‘பாய்’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஆதவா ஈஸ்வரா, நிகேஷா, தீரஜ் கெர், சீமான் அப்பாஸ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- கமலநாதன் புவன்குமார்.
ஒளிப்பதிவாளர் :- கிருஷ்ணமூர்த்தி.
படத்தொகுப்பாளர் :- இத்ரீஸ் கே.
இசையமைப்பாளர் :- ஜித்தன் கே ரோஷன்.
தயாரிப்பு நிறுவனம் :- கே ஆர் எஸ் பீலிம்டேம்.
தயாரிப்பாளர்கள் :- ஆர் கிருஷ்ணகுமார், கே கிருஷ்ணவேணி, ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா.
ரேட்டிங் :- 1.5/5.
ஸ்லீப்பர்செல் மூலம் டெல்லி, மும்பை ஹைதராபாத் போன்ற இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் போல் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதக்குழு திட்டமிடுகிறார்கள்.
இந்த குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதக்குழு திட்டத்தின் மூளையாக செயல்படும் கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா, கோயமுத்தூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருடைய மனைவி ஊரில் இருந்து வீட்டுக்கு வருவதாக போன் கால் செய்கிறார்.
தன் செய்யும் ஸ்லீப்பர்செல் ரகசியங்கள் தன்னுடைய மனைவிக்கு காரணம் கொண்டும் தெரிய கூடாது, என்பதால் தன் மனைவி வீட்டிற்கு வருவது முன்னதாக தன்னுடைய வீட்டுக்கு விரைவாக செல்கிறார்.
தன்னுடைய வீட்டில், தனது பெட் ரூமில் தன் கட்டிலில் ஒரு ஆணும், பெண்னும் உல்லாசமாக இருப்பதை பார்த்து கதாநாயகன்
ஆதவா ஈஸ்வரா,
அதிர்ச்சியடைகிறார்.
தன்னுடைய வீட்டில் தன் பெட்ரூமில் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த ஆணும் பெண்ணும் யார்?
எனது வீட்டுக்கு அந்த ஆணும் பெண்ணும் வர வேண்டிய காரணம் என்ன? அவருடைய மனைவி வருகிறேன் என்று சொன்ன அவருடைய மனைவி என்ன ஆனார் ? என்பதுதான் இந்த “பாய்” திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த பாய் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதவா ஈஸ்வரா, உடல் கட்டான உடம்பு, நல்ல உயரம் என்று ஆக்ஷன் கதாநாயகனுக்கான அழகாகவும் தகுதியோடு இருக்கிறார்.
ஆனால், அந்த தகுதிகளை நல்ல கதை மற்றும் சரியான திரைப்படங்களில் வெளிக்காட்டினால் தமிழ் திரைப்பட உலகில் சிறந்த நடிகராக வர முடியும்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீரஜ் கெர் நிகேஷா, சீமான் அப்பாஸ், அனைவரும் கதாபுரத்தில் ஏற்றவாறு நடித்திருந்தாலும், கதாநாயகன் ஆதவா ஈஸ்வரா அளவுக்கு இவர்கள் அனைவருக்கும் திரைப்படத்தில் முக்கியத்துவம் இல்லை.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு மூலம், ஒரே அறையில் நடக்கும் காட்சிகள், மற்றும் ஆக்ஷன் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் மிகவும் நேர்த்தியாக உள்ளது.
இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்றவாறு மிகவும் அளவாக பயணித்திருக்கிறார்.
ஒரே அறையில் முழு திரைப்படத்தை எடுக்கும் முயற்சியாக கதை மற்றும் திரைக்கதையை உருவாக்கிய இயக்குநர் கமலநாதன் புவன்குமார் அதை சற்று தெள்ளத் தெளிவாகவும், சொல்லியிருந்தால் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தெளிவாகப் புரிந்து இருக்கும்.
மொத்தத்தில், இந்த ‘பாய்’ திரைப்படம் சுமார்.











