பாயும் ஒளி நீ எனக்கு திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5/5.

நடிகர் & நடிகைகள் :- விக்ரம் பிரபு, வாணி போஜன், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, தனஞ்ஜெய், ஆனந்த் , வெற்றி கிரண். குணா பாபு, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கார்த்திக் அத்வைத்.

ஒளிப்பதிவு :- G.ஸ்ரீதர்.

படத்தொகுப்பு :- C.S.பிரேம் குமார்.

இசை :- சாகர் மஹதி.

தயாரிப்பு நிறுவனம் :-  கார்த்திக் மூவி ஹவுஸ்.

தயாரிப்பாளர் :- கார்த்திக் சவுத்ரி.

ரேட்டிங் :- 2.5/5.

கதாநாயகன் விக்ரம் பிரபுவின் நண்பர் விவேக் பிரசன்னாவுடன் சேர்த்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.

சிறு வயதில் தாய் தந்தையுடன் வரும் போது மின்னல் தாக்குதலால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கதாநாயகன் விக்ரம் பிரபுவிற்கு அதிக வெளிச்சத்தில் பார்க்க முடிந்த கண் பார்வை குறைந்த வெளிச்சத்தில் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

தனக்கு இந்த மாதிரியான கண் பார்வைக் குறைபாடு இருப்பதை நினைத்து வருத்தமோ இல்லாமல் மிகவும்  பாசிட்டிவான இளைஞனாக இருந்து வருகிறார்.

புது ப்ராஜெக்ட் நிச்சயமாக அட்வான்ஸ் கிடைத்ததால் கதாநாயகன் விக்ரம் பிரபுவின் நண்பர் விவேக் பிரசன்னாவுடன் பைக்கில் ஒயின்ஷாப்பில் நிறுத்தி சரக்கு வாங்க விவேக் பிரசன்னா செல்ல அங்கு இரவு நேரத்தில் பெண்ணின் அழ குரல் கேட்க பெண் ஒருவருக்கு இரண்டு ரவுடிகள் பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்க இருவரையும் அடித்து துவம்சம் செய்து விட்ட அவர்களிடமிருந்து கதாநாயகன் விக்ரம் பிரபு அந்த பெண்ணை காப்பாற்றுகிறார்.

அங்கிருந்து கதாநாயகன் விக்ரம் பிரபுவுக்கு பிரச்சினை ஆரம்பம் ஆகிறது.

அடி வாங்கிய அந்த இரண்டு ரவுடிகள் கதாநாயகன் விக்ரம் பிரபுவை பழிவாங்க துடிக்கின்றனர்.

ஒருநாள் இரவு நேரத்தில் கதாநாயகன் விக்ரம் பிரபுவின் சித்தப்பாவை யாரோ கொன்று விடுகின்றனர்.

கதாநாயகன் விக்ரம் பிரபு தனது சித்தப்பாவின் கூடவே இருந்தும் பார்வை குறைப்பாடு காரணமாக தன் சித்தப்பாவை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்.

இதனால் தன் சித்தப்பாவை கொலை செய்தவர்களை கதாநாயகன் விக்ரம் பிரபு கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கிறார்.

இறுதியில், தனது சித்தப்பாவை ரவுடிகள் கொலை செய்வதற்கு காரணம் என்ன? தன் சித்தப்பாவை கொலை செய்த கொலையாளிகளை கதாநாயகன் விக்ரம் பிரபு கண்டுபிடித்து பழி வாங்கினாரா? பழிவாங்கவில்லையா? என்பதுதான் இந்த பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.

கண் குறைபாடு உள்ள இளைஞனாக வரும் விக்ரம் பிரபு ஆக்‌ஷனில் அசத்தியிருக்கிறார்.

தன்னுடைய கதாபாத்திரம் மூலம் முழு திரைப்படத்தையும் தன் தோளில் தாங்கி பிடித்திருக்கிறார்.

இந்த பாயும் ஒளி நீ எனக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

கதாநாயகியாக வரும் வாணி போஜனுக்கு அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லை.

திரையில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி மறைகிறார்.

விக்ரம் பிரபுவின் நண்பராக வரும் விவேக் பிரசன்னா அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வில்லனாக வரும் தனஞ்செயா, மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

வேல ராமமூர்த்தி ஆகியோர் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

வில்லன் தனஞ்செயா வலது கையாக வரும் குணா பாபு வெறித்தனமான நடிப்பு கொடுத்திருக்கிறார்.

குணா பாபுவிற்கு தமிழ் திரைப்படம் உலகில் மிகப்பெரிய இடம் காத்துக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் சாகர் மஹதி இசையில் பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கும் அளவிற்கு இல்லை.

படத்தொகுப்பாளர் C.S.பிரேம் குமார் படத்தொகுப்பு ஓகே ரகம்.

முதல்பாதி ரசிக்க வைத்தாலும் கிளைமேக்ஸ் காட்சி லாஜிக் இல்லாத ஒன்றாக இருக்கிறது.

ஆக்‌ஷன், த்ரில்லர் கதையை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்.

மொத்தத்தில் பாயும் ஒளி நீ எனக்கு ரசிகர்களின் பார்வை குறைவு.