3.6.9. திரைவிமர்சனம் ரேட்டிங்:- 3.75/5.

நடிகர் & நடிகைகள் :- கே. பாக்யராஜ், பிஜிஎஸ், பிளாக பாண்டி, அங்கயர் கண்ணன், ஆலம் ஷா, நரேஷ்,சோஹைல், ராஜாஸ்ரீ, சக்திவேல், சுபிக்ஷா, ஜெய், கார்த்திக், பிரவீன், ரிஷி, பாப்லு, ஸ்ரீ, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- சிவா மாதவ்.

ஒளிப்பதிவு :- மாரீஸ்வரன் மோகன் குமார்.

படத்தொகுப்பு :- ஆர் கே ஸ்ரீநாத்.

இசை :- கார்த்திக் ஹர்ஷா.

தயாரிப்பு நிறுவனம் :- PGS புரொடக்ஷன்ஸ் & ஃப்ரைடே ஃபிலிம் ஃபேக்டரி.

தயாரிப்பாளர் :- பிஜிஎஸ் குமார். எம்.பி.ஆனந்த்.

ரேட்டிங் :- 3.75/5.

தனது முதல் திரைப்படத்தில் இயக்குனர் சிவ மாதவ் 24 கேமராக்களைப் பயன்படுத்தி,  81 நிமிடத்தில் ஒரு திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கப்பட்டு 90 நிமிட முழு நீள திரைப்படமாக கொடுத்து இருக்கிறார்.

நாலேஜ் எஞ்சினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனீப் என்பவர் நடுவராக திரைப்படத்தின் படப்பிடிப்பில் பார்வையிட, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் இந்த 3.6.9. திரைப்படத்துக்கு உலக சாதனைக்கான  விருதுனை வழங்கப்பட்டுள்ளது.

தனது முதல் திரைப்படத்தில் கின்னஸ் ரெக்கார்ட் வாங்கிய இயக்குனர் சிவமாதவ் அவர்களுக்கு எங்களது MOVIEWINGZ.COM இணையதளம் சார்பாக இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்த அமைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மிகப் பெரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை காலை அன்று கத்தோலிக்க தேவாலயம் திருச்சபை ஒன்றில் அதன் பங்குத் தந்தை கே.பாக்யராஜ் அவரின் உதவியாளர்களும் வழிபாட்டுக்கு தயாராகிக் கொண்டு இருக்க, மக்களும் கூட்டம் கூட்டமாக தேவாலயத்துக்குள் வந்து அமர வழிப்பாடு தொடங்குகிறார்.

மக்கள் வழிபாடு நடத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், துப்பாக்கி ஏந்திய ஒரு தீவிரவாத கும்பல் உள்ளே நுழைந்து தேவாலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் இரண்டு மூன்று பேர்களை சுட்டு கொன்று விட்டு கத்தோலிக்க தேவலாயத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதோடு, தேவாலய பாதிரியாரான கே.பாக்யராஜிடம் இருக்கும் ஒரு பொருளை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.

அது என்ன பொருள்? துப்பாக்கி ஏந்திய தீவிரவாத கும்பல் ஏன் அந்த பொருளை கைப்பற்ற நினைக்கிறார்கள்.

அந்த தீவிரவாத கும்பல் கைப்பற்ற நினைக்கும் அந்தப் பொருளை காப்பாற்ற நினைக்கும் பாதிரியார் கே.பாக்யராஜ் யார்? என்பதுதான் இந்த ‘3.6.9’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கத்தோலிக்க தேவாலய பாதிரியாராக நடித்திருக்கும் உங்கள் கே.பாக்யராஜ், தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கும், திரைப்படத்திற்கும் மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

கதையின் மற்றொரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிஜிஎஸ், மிகவும் கொடூரமான வில்லனாக நடித்திருக்கிறார்.

பிஜிஎஸ் தனது வில்லன் கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

இந்த 3.6.9.திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்கள் பிளாக் பாண்டி, அங்கையர் கண்ணன், அலம் ஷா, நரேஷ், சோஹைல், ராஜஸ்ரீ, சக்திவேல், சுபிக்‌ஷா, ஜெய், கார்த்திக், பிரவீன், ரிஷி, பாலு, ஸ்ரீ என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர், நடிகைகள் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

திரைபபடமும் முழுவதும் கிறிஸ்தவ தேவலாயத்திற்குள் நடந்தாலும், 24 கேமராகளை வைத்துக்கொண்டு வித்தியாசமான கோணங்கள் மூலம் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் மாரீஸ்வரன் மோகன் குமார், கடுமையாக உழைத்திருப்பது திரைப்படம் முழுவதும் ஒளிப்பதிவு மூலம் தெரிகிறது.

இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா, பின்னணி இசை மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கும் இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா வாழ்த்துக்கள்.

படத்தொகுப்பாளர் ஆர்.கே. ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு அருமை.

இந்த 3.6.9 திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் கின்னஸ் ரெக்கார்டு.

அறிவியல் புனைக்கதையை மிக எளிமையாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஷிவ மாதவ்.

சாதாரணமாக முதல் பாதியில் தேவாலயத்தில் ஆரம்பித்த மர்மமான முடிச்சுகளை இரண்டாம் பாதியில் அவிழ்ப்பது திரைக்கதைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

தற்போது நடக்கும் சிறிய திரைப்படங்கள் பெரிய திரைப்படங்களின் படப்பிடிப்பு 40 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை இருந்து வருடக் கணக்கில் படப்பிடிப்பு நடத்தி வரும் தமிழ் திரைப்பட உலகில் உள்ள இயக்குநர்களுக்கு மத்தியில்  தெளிவான முறையில் திட்டமிட்டு, பல நாட்கள் ஒத்திகை செய்யப்பட்டு காட்சிகளை நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து இந்த திரைப்படத்தின் 81 நிமிடத்தில் படப்பிடிப்பை நடத்தி இப்படி ஒரு சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவ் மாதவ்க்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

தனக்கு கிடைத்த குறைந்த பட்ஜெட்டில்  தொழில்நுட்பம் தொடர்பான காட்சிகளை எந்த அளவிற்கு சிறப்பாக கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக இயக்கியிருக்கும் இயக்குநர் சிவ மாதவ்க்கு தமிழ் திரைப்படத்தில் மிகப்பெரிய இடம் காத்துக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில் புதிய முயற்சியாக கின்னஸ் ரெக்கார்ட் பெறப்பட்ட 3.6.9. திரைப்படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்.

error: Content is protected !!