மொத ராத்திரி’ திரைப்பட விமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், அப்துல் லீ, பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம்,  ஏ.வெங்கடேஷ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- ராஜா கருப்பசாமி.

ஒளிப்பதிவாளர் :- சுரேஷ் பரஞ்சோதி.

படத்தொகுப்பாளர் :- அசோக் அர்ஜூனன்.

இசையமைப்பாளர் :- பரத் சங்கர்.

தயாரிப்பு நிறுவனம் :- மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

தயாரிப்பாளர் :- ரவி சங்கர்.

மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா. (D, one)

ரேட்டிங் :-  3.5/5.

காதல் தோல்வியால் தனது கிராமத்தை விட்டு துபாயில் பணிபுரிந்து வரும் கதாநாயகன் ரிஷிகாந்த், ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது கிராமத்திற்கு வருகிறார்.

கதாநாயகன் ரிஷிகாந்துக்கு தெரியாமல் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

தன்னுடைய சொந்த பந்தங்கள் மற்றும் குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொள்வதற்கு கதாநாயகன் ரிஷிகாந்த், சம்மதிக்கிறார்.

கதாநாயகன் ரிஷிகாந்த், மற்றும் கதாநாயகி அனிஷ்மா அனில்குமார் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

கதாநாயகன் ரிஷிகாந்த், மற்றும் கதாநாயகி அனிஷ்மா அனில்குமார் இருவருக்கும் திருமணம் முடிந்து மொத ராத்திரி அன்று தனது மனைவி கதாநாயகி அனிஷ்மா அனில்குமார் கதாநாயகன் ரிஷிகாந்த், மனம் திறந்து பேச ஆசைப்படுகிறார்.

ஆனால், கதாநாயகி அனிஷ்மா அனில்குமார் மொத ராத்திரி நடக்கும் நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய காதலருடன் ஓட முயற்சிக்கிறார்.

கதாநாயகி அனிஷ்மா அனில்குமார் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய காதலனிடம் சேர நினைக்கும் விசயம் தெரிந்த பிறகு கதாநாயகன் ரிஷிகாந்த், என்ன முடிவு எடுத்தார்?,

கதாநாயகன் ரிஷிகாந்த், திருமணம் வாழ்க்கை வெற்றி பெற்றதா? திருமண வாழ்க்கை வெற்றி பெறவில்லையா? கதாநாயகி அனிஷ்மா அனில்குமார்வின் காதல் வெற்றி பெற்றதா ? வெற்றி பெறவில்லையா? என்பதுதான் இந்த ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ’மொத ராத்திரி’ திரைப்படத்தில் கதாநாயகனாக ரிஷிகாந்த் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், மருது என்ற கதாபாத்திரத்தில் அளவாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்து, பல காட்சிகளில் அமைதியாக இருந்தே தனது உணர்வை சரியான முறையில் நடிப்பு மூலம் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் .

இந்த ’மொத ராத்திரி’ திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக இயக்குநர் ராஜா கருப்புசாமி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

தனது காதலியை மேலுள்ள காதலாலும் மற்றும் தனது காதலியை சந்தோஷமாக வைத்து வாழ முடியாது என்ற காரணத்தாலும் விட்டு செல்லும் காட்சி மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த ’மொத ராத்திரி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அனிஷ்மா அனில்குமார், நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற சிறை’ திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்டாக கையாண்டு இறுதிக் காட்சியில் தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தி அழும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.

கிராமத்தில் உள்ள பூசாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேத்தன், தனக்கு கொடுக்கப்பட்ட  கதாபாத்திரத்தை செவ்வனை சிறப்பாக செய்திருக்கிறார்.

இந்த ’மொத ராத்திரி’ திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் ஏற்ற சிறந்த தேர்வாக உள்ள  நிலையில்   தங்களது உணர்வுகளை சிறப்பாக நடிப்பு மூலம்  வெளிப்படுத்தி  திரைக்கதைக்கு அனைவரும் மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் பரஞ்சோதி ஒளிப்பதிவு மூலம்  கதைக்களத்திற்க்கு ஏற்றவாறு காட்சிகள் அனைத்தும் இயல்பாக திரைப்படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் காட்சிகளுக்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறார்

திருமணம் வீட்டில் நடக்கும் சம்பவங்களை அனைத்தும் இயல்பாகவும், உறவுகளின் மகிழ்ச்சி, சோகம், எதிர்பார்ப்பு, மோதல், காமெடி   ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாகவும் சிந்திக்கவும் அருமையாகவும் சிரிக்க வைத்து காட்சிப்படுத்தி சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி.

மொத்தத்தில், ’மொத ராத்திரி’  அனைத்து தரப்பு மக்களும் திரையரங்கில் சென்று கொண்டாட வேண்டிய திரைப்படம்..

error: Content is protected !!