படிக்காத பக்கங்கள் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள் :- யாஷிகா ஆனந்த், பிரஜின், ஜார்ஜ் மரியான், முத்து குமார், ஆதவ் பாலாஜி, ஈரென் ஆதிகரே,

லொள்ளு சபா மனோகர், தர்ஷினி, சோப்ராஜ், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- செல்வம் மாதப்பன்.

ஒளிப்பதிவாளர் :- டோலி.

படத்தொகுப்பாளர் :- மூர்த்தி,
சரண் ஷண்முகம்.

இசையமைப்பாளர் :- ஜெஸ்ஸி கிப்ட், எஸ் எஸ் சாயிதேவ்.

தயாரிப்பு நிறுவனம் :- ஏஸ் மூவி பார்க், பௌர்ணமி பிக்சர்ஸ்.

தயாரிப்பாளர்கள் :- செல்வம் முத்துக்குமார்.

சேலம் அருகில் உள்ள ஏற்காடுக்கு படப்பிடிப்புக்காக வரும் பிரபல நடிகையான (ஸ்ரீஜா) கதாநாயகி யாஷிகா ஆனந்த் அங்குள்ள பெரிய ஹோட்டலில் தங்கி இருக்கிறார்.

நடிகையான (ஸ்ரீஜா) கதாநாயகி யாஷிகா ஆனந்தை ஏற்காட்டில் உள்ள தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிக்கையாளர் முத்துக்குமார் நடிகை (ஸ்ரீஜா) கதாநாயகி யாஷிகா அனந்திடம் பேட்டி எடுப்பதற்கு முன் அனுமதி பெற்று நடிகை (ஸ்ரீஜா) கதாநாயகி யாஷிகா அனந்த் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு பேட்டி எடுப்பதற்காக பத்திரிக்கையாளர் முத்துக்குமார் வருகிறார்.

நடிகையான (ஸ்ரீஜா) கதாநாயகி யாஷிகா அனந்திடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர் முத்துக்குமார் கேள்விகள் கேட்க நீங்கள் எப்படி பிரபல நடிகையா ஆனீர்கள், உங்களது வளர்ச்சிக்கான முக்கிய காரணம் என்ன, உங்களின் சொத்து மதிப்பு என்ன, என கேள்வி கேட்கிறார்.

இத்தனை கோடி உங்களிடம் இருப்பதற்கு நீங்கள் நடித்து சம்பாதிப்பது இல்லை நீங்கள் பலரிடம் படுத்து தான் சம்பாதித்து இருக்கிறீர்கள் என மக்கள் வெளியில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என பத்திரிகையாளர் முத்துகுமார் கேள்விகள் கேட்க சட்டென்று கதாநாயகி யாஷிகா ஆனந்த் ஆத்திரப்பட்டு அந்த பத்திரிகையாளர் முத்துகுமாரை செருப்பால் அடித்து அருகில் இருந்த கேமராவை உடைத்து விடுகிறார்

இதனால் கடுப்பான பத்திரிக்கையாளர் முத்துக்குமார் கேமரா ஸ்டாண்ட் வைத்து கதாநாயகி யாஷிகா அனந்தை தலையில் தாக்கி அருகிலுள்ள சேரில் கட்டி வைத்து துன்புறுத்துகிறார்.

கதாநாயகி யாஷிகா ஆனந்த் நீ யார் என்னை உயிரோடு விட்டுவிடு என கெஞ்சும் போது பத்திரிக்கையாளர் முத்துக்குமார் நான் உண்மையான தீவிர ரசிகன் நான் உன்னை இன்று ஒரு நாள் அனுபவிக்க வேண்டும் என மிரட்டுகிறார்.

என்னை நீ கொன்று விடாதே நீ என்னை அனுபவிக்க நான் சம்மதிக்கிறேன் என கதாநாயகி யாஷிகா ஆனந்த் கூறுகிறார்.

