ககனாச்சாரி’ (மலையாளம்) திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- அஜு வர்கீஸ், அனார்கலி மரிக்கார், கோகுல் சுரேஷ், கணேஷ் குமார்
மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- அருண் சாந்து.

ஒளிப்பதிவாளர் :- சுர்ஜித் எஸ் பை.

படத்தொகுப்பாளர் :- சீஜய் அச்சு.

இசையமைப்பாளர் :- சங்கர் சர்மா.

தயாரிப்பு நிறுவனம் :- அஜித் விநாயகா பிலிம்ஸ்.

தயாரிப்பாளர் :- அஜித் விநாயகா பிலிம்ஸ்.

ரேட்டிங் :- 3./5.

2050ஆம் ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் கதைதான் இந்த திரைப்படம்

கேரளா மாநிலத்தில் மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மட்டுமல்லாமல் ஊரே மூழ்குவதோடு, வேற்றுகிரக ஏலியன்களின் படையெடுப்பு, அரசின் அடக்குமுறை அதிகரிக்க, பெட்ரோல் தடை செய்யப்பட்டு அனைத்து பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்கிறது.

பெட்ரோல் உள்ளிட்டவைகளால் தடை விதித்து வேறு என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடு வாழும் அந்த, மக்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் அரசு கருவி ஒன்று பொருத்தப்பட்டு, அதை காவல்துறை அதிகாரிகள் கவனித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தில், வேற்றுக்கிரக வாசி ஏலியனை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ள பாதுகாப்பான ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் அவருக்கு இரண்டு உதவியாளர்கங கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்க்கீஸ் தேவையான உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ராணுவ வீரர் கணேஷ் குமார் பற்றி அவருடைய வாழ்க்கையைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக சேனல் ஒன்று அவரை சந்தித்து பேசுகிறார்.

அப்போது தனது வாழ்க்கைப் பற்றியும், தான் எதிர்கொண்ட வேற்றுகிரக வாசியான ஏலியன் சம்பவங்கள் பற்றியும் கணேஷ் குமாரும், அவருடைய இரண்டு உதவியாளர்களும் கூறுகிறார்கள்.

ராணுவ வீரர் கணேஷ் குமார் பற்றி அவருடைய வாழ்க்கையைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுப்பதற்கான அவர்களின் உரையாடல்கள் மற்றும் அதைச் சார்ந்த காட்சிகளும் ஆவணப்பட கோணத்தில் திரைப்படமாக திரையில் வருகிறது.

கடினமான சூழ்நிலையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த மூன்று பேர் கணேஷ்குமார்
கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ், மற்றும் ஒரு பெண் ஏலியன் அனார்கலி மரிகார் இணைகிறார்கள்.

250 வயதாகும் அந்த ஏலியன் மீது, இதுவரைக்கும் எந்த ஒரு பெண்ணும் தன்னை திரும்பி கூட பார்க்கவில்லை என கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் கோகுல் சுரேஷுக்கு அந்த வேற்றுக்கிரகவாசியான ஏலியன் மீது காதல் கொள்கிறார்.

அந்த காதல் காமெடியாக இருந்தாலும், மறுபக்கம் செயற்கை நுண்ணறிவின் நன்மை மற்றும் தீமை, காலநிலை மாற்றத்தால் நாட்டில் அடிக்கடி ஏற்படும் மழை வெள்ள பாதிப்பு, பெட்ரோல் தட்டுப்பாடு, ஏலியன் உலகத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள தொடர்பு என பல்வேறு விசயங்கள் பற்றி பேசும் இயக்குநர் அருண் சாந்து.
இறுதியில், வேற்றுகிரகவாசியான ஏலியன் பெண்ணுடன் காதல் என்ன ஆனது?, காதல் கை கூடியதா? கைக்கூடவில்லையா? பூமியில் மீது ஏலியன் தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? என்பதுதான் இந்த ககனாச்சாரி திரைப்படத்தின் மீதிக்கதை

ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கணேஷ்குமார் இவருடைய உதவியாளர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்
கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ், மற்றும் ஏலியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனார்கலி மரிகார் ஆகியோர் கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கணேஷ்குமார், கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ் இவர்கள் மூவருமே தொலைக்காட்சிகளில் காமெடி செய்வது போல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதில், வேற்றுகிரக வாசி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனார்கலி மரிகார் வரும் காட்சிகளில் வசனங்களே இல்லாமல் தனது பார்வையில் மட்டுமே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்

படத்தொகுப்பாளர் சீஜே அச்சு படத்தொகுப்பு மிகவும் அருமை.

கலை இயக்குநர் எம்.பாவா பணியும் சர்வசாதாரண ஒவ்வொரு பொருள்களையும் கூட அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக காண்பித்து திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பயணப்பட்டு இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ்.பய் ஒளிப்பதிவு மூலம் கதைக்கான புதிய களத்தை மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்.

இசையமைப்பாளர் சங்கர் சர்மாவின் இசை மற்றும் பின்னணி இசை மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது.

இத்தகைய கதை மொழிகளை தாண்டி சென்றடையக்கூடியது என்றாலும், அதை இயக்குநர் அருண் சந்து காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலமாகவே சொல்லி கதையை நகர்த்தி செல்வதால்,  மலையாள திரைப்பட ரசிகர்களால் மட்டுமே கொண்டாட முடியும்.

மொத்தத்தில் – இந்த ‘ககனாச்சாரி’ திரைப்படம் புரியாத புதிராக அமைந்துள்ளது.