பைரி திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- சையத் மஜீத், மேகனா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், கார்த்திக் பிரசன்னா, பிரான்சிஸ் கிருபா, ராஜன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜான் கிளாடி.
ஒளிப்பதிவாளர் :- ஏ.வி. வசந்த குமார்.
படத்தொகுப்பாளர் :- ஆர்.எஸ். சதீஷ் குமார்.
இசையமைப்பாளர் :- அருண்ராஜ்.
தயாரிப்பு நிறுவனம் :- டி.கே. புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- வி.துரை ராஜ்.
தமிழ் திரைப்பட உலகில் இதுவரை இல்லாத முயற்சியாக முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து ‘பைரி’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.
கதையின் நாயகன் சையத் மஜித், படித்து விட்டு வேலைக்கு சொல்லாமல் புறா வளர்ப்பதில் ஈடுபாடு காட்டுவதோடு, புறா பந்தயம் நடத்துவதில் மட்டும் மும்மூரம் காட்டி வருகிறார்.
அந்த ஊரில் மிகப்பெரிய தாதாவாக வலம் வரும் வினு லாரன்ஸும் புறா பந்தயம் நடத்தி வருகிறார்.
தாதாவான வினு லாரன்ஸ் புறா பந்தயத்தில் செய்யும் மோசடியை கதையின் நாயகன் சையத் மஜித் கண்டுபிடித்து தட்டிக்கேட்கிறார்.
இதனால், கதையின் நாயகன் சையத் மஜித், தாதாவான வினு லாரன்ஸ் இடையே மோதல் ஏற்பட, அதனால் கதையின் நாயகன் சையத் மஜித் மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொள்கிறார்.
தாதாவான வினு லாரன்ஸ் புறா பந்தயத்தில் நடந்த மோதலில் ஏற்பட்ட சிக்கலில் இருந்து கதாநாயகன் கதாநாயகன் சையத் மஜித், மீண்டாரா? மீளவில்லையா? என்பதுதான் பைரி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பைரி திரைப்படத்தில் அறிமுக கதையின் நாயகன் சையத் மஜித் நடித்திருக்கிறார்.
அறிமுக கதையின் நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித்தின் நடிப்பில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
அறிமுக கதையின் நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித்தின் நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்தை வாழ வைத்திருக்கிறார்.
அறிமுக கதையின் நாயகனாக நடித்திருக்கும் சையத் மஜித், தமிழ் திரைப்பட உலகில் மிகப்பெரிய இடம் காத்துக் கொண்டிருக்கிறது.
அறிமுக கதையின் நாயகனின் தாயாக நடித்திருக்கும் விஜி சேகர், தன் பெற்ற மகன் மீது வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் மிக அருமையாக இருப்பதோடு, கவனம் ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது.
கதையின் நாயகனின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடி அசத்தல், நடிப்பின் மூலம் மிகவும் சிறந்த நடிகராகவும் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கிறார்.
ரமேஷ் பண்ணையார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரமேஷ் ஆறுமுகம், சுயம்பு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடித்திருக்கும் வினு லாரன்ஸ், கதாநாயகிகளாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், மேக்னா எலன் என திரைப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பதியும்படியாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் ஏ.வி. வசந்தகுமாரின் ஒளிப்பதிவு நாகர்கோவில் அழகையும், புறா பந்தயத்தில் நடக்கும் வாழ்வியலையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் அருண் ராஜின் இசையில் பாடல்கள் கேட்கும்படி அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் அருண் ராஜின் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்..
இயக்குநர் ஜான் கிளாடி, தான் எடுத்துக்கொண்ட கதைக்கு கச்சிதமாக திரைக்கதையை அமைத்து திரைப்படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார்.
புறா பந்தயத்தை காட்சிப்படுத்திய விதம் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
நாகர்கோவில் மக்களின் வாழ்வியலை, எந்தவித மாற்றமும் இன்றி மிக எதார்த்தமாக இயக்கியதோடு மட்டுமல்லாமல் திரைப்படம் பார்க்கும் நம்மை அந்த கதை களத்துக்குள் அழைத்து சென்று விடுகிறார் இயக்குநர் ஜான் கிளாடி.
நாகர்கோவில் மக்களின் வாழ்வியலோடு புறா பந்தயத்தை பற்றி புதிய கதைக்களத்தை, புதிய கோணத்தில், திரைப்பட ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் இயக்கியிருக்கும் இயக்குநர் ஜான் கிளாடிக்கு தமிழ் திரைப்பட உலகத்தில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘பைரி’ திரைப்படத்தை பார்த்தவர்கள் கண்டிப்பாக படக்குழுவினரை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.











