‘மெளன மொழிகள்’ திரைப்பட விமர்சனம்.
நடிகர் & நடிகைகள் :- ஷகீர் மனோ, அர்ச்சனா, பி.ஶ்ரீமன், திவ்யா நாகேஷ், அர்ஜுனன், தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், இளவரசன்,
அஞ்சலி தேவி, விஜய் கணேஷ், அப்பு, மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஏ.சி. சௌந்தர்.
ஒளிப்பதிவாளர் :- எம்.ஜி. ராய் ரகுராம்.
படத்தொகுப்பாளர் :- சேது ரமணன்.
இசையமைப்பாளர் :- நள இளந்திரையன்.
தயாரிப்பு நிறுவனம் :- ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட்.
தயாரிப்பாளர்கள் :- எஸ்.பி. பால சந்திரன், பி. ஶ்ரீமன்.
மக்கள் தொடர்பு :- சரண்.
வெளியீட்டு தேதி :-27 நவம்பர் 2026.
ரேட்டிங் :- 1.75./05.
அழகின் மீது தொடங்கும் காதல்… காலம் சோதிக்கும் உண்மையான அன்பு!
அழகான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் கதாநாயகன் ஷாகிர் மனோ, மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்கும் கதாநாயகி அர்ச்சனா சிங், சந்தித்துக் நிலையில் ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன.
இதற்கிடையில் கதிரை விரும்பும் மற்றொரு பெண்ணின் கதையும் இணைகிறது. இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் கதை நிறைவடைகிறது.
அதன் பின்னர் அந்தச் சந்திப்பு காதலாக மலரும் நேரத்தில் ஆனால் எதிர்பாராத விபத்து ஒன்று கதாநாயகி அர்ச்சனா சிங் வாழ்க்கையை மாற்றுகிறது.
இருவருக்குள்ளும் காதல் மலரும் சூழலில், எதிர்பாராத விதமாக கதாநாயகி அர்ச்சனா சிங், ஒரு விபத்து ஏற்பட்டு முகம் சிதைந்து அழகு பாதிக்கப்படுகிறது.
கதாநாயகி அர்ச்சனா சிங் முக அழகு பாதிக்கப்படும் நிலையில். அந்தச் சூழலில் கதாநாயகன் ஷாகிர் மனோ, காதல் உண்மையாக காதலிக்கிறாரா?’ காதலிக்கவில்லையா?’
கதாநாயகன் ஷாகிர் மனோ கதாநாயகி அர்ச்சனா சிங் மீது உள்ள காதல் உண்மையானதா?,
கதாநாயகி அர்ச்சனா சிங் வெளித்தோற்றத்தின் மீதான ஈர்ப்பைத் தாண்டி உண்மையான அன்பைத் கதாநாயகன் ஷாகிர் மனோ தேர்ந்தெடுக்கிறாரா? உண்மையான காதலை ஒன்றிணைந்தார்களா? ஒன்றுமேவில்லையா?, என்பதுதான் இந்த ஃ’மெளன மொழிகள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘மெளன மொழிகள்’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாகிர் மனோ நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஷாகிர் மனோ கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
காதல், மோதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் வழியாகத் தனது முதல் திரைப்படத்தில் கவனம் ஈர்க்க முயற்சித்துள்ளார்.
பின்னணி பாடகர் மனோவின் மகனாகத் திரையுலகில் கதாநாயகனாக ஷாகிர் மனோ, இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
இந்த ஃ’மெளன மொழிகள்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அர்ச்சனா சிங் நடித்திருக்கிறார்.
கதாநாயகன் நடித்திருக்கும் அர்ச்சனா சிங் பவித்ரா என்ற அழகிப் போட்டியாளரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கதையின் முக்கியமான திருப்பத்திற்குப் பிறகு அவரது கதாபாத்திரம் உணர்வுப்பூர்வமான பரிமாணத்தைப் பெறுகிறது.
கதாநாயகன் ஷாகிர் மனோ, நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுனன்: இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் சில இடங்களில் சிரிக்க வைத்து திரைப்படத்தை காப்பாற்றி இருக்கிறார்.
தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசன், அஞ்சலிதேவி விஜய் கணேஷ் அப்பு கதையின் துணைக் கதாபாத்திரங்களுக்குப் பலம் சேர்க்கும் வகையில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எம்.ஜி. ராய் ஒளிப்பதிவு மூலம் காதல் மற்றும் குடும்பப் பின்னணியிலான காட்சிகளுக்கு ஏற்ற காட்சியமைப்பை வழங்கியுள்ளார்.
இசையமைப்பாளர் நள இளந்திரையன் இசையில் பாடல்கள் பின்னணி இசை திரைப்படத்திற்கு இசையில் இன்னும் கொஞ்சம் எனக்கு இருக்கலாம்.
காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து நகரும் திரைக்கதை, வெளித்தோற்றத்தைத் தாண்டி உண்மையான அன்பின் மதிப்பை எடுத்துரைக்கிறது. கதையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும், கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் படத்தின் முக்கிய அம்சங்களாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஏ.சி. சௌந்தர்.
மொத்தத்தில் இந்த ‘மௌன மொழிகள்’ காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்.












