கூழாங்கல் திரைவிமர்சனம் ரேட்டிங் :- 2.5./ 5.
நடிகர் & நடிகைகள் :- கருத்தடையான், செல்லப்பாண்டி மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- பி எஸ் வினோத்ராஜ்.
ஒளிப்பதிவாளர்கள் :- விக்னேஷ் குமுளை, ஜெய.பார்த்தி.
படத்தொகுப்பு :- கணேஷ் சிவா.
இசையமைப்பாளர் :- யுவன் சங்கர் ராஜா.
தயாரிப்பு நிறுவனம் :- ரவுடி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்.
தயாரிப்பாளர்கள் :- நயன்தாரா & விக்னேஷ் சிவன்.
ரேட்டிங் :- 2.5./ 5.
புதுமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், பல சர்வதேச விருதுகளை கைப்பற்றியது மட்டுமல்லாமல், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே தமிழ் திரைப்படம் ‘கூழாங்கல்’.
சோனி லிவ் ஒடிடி தளத்தில் இன்று 27 அக்டோபர் 2023 வெளியாகியிருக்கிறது.
தன்னை மிகவும் கொடுமை படுத்தியதால் கணவன் கருத்தடையானிடம் சண்டை இட்டு கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ்வதற்காக கூட்டிக் கொண்டு வருவதற்கு தனது மகன் படிக்கும் பள்ளிக்குச் சென்று தன் மகன் செல்லப்பாண்டியை அழைத்துக் கொண்டு மனைவியை தேடி மனைவியின் தாயார் வீட்டுக்கு கிளம்புகிறான் கருத்தடையான்.
கணவன் கருத்தடையான் ஆனால் மனைவி மீண்டும் கணவன் கருத்தடையான் வீட்டிற்கே வந்து விடுகிறாள்.
தனது தந்தை கருத்தடையான் ஊருக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக மகன் செல்லப்பாண்டி தனது தந்தை கருத்தடையான் கொடுத்த பணத்தை கிழித்து எறிந்து விட்டு ஓடுகிறான்.
கையில் பணம் இல்லாத காரணத்தால் வேறு வழி தெரியாமல் அவனது தந்தை கருத்தடையான் வேறு வழி இல்லாமல் தன் மகன் செல்லப்பாண்டியை பின் தொடர்ந்து நடந்தே ஊர் வந்து சேர்கிறார்கள்.
இந்தக் கூழாங்கல் திரைப்படத்தில் கருத்தடையான், சிறுவன் செல்லப்பாண்டி இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
திரைப்படத்தின் முதல் காட்சி ஆரம்பித்ததில் இருந்தே நடிகர் கருத்தடையான். சிறுவன் செல்லப்பாண்டி. இருவரும் நடக்கத் தொடங்கி விடுகிறார்
கருத்தடையான் நடிப்பு ஆவேசமும், வன்மமும் கொண்ட அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.
திரைப்படம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறார்.
நடையில் காட்டும் வேகத்தைக் கொண்டே உணர்வுகளை நடிகர் கருத்தடையான் அற்புதமாக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் திரைப்பட உலகிற்கு அற்புதமான வரவு என்று நடிகர் கருத்தடையானை சொல்லலாம்
கருத்தடையானை மகனாக வரும் செல்லப்பாண்டியும் நடந்து கொண்டே இருக்கிறான்.
ஆங்காங்கே தரையில் கிடக்கும் உடைந்த கண்ணாடி பாறைகள், மலைகள், செடிகள் இவற்றினூடாக அவனது பயணம் நமது மனதை கரைய செய்கிறது.
மதுரையின் சுற்றுப்புறத்தில் உள்ள ஊர்களான அரிட்டப்பட்டி, ஒத்தக்கடை, மேலூர் ஆகிய பகுதிகளின், அந்த கொடும் வெயிலில் சிறுவன் செல்லப் பாண்டியின் கருத்தடையானை உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றத் தகுந்தது.
தனது தந்தை கருத்தடையானை பழிவாங்கும் முயற்சியில் அவன் செய்யும் சில்மிஷங்கள் ரசிக்க வைக்கின்றது.
இந்தக் கூழாங்கல் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் அற்புதமாக எதார்த்தமாகவும் நடித்து அசத்தியிருக்கிறார்கள்.
இந்தக் கூழாங்கல் திரைப்படத்தின் மற்றொரு முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது ஒளிப்பதிவாளர்கள் விக்னேஷ் குமுளை, ஜெய.பார்த்தி ஆகியோரின் ஒளிப்பதிவு கதையும் கதாபத்திரத்தையும் சுமந்து இருக்கிறார்கள்.
மிகவும் நீளமான காட்சிகள், தேவைக்கு ஏற்ப நிலைத்த ஷாட்களும், பாத்திரங்களின் நடை பயணத்தின் போது கேமராவின் கோணங்கள் நடை பயணமும் மனதை வசீகரிக்கின்றன.
மகன் செல்லப்பாண்டி அழைத்துக் கொண்டு அவனது தாய் ஊருக்கு சென்று விட்டு, பின் அவனது தந்தை கருத்தடையானை தன் மனைவி வீட்டுக்கு சென்ற தன் மகன் செல்லப்பாண்டியை தேடி வந்து தன் மனைவியின் தம்பியிடம் சண்டையிடும் காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருப்பது இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ் ஒளிப்பதிவாளர்கள் விக்னேஷ் குமுளை, ஜெய.பார்த்தி ஒளிப்பதிவு மூலம் மிக அருமையாக தங்களது திறமையை காண்பித்திருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு திரைப்படத்திற்க்கு மிகப்பெரிய பலம் அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பெரும்பாலும் இந்த திரைப்படத்திற்கு இசை பெரிதாக தேவையில்லை என்பதை புரிந்து கொண்டு இசையமைத்திருக்கிறார்.
இந்தக் கூழாங்கல் திரைப்படத்தில் என்ன சொல்ல வந்தார்கள் என்பது திரைப்படம் பார்க்கும் நமக்கு கொஞ்சம் கூட புரியவில்லை.
மொத்தத்தில் இந்தக் கூழாங்கல் திரைப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கும் அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை.











