லாந்தர் திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- சஜிசலீம்.
ஒளிப்பதிவாளர் :- ஞான சௌமதர்.
படத்தொகுப்பாளர் :- பரத் விக்ரமன்.
இசையமைப்பாளர் :- எம்.எஸ். பிரவீன்.
தயாரிப்பு நிறுவனம் :- எம் சினிமா.
தயாரிப்பாளர்:- ஸ்ரீ விஷ்ணு.
ரேட்டிங் :- 3 25./5.
இன்று தமிழகத்தில் உலுக்கி கொண்டிருக்கும் கள்ளச்சாராயம் விஷயத்தை இந்த படத்தில் முதல் காட்சியாக வைத்திருக்கிறார்கள்.
கோவை மாநகரில் மிகவும் நேர்மையான உயர் காவல்துறை அதிகாரியான கதாநாயகன் விதார்த் கள்ளச்சாராய கும்பலை கூண்டோடு பிடிக்கிறார்.
கதாநாயகன் விதார்தின் மனைவி கதாநாயகி ஸ்வேதா டோரத்தி இருட்டு என்றாலும் அதிக அளவில் சத்தம் கேட்டாலும் சட்டென்று பயந்து மயங்கிவிடும் நோயினால் பாதிப்படைந்தவர்.
இப்படிப்பட்ட நோயிலிருந்து தனது மனைவியின் பயத்தை போக்குவதற்காக கோவை மாநகரை விட்டு புறநகரில் உள்ள பெரிய வீடு ஒன்றை எடுத்து கதாநாயகன் விதார்த் தனது மனைவி கதாநாயகி ஸ்வேதா டோரத்தி வாழ்ந்து வருகிறார்.
கோவை மாநகரத்தில் முகம் தெரியாத ஒரு நபர், கண்ணுக்குத் தென்படும் நபர்களை கடுமையாக தாக்குவதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கிறது.
அந்த முகம் தெரியாத நபரை தேடி செல்லும் காவல்துறையில் உள்ள காவலர்கள் சிலர் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் காவலர்கள் தாக்கப்பட்ட விஷயத்தை கேள்விப்பட்ட உடனே அந்த முகம் தெரியாத மர்ம நபரை பிடிப்பதற்காக கதாநாயகன் விதார்த், நேரடியாக களத்தில் இறங்குகிறார்.
தன்னுடைய மனைவி கதாநாயகி ஸ்வேதா டோரத்தி வீட்டில் தனியாக இருக்கிறார்.
அந்த முகம் தெரியாத மர்ம நபர் யார்?, அந்த மர்மன் நபரை கைது செய்வதற்காக கதாநாயகன் விதார்த் தலைமையிலான காவல்துறையை சேர்ந்தவர்கள் அந்த முகம் தெரியாத மர்ம நபரை கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா? என்பதுதான், இந்த லாந்தர் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த லாந்தர் திரைப்படத்தில் கதையின் நாயகனாக எதார்த்தம் நடித்திருக்கிறார்.
முதல் முறையாக காவல்துறை ஐ.பி.எஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் விதார்த், தன் நடிப்பில் மூலம் கம்பீரத்தை காட்டாமல், மனிதத்தை காட்டியிருக்கிறாள்.
இந்த லாந்தர் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்வேதா டோரத்தி, நடித்துள்ளார்.
இளம் தம்பதியாக நடித்திருக்கும் விபின் மற்றும் சஹானா, பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஞான சவும்தார் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
கதை முழுவதும் இரவு நேரத்தில் நடந்தாலும் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ். பிரவீனின் இசை பாடல்கள், பின்னணி இசையும் திரைப்படத்துக்கு கதைக்கு ஏற்றவாறு கை பயணித்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் கதை என்றாலே பெரும்பாலான தமிழ் திரைப்பட இயக்குநர்கள் லான் – லீனர் முறை அல்லது பேர்லர் ஸ்டோரி என்று சொல்லக் கூடிய ஒரே சமயத்தில் நடக்கும் இரண்டு கதைகள், போன்ற அம்சங்களை தங்களது திரைக்கதைக்கு பக்கபலமாக பயன்படுத்திக் கொள்வது வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
அத்தகைய ஒரு வழக்கமான பாதையில் தான் இந்த லாந்தர் திரைப்படத்தின் இயக்குநர் சஜிசலீம் அவர்களும் பயணித்திருக்கிறார்.
மொத்தத்தில், – ‘லாந்தர்’ திரைப்படம் வெளிச்சம் ஒகே.