊரில் உள்ள பாட்டுகளிடம், மற்றும் ஊரில் உள்ள பெண்களிடமும் கதாநாயகன் சங்ககிரி ராஜ்குமார் மாட்டிக் கொண்டும் விழி பிதுங்கி நிற்கும் காட்சிகளிலெல்லாம் அதிக அளவில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களிடம் திரையரங்குகளில் சிரிப்பலைகள் எதிரொலிக்கிறது.

சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்த நடிகர் சத்யராஜ் திரை இருப்பு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாட்டிகள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திராணி, தம்பிகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  எஸ்.எம். செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகனபிரியா, ஜோதிடர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தர்மசெல்வன், குவாரி முதலாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நமச்சிவாயம், நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ்கிருஷ்ணன், இரண்டாவது கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஞ்சித், கதாநாயகியாக நடித்திருக்கும் நிலா என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கதையில் பார்வையாளர்கள் மனதில்  ஒட்டிக் கொள்கிறார்கள்.

திரைப்படத்தில் நடித்திருக்கும் தாதாக்கள் மற்றும் பாட்டிகள் நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதை, விட திரைப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒளிப்பதிவாளர் முரளி கணேஷின் ஒளிப்பதிவு கதைக்களத்தையும், கதாபாத்திரங்களையும் இயல்பாகவும் மிக அருமையாகவும் காட்சிப்படுத்திய இருக்கிறார்.

இசையமைப்பாளர் தாஜ்நூருக்கு வேலை மிக மிக குறைவு என்றாலும், அதை மிகவும் மனதுக்கு நெருக்கமாகவும் நிறைவாகவும் செய்திருக்கிறார்.

தான் திரைப்படம் எடுத்த அனுபவத்தை ஒரு கதையாக எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் சங்ககிரி ராச்குமார், தனது வெங்காயம் திரைப்படத்தின் காட்சிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஒரு திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் – இந்த பயாஸ்கோப் திரைப்படம்  ஆவணப்படம் போல் அமைந்திருக்கிறது.