பிரபல காமடி நடிகர் “போண்டா” மணி காலமானார்!

பிரபல காமடி நடிகர் “போண்டா” மணி காலமானார்!

காமெடி நடிகர் போண்டாமணி காலமானார் தற்போது (60). 2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991 ஆம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்.

அதனை தொடர்ந்து ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் நேற்று இரவு 11 மணிக்கு அவர் தனது வீட்டில் திடீரென்று மயங்கி உள்ளார்.

இதையடுத்து மயங்கி விழந்த அவரை குடும்பத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மறைந்த காமெடி நடிகர் போண்டா மணி அவர்களின் உடல் தகனம் பல்லாவரம் மின் மயானத்தில் இன்று மாலை 5.30′ மணிக்கு நடைப்பெற்றது!

error: Content is protected !!