பேச்சி திரைவிமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ் ராம்நாத், முரளி, ப்ரீத்தி நெடுமாறன், ஜனா, மகேஷ் , மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ராமச்சந்திரன் பி.
ஒளிப்பதிவாளர் :- பார்த்திபன் டி.எஃப்.டெக்.
படத்தொகுப்பாளர் :- இக்னேஷியஸ் அஸ்வின்.
இசையமைப்பாளர் :- ராஜேஷ் முருகேசன்.
தயாரிப்பு நிறுவனம் :- வெயிலான் எண்டர்டெயின்மென்ட் & வீனஸ் புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளர்கள் :- கோகுல் பெனாய், ஷேக் முஜீப், விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் பெர்னாண்டோ, ராஜராஜன்
ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர்.
ரேட