இருவரும் படுக்கையில் இருக்கும்போது கதாநாயகி யாஷிகா ஆனந்த் திடீரென்று பத்திரிகையாளர் முத்துக்குமாரை தாக்கி அங்குள்ள நாற்காலியில் கட்டி போடுகிறார்.

என்னை நீ விட்டுவிடு நாங்கள் சாதாரண ஆட்கள் இல்லை எனக்கு பின்னாடி பெரிய கும்பலா இருக்கிறது எனக் கூற உன்னை போல் நடிகைகளை பெரிய பெரிய விஐபிகளுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதிப்பது தான் எங்கள் கும்பலின் வேலை என்ன விடவில்லை என்றால் உன்னை கண்டிப்பாக கொன்று விடுவார்கள் என பத்திரிக்கையாளர் முத்துக்குமார் கதாநாயகி யாஷிகா ஆனந்த் மிரட்டுகிறார்.

பத்திரிகையாளர் முத்துக்குமாரை நீயாக இங்கு வரவில்லை நான் உன்னை நான் ஸ்கெட்ச் போட்டு தான் உன்னை இங்கு வரவழைத்தேன் என கதாநாயகி யாஷிகா ஆனந்த் கூறுகிறார்.

கதாநாயகி யாஷிகா ஆனந்த் எதற்காக பத்திரிகையாளர் முத்துக்குமாரை அந்த ஹோட்டலுக்கு வர வைத்தார்.

உண்மையில் கதாநாயகி யாஷிகா ஆனந்த யார்? அவருடைய பின்னணி என்ன? பத்திரிகையாளர் முத்துக்குமார் யார்? என்பதுதான் இந்த படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் கதையின் நாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார்.

நடிகை ஸ்ரீஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாஷிகா ஆனந்த் மிகவும் கவர்ச்சியாகவும் இளமை துள்ளலோடு மிக அருமையாக நடித்திருக்கிறார்.

இந்த படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரஜன் நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் பிரஜன் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

திரைப்படம் ஆரம்பித்து இடைவேளைக்கு பின் தான் கதாநாயகன் காவல்துறை அதிகாரியாக வருகிறார்.

சைக்கோ வில்லன் முத்துக்குமரன் ஆதவ் பாலாஜி மற்றும் தர்ஷினி ஜார்ஜ் மரியான், ஈரென் ஆதிகரே, லொள்ளு சபா மனோகர், தர்ஷினி, சோப்ராஜ், அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் டோலி ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்தை மிகச்சிறப்பாக, செய்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் மூர்த்தி மற்றும் சரண் ஷண்முகம் படத்தொகுப்பை மிக அருமையாக பயணித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜெஸ்ஸி கிப்ட் இசை மற்றும் பாடல் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் எஸ் எஸ் சாயிதேவ் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணிக்கிறது.

பொதுவாகவே நாம் சில செய்திகளை தினசரி நாளிதழ்கள் படிக்கும்போது ஒரு விபத்து ஒரு கற்பழிப்பு ஒரு கொலை என்ற சம்பவங்களை படிப்போம்..

இவை அனைத்தும் பெரிய எழுத்துக்களில் தலைப்பு செய்தியாக மட்டுமே வந்திருக்கும் ஆனால் அதை எடுத்து ஒரு சில தினங்களில் இது தொடர்பான கைது விசாரணை அல்லது முன்ஜாவின் வழக்கு வாபஸ் என்ற செய்திகள் சிறிய செய்தியாக போடப்பட்டிருக்கும்.

ஆனால் இவைதான் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இதை படிக்காத பக்கங்கள் என்ற பெயரில் வசனங்களாக வைத்திருக்கிறார்

நாம் படித்த பக்கங்களை விட படிக்காத பக்கங்கள் நிறைய இருக்கிறது அதை படிக்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் – படிக்காத பக்கங்கள் திரைப்படத்தில் படிக்க வேண்டிய பக்கங்கள் அதிகம் உள்ளது.

ரேட்டிங் :- 2.5/5.