‘கோந்தல்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- கிஷோர் கதம், இஷிதா தேஷ்முக், யோகேஷ் சோஹோனி, துருவ் தோக்கே, நிஷாத் போயிர், சுரேஷ் விஸ்வகர்மா, அனுஜ் பிரபு, விட்டல் காலே, கைலாஷ் வாக்மரே, பிரவின் தலிம்ப்கர், மாதவி ஜுவேகர், ஐஸ்வர்யா ஷிண்டே, பூனம் பாட்டீல் மற்றும் ருக்மணி சுதார், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சந்தோஷ் தவாகர்.
ஒளிப்பதிவாளர் :- அமலேந்து சௌத்ரி
படத்தொகுப்பாளர் :- ஆஷிஷ் மாத்ரே.
இசையமைப்பாளர் :- இசைஞானி இளையராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- தவாகர் பிலிம்ஸ்.
தயாரிப்பாளர் – சந்தோஷ் தவாகர், திக்ஷா தவாகர், அமித் பானுஷாலி.
மக்கள் தொடர்பு :- சுரேஷ் சந்திரா (D one)
வெளியீட்டு தேதி :- 13 நவம்பர் 2026.
ரேட்டிங் :- 3.5./5.
‘கோந்தல்’ (Gondhal) திரைப்படம் வழக்கமான திரில்லர் திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட, மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் கொண்டாட்டத்திற்குப் பின்னால் இத்தனை ரகசியங்களா? சடங்கின் ஒலிகளுக்குள் ஒளிந்திருக்கும் மனித மனங்களின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் திரைப்படமே ‘கோந்தல்’!
மகாராஷ்டிராவின் கிராமப்புறத்தில் நடைபெறும் பாரம்பரியமான ‘கோந்தல்’ சடங்கை மையமாகக் கொண்டு கதை விரிகிறது.
திருமணத்தை ஒட்டி இரவு முழுவதும் நடைபெறும் இந்தச் சடங்கின் பின்னணியில் காதல், கட்டாயத் திருமணம், ஆசை, துரோகம், அதிகாரம், பழிவாங்குதல் எனப் பல உணர்வுகள் ஒன்றோடொன்று மோதுகின்றன.
தனக்குப் பிடிக்காத மாப்பிளையை கதாநாயகி இஷிதா தேஷ்முக் பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.
ஆனால் தன்னுடைய காதலனுடன் தப்பித்துச் செல்லும் எண்ணத்தையும் கைவிடவில்லை.
இதற்கிடையில், கிராமத்தின் பாரம்பரிய வழக்கப்படி இரவு முழுவதும் நடைபெறும் கோந்தல் சடங்கு தொடங்குகிறது.
அந்த ஒரே இரவில் பல மனிதர்களின் ஆசைகள், திட்டங்கள், ரகசியங்கள், துரோகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன.
திருமணக் கொண்டாட்டமாகத் தொடங்கும் நிகழ்வு, மனிதர்களின் உண்மையான முகங்களை வெளிப்படுத்தும் மர்மமான இரவாக மாறுகிறது.
அடுத்து என்ன நடக்கிறது? கதாநாயகி இஷிதா தேஷ்முக் திருமணம் நடந்ததா? இல்லை நடக்கவில்லையா?, தமிழ் காதலர்கள் ஓடிப்போனாரா?, ஓடி போகவில்லையா? என்பதுதான் இந்த ‘கோந்தல்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த கோந்தல்’ திரைப்படத்தில் கதாநாயகியாக இஷிதா தேஷ்முக் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் இஷிதா தேஷ்முக் மணமகளாக உணர்ச்சிகளுக்கும் தனிப்பட்ட விருப்பங்களுக்கும் இடையே போராடும் கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் இஷிதா தேஷ்முக் காதல், பிடிவாதம், அச்சம் எனப் பல்வேறு உணர்வுகளைத் தனது நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.
யோகேஷ் சோஹோனி கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளார்.
கிஷோர் கதம், இஷிதா தேஷ்முக், யோகேஷ் சோஹோனி, துருவ் தோக்கே, நிஷாத் போயிர், சுரேஷ் விஸ்வகர்மா, அனுஜ் பிரபு, விட்டல் காலே, கைலாஷ் வாக்மரே, பிரவின் தலிம்ப்கர், மாதவி ஜுவேகர், ஐஸ்வர்யா ஷிண்டே, பூனம் பாட்டீல் மற்றும் ருக்மணி சுதார், உள்ளிட்ட நடிகர்களின் பங்களிப்பும் திரைப்படத்தின் கதையோட்டத்திற்கு வலு சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் அமலேந்து சௌத்ரி ஒளிப்பதிவு மூலம் இரவு நேரக் காட்சிகளைத் தீப்பந்தங்கள், சடங்கு விளக்குகள் போன்ற குறைந்த வெளிச்சத்திலேயே அழகாகப் பதிவு செய்துள்ளார்.
குறிப்பாகத் தொடக்கத்தில் இடம்பெறும் சுமார் 27 நிமிடத் தொடர்ச்சியான ஒற்றைக் காட்சிப் படமாக்கல் (Single-shot sequence) குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முயற்சி.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் இசையில் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
மகாராஷ்டிராவின் நாட்டுப்புற இசை மரபையும், சடங்குகளின் இசைத் தன்மையையும் கதையோடு இணைத்திருப்பது மிக மிக சிறப்பு.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் கலாச்சாரச் சூழலை உணரச் செய்கின்றன.
கோந்தல்’ என்பது ஒரு திருமணச் சடங்கைப் பற்றிய திரைப்படம் மட்டுமல்ல; அந்தச் சடங்கின் பின்னணியில் மனிதர்களுக்குள் புதைந்து கிடக்கும் ஆசைகள், அதிகாரப் போட்டிகள், துரோகங்கள், உணர்ச்சிப் போராட்டங்களைப் பேசும் வித்தியாசமான உளவியல் திரில்லர் திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குநர் சந்தோஷ் தவாகர்.
மொத்தத்தில், கோந்தல்’ பாரம்பரியச் சடங்கின் பின்னணியில் காதல், துரோகம், மர்மம் என ஒரே இரவில் விரியும் வித்தியாசமான உளவியல் திரில்லர் திரைப்படம்.












