கிளாஸ்மேட்ஸ் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அங்கையற்கண்ணன், பிரானா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- குட்டிப்புலி ஷரவண சக்தி.

ஒளிப்பதிவாளர் :- அருண்குமார்.

படத்தொகுப்பாளர் :- எம்.எஸ். செல்வம் – ஆர்.ராஜவர்மன்.

இசையமைப்பாளர் :- பிரிதிவி.

தயாரிப்பு நிறுவனம் :- முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல்.

தயாரிப்பாளர் :- ஜே. அங்கையற்கண்ணன்.

டாக்ஸி ஓட்டுனர் கதாநாயகன் அங்கையற்கண்ணனும், அவரின் மாமா இயக்குனர் ஷரவணசக்தியும் குடி குடியை என்று குடிவுடன் வாழ்க்கை நடத்தும் இருவரும் குடிக்கு அடிமையாகி விடுகிறார்கள்.

கதாநாயகன் அங்கையற்கண்ணன்
டாக்ஸி ஒட்டி சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் மதுவுக்காக மட்டுமே செலவு செய்கிறார்.

கதாநாயகன்  அங்கையற்கண்ணனுக்கு துணையாக இருக்கும் அவரின் மாமா இயக்குனர் ஷரவணசக்தி வேலை வெட்டி இல்லாமல் தனது மனைவி வேலை பார்த்து சம்பாதித்து கொடுக்கும் பணத்தில் குடித்துவிட்டு குதுக்கலமாக வாழ்ந்து வருகிறார்.

குடிக்கு அடிமையான இருவரும் இவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் அடுத்தவர்கள் குடும்பத்திற்கும் பல விதமான சிக்கல்களை ஏற்படுத்துகிறார்கள்.

அடுத்தவர்கள் குடும்பத்தை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எந்த நேரமும் குடி போதையில் இருக்கும் இவர்கள் இருவரும் அந்த குடி போதையினால் மிகப்பெரிய சிக்கலில் ஒன்றில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அந்த மிகப்பெரிய சிக்கலில் இருந்து இருவரும் தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? இருவரும் குடி பழக்கத்தை கைவிட்டார்களா? கைவிடவில்லையா? என்பதுதான் இந்த ‘கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படத்தில் அறிமுக நாயகனாக அங்கையற்கண்ணன் நடித்திருக்கிறார்.

அறிமுக கதாநாயகன் அங்கையற்கண்ணன் அறிமுகமான திரைப்படமாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அளவாக நடித்து அதிகமாக குடித்து போதையில் அவர் செய்யும் ரகளைகள் அனைத்தும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

அறிமுக கதாநாயகன் அங்கையற்கண்ணன் மாமவாக நடித்திருக்கும் இயக்குனர் ஷரவணசக்தி, வழக்கம் போல் தனது பாணியில் வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் திரைப்படம் பார்க்கும் நம்மை சிரிக்க வைக்கிறார்.

இந்த கிளாஸ்மேட்ஸ் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரானா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் பிரானா, என்னதான் தனது கணவன் மதுவுக்கு அடிமையாக இருந்தாலும், அவர் மீது அளவுக்கு அதிகமான அன்பை காட்டி உருகுவது ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கிறது.,

அந்த குடிகாரன் மனைவி கதாபாத்திரத்திற்கு கதாநாயகி பிரானா பொருத்தமாக அமைந்து அருமையாக நடித்திருக்கிறார்.

அருள்தாஸ் சிறிது நேரமே வந்தாலும் வழக்கம்போல இயல்பாக நடிப்பை கொடுத்து கவனம் பெறுகிறார்.

இயக்குனர் ஷரவணசக்திக்கு மனைவியாக நடித்திருக்கும் நடிகை, மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த கிளாஸ்மேட்ஸ் திரைப்படத்தில் ஊமை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்பி முத்துப்பாண்டி தன்னை மறந்து கதாபாத்திரத்தை உணர்ந்து ஊமையாக மிகவும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில்  மயில்சாமி இறக்கும் கிளைமாக்ஸ் காட்சிகளின் எம்பி முத்துப்பாண்டி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அவரின் நடிப்பின் மூலம் கண்கலங்க வைத்து விட்டார்.

எம்பி முத்துப்பாண்டி திரைப்பட உலகில் தனக்கு எப்படியப்பட்ட கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் தன்னால் நடிக்க முடியும் என்று இந்த திரைப்படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

வெளிநாட்டில் சம்பாதித்து, கிராமத்தில் கெத் ஆக வலம் வந்து குடிக்கு அடிமையாகும் சாம்ஸ், மதுப் பிரியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களுடன் பழகி, அவர்களைவிட தானும் குடிகாரனாக மாறிப்போகும் டி எம் கார்த்திக் ஆகியோர் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

மயில்சாமியின் மகளாக நடித்திருக்கும் அயலி’ அபி நட்சத்திரா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் நடிப்பின் மூலம் அதிரவைக்கிறார்.

குடிகார கதாபாத்திரத்துக்கு பெயர் பெற்ற மயில்சாமியும் திரைப்படத்தில் மதுப் ப்ரியராக வந்து மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இந்த கிளாஸ்மேட்ஸ் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரத்திலும் அனைவரும்  குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பிரித்வி இசை மற்றும் சீர்காழி சிற்பி பாடல் வரிகள் அனைத்தும் தாளமும் போட வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் அருண்குமார் செல்வராஜின் ஒளிப்பதிவு மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.

போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்களையும் சீரழித்துக் கொள்வதோடு, தங்களை சார்ந்திருப்பவர்களையும் எப்படி சீரழிக்கிறார்கள், என்று அதை நகைச்சுவையாகவும், மிக அருமையாகவும் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஷரவணசக்தி,

கிளைமாக்ஸ் நெருங்கும் போது, ‘அயிலி’ அபி நக்‌ஷத்ரா கதாபாத்திரம் மூலம் இயக்குனர் சொல்லியிருக்கும் விசயம் எதிர்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, குடிகாரர்களுக்கு காலில் கிடப்பதை கழட்டி அடிப்பது போல் இருக்கிறது.

குடிகாரர்களைப் பற்றி குடியால் நடக்கும் பிரச்சினைகளை பற்றி மையக்கருவை வைத்து கொண்டு மிக சுவாரஸ்யமாகும் காமெடியாகவும் திரைக்கதை அமைத்து மிகவும் அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஷரவணசக்தியை கண்டிப்பாக மனதார பாராட்டுவது போல், படத்தில் இடம்பெறும் பல வசனங்களுக்காகவும் பாராட்டலாம்.

மொத்தத்தில் இந்த ‘கிளாஸ்மேட்ஸ்’ திரைப்படம் படிப்பதில் இல்லை குடிப்பதில்தான குடிக்கார ஆண்கள் அனைவரும் நிச்சயம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

error: Content is protected !!