‘டோரதி’ திரைப்பட விமர்சனம்.

நடிகர் & நடிகைகள் :- கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், ராமச்சந்திரன் துரைராஜ், கஜராஜ், ஜீவா சுப்பிரமணியன், முத்துக்குமார், ராம்ஸ், செவுந்தரராஜா, முத்துப்பாண்டி, சத்யபிரேமா, ராஜேஸ்வரி, வருண், நடிகர், விஜய்முத்து, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கார்த்திக் சுப்பராஜ்.

ஒளிப்பதிவாளர் :- எஸ்.திரு (எஸ். திருநாவுக்கரசு)

படத்தொகுப்பாளர் :- கணேஷ் சிவா.

இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.

தயாரிப்பு நிறுவனம் :-
சீக்யா எண்டர்டெயின்மெண்ட்.,  தம்மம் பிலிம்ஸ், ஜியோ ஸ்டூடியாஸ்.

தயாரிப்பாளர்கள் :- ஜோதி தேஷ்பாண்டே, குனீத் மோங்கா கபூர், அச்சின் ஜெயின்.

மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா D ONE..

ரேட்டிங் :-  3.5./5.

சிறுவயது முதல் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து சனந்த் மற்றும் ரிஷிகாந்த், இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருகிறார்கள்.

அடி தடி வெட்டு குத்து செய்து கொண்டு சனந்த் மற்றும் ரிஷிகாந்த்,இருவரும் தைரியமான இளைஞர்களாக கிராமத்தில் வலம் வருகிறார்கள்.

எதிர்பாராத விதமாக சனந்த் மற்றும் ரிஷி காந்த் ஒரு சிறு பிரச்சினையில் இருவரும் பிரிய வேண்டிய சூழல் உருவாகிறது.

சனந்தை பிரிந்து வேறு ஒரு மாநிலத்திலும் மற்றும் ரிஷிகாந்த் வேறு மாநிலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், சனந்தின் தந்தை முத்துகுமாரிடம் இருந்தே ரிஷிகாந்துக்கு சனந்தை கொலை செய்வதற்கு அழைப்பு வருகிறது.

சனந்த் குடும்பத்தாரே உயிர் நண்பன் ரிஷிகாந்த் மூலம் கொலை செய்ய கொலை செய்ய சொல்வது ஏன்?,

இந்த சூழலில் ரிஷிகாந்த் சிறுவயது முதல் பழகிய உயிர் நண்பன் சனந்தை கொலை செய்தாரா?, செய்யவில்லையா?, என்பதுதான் இந்த‘டோரதி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘டோரதி’ திரைப்படத்தில் கதையின் நாயகர்களாக சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவரும் நடித்துள்ளனர்.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவரும் எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எளிதாக கையாளக்கூடிய வல்லமை படைத்த நடிகர்கள் என்பதை தங்களது ஒவ்வொரு அசைவுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

சனந்தின் உடல்மொழி மற்றும் நடிப்பு அபாரம். பல உணர்வுகளை தனது உடல் அசைவுகள் மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

சனந்த் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடிப்பார் என்பது உறுதி.

பல அழுத்தமான  காட்சிகளையும், உணர்வுப்பூர்வமான தருணங்களையும் தனது இயல்பான, நேர்த்தியான நடிப்பால் மிகச் சாதாரணமாகக் கடந்து சென்று ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர் நடிகர் ரிஷிகாந்த்.

ரிஷிகாந்தின் ஆக்ரோஷமான நடிப்பு… மண்ணின் மனிதர்களை கண்முன் நிறுத்தும் இயல்பான திறமை!

தனது உயிர் நண்பனுக்காக எதையும் செய்யத் துணியும் ஒரு உண்மையான நண்பனாகத் திரையில் வலம் வரும் ரிஷிகாந்த், தனது ஆக்ரோஷமான நடிப்பால் புழுதி படிந்த மண்ணின் மனிதர்களையும், அவர்களின் வாழ்வியலையும் கண்முன் நிறுத்துகிறார்.

நட்புக்காகத் தோள் கொடுக்கும் அதே மனிதன், நண்பனையே கொலை செய்யும் சூழலில் களம் இறங்கும்போது எதிர்கொள்ளும் மனப்போராட்டங்களையும்,  தடுமாற்றங்களையும் தனது இயல்பான உடல்மொழி மற்றும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

குறிப்பாக, அழுத்தமான உணர்ச்சிக் காட்சிகளிலும் மிகையில்லாத நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி, திரைப்படத்தின் பலமாகத் திகழ்கிறார்.

கீர்த்தி சுரேஷ், டோரதி என்ற கதாபாத்திரத்தில் குறைவான காட்சிகளிலேயே தோன்றினாலும், கதையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

தனது இயல்பான நடிப்பாலும், கதாபாத்திரத்தின் உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தும் திறனாலும், திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளார்.

குறைந்த திரை நேரத்திலும் கதையின் போக்கில் முக்கியப் பங்கு வகிக்கும் டோரதி கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக உள்வாங்கி, தனது நடிப்பால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார்.

ராமச்சந்திரன் துரைராஜ் ஆண் ஆதிக்க மனப்பான்மையையும் அதிகாரத் திமிரையும் தனது இயல்பான நடிப்பின் மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தி, திரையில் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

செளந்தராஜன் கௌரவம் என்ற பெயரில் கொடூரச் செயல்களை நியாயப்படுத்தும் மனிதர்களின் மனநிலையைத் தனது அழுத்தமான நடிப்பால் தத்ரூபமாகப் பிரதிபலித்துள்ளார்.

முத்துக்குமார் ஆணாதிக்கச் சிந்தனைகளையும் சமூகத்தின் பெயரால் அரங்கேறும் அடக்குமுறைகளையும் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமாகக் கடத்தியுள்ளார்.

ஜீவா சுப்பிர்மணியன் குறைந்த காட்சிகளில் தோன்றினாலும், இயல்பான நடிப்பாலும் அழுத்தமான வசன உச்சரிப்பாலும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

கெஜராஜ் திரையில் தோன்றும் ஒவ்வொரு தருணத்தையும் கதையின் போக்கிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி, தனது தனித்துவமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலுசேர்க்கிறார்.

ராம்ஸ்: சில காட்சிகளே கிடைத்தாலும், பொருத்தமான வசனங்களாலும் இயல்பான உடல்மொழியாலும் திரைக்கதையில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இசை திரைப்படத்தின் உயிர்நாடியாக பயணிக்கிறது.

‘கல்யாண விருந்து”, “முத்துமணி” பாடல்கள் ரசிக்க வைக்கும் நிலையில், பின்னணி இசையில் மோதல், காதல், கோபம், சோகம் என ஒவ்வொரு உணர்வையும் துல்லியமாகக் கடத்தி காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் எஸ். திருநாவுக்கரசு (எஸ். திரு) — தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் ஒளிப்பதிவு நேர்த்தியால் கவனம் பெற்றவர்.

இயற்கை ஒளி, காட்சிகளின் உணர்வை வலுப்படுத்தும் கேமரா கோணங்கள் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சரவணன் சந்திரன், பலர் பேச தயங்கும் ஒரு விசயத்தை மிக தைரியமாக பேசும் விதத்தில் கதை எழுதி சிறப்பான திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ்,

மொத்தத்தில், ‘டோரதி’   பாராட்டப்பட வேண்டிய திரைபடம்.

error: Content is protected !!