‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- நிவின் பாலி, சூரி, அஞ்சலி, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராம்.
ஒளிப்பதிவாளர் :- என்.கே. ஏகாம்பரம்.
படத்தொகுப்பாளர் :- மதி வி.ஏஸ்.
இசையமைப்பாளர் :- யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி.
தயாரிப்பு நிறுவனம் :- வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர் :- சுரேஷ் காமாட்சி.
மக்கள் தொடர்பு :- ஜான்.
வெளியீட்டு தேதி :- 01 அக்டோபர் 2026.
ரேட்டிங் :- 3./5.
ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படம், காலத்தையும் இடத்தையும் கடந்து பயணிக்கும் ஒரு தனித்துவமான காதல் கதையை மையமாகக் கொண்டுள்ளது.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள், உயிர் பிழைத்தல், மனிதநேயம், மீட்சி மற்றும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் காதல் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது.
8,000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அழியாத தன்மை கொண்ட கதாநாயகன் நிவின் பாலி, காலங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், கதாநாயகி அஞ்சலி மீதான கதாநாயகன் நிவின் பாலிக்கு காதல் மட்டும் மாறவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது காதலி கதாநாயகி அஞ்சலியை தேடிக்கொண்டே இருக்கிறார்.
மழை பெய்யும் தீபாவளி இரவில் ஓடும் ரயிலில் பயணிக்கும் சூரி சுமார் 8,000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அழியாத தன்மை கொண்ட கதாநாயகன் நிவின் பாலி, இருவரும் இணைந்து பயணம் செய்கிறார்கள்.
ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும் கதாநாயகன் நிவின் பாலிக்கு, பல ஆயிரம் ஆண்டுகளாக தேடி வரும் கதாநாயகி அஞ்சலி கனவில் தோன்றுகிறாள்.
அதே முன்பதிவு இல்லாத பெட்டியில் துபாயில் பல ஆண்டுகள் வேலை பார்த்துவிட்டு, சூரி தனது சொந்த ஊர் செல்வதற்காக
ரயிலில் ஏறியதும் தூக்கத்தில் இருக்கும் கதாநாயகன் நிவின் பாலியை எழுப்பும் போது சூரிக்கு அதன்பிறகு அவருடைய வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பெரிய பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்.
கதாநாயகன் நிவின் பாலியிடம் சிக்கிக்கொண்ட சூரியும் இடையே உருவாகும் மோதல்களும், மற்றும் உரையாடல்களும் என ரயில் பயணம் மிகவும் சுவாரஸ்யமாக நகர்கிறது.
இவர்கள் இருவருடனும் ஒரு எலியும் முக்கிய கதாபாத்திரமாக அது ரயிலில் பயணிக்கிறது.
இறுதியில் கதாநாயகன் நிவின் பாலி தனது காதலி கதாநாயகி அஞ்சலியை கண்டுபிடித்தாரா?, கண்டுபிடிக்கவில்லையா?, சூரி தனது சொந்த ஊருக்கு சென்றாரா?, செல்லவில்லையா?, என்பதுதான் இந்த ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நிவின் பாலி நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் நிவின் பாலி கதாபாத்திரத்தை உள்வாங்கி மிக அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.
சூரியும் நிவின் பாலி க்கு ஈக்குவலாக மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நிவின் பாலி, சூரி, இருவரின் நடிப்பும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
இந்த ‘ஏழுகடல் ஏழுமலை’ திரைப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.
நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோரின் நடிப்பு கதைக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இவர்களுடன் வரும் எலியும் திரைப்படத்தில் தனி கவனம் பெறுகிறது.
ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
வித்தியாசமான கதைக்களத்தையும், ஆழமான மனித உணர்வுகளையும் தனது தனித்துவமான பாணியில் சொல்லக்கூடியவர் இயக்குநர் ராம். அந்த வகையில், இந்தப் படத்திலும் காதல், அன்பு, மனிதநேயம் ஆகியவற்றை மையமாக வைத்து கதையை நகர்த்தியுள்ளார்.
மொத்தத்தில், காதல், வாழ்க்கை மற்றும் மனித உறவுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் நெகிழ்ச்சியான திரைப்படம் ‘ஏழுகடல் ஏழுமலை’ பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான திரை அனுபவமாக இருக்கும்.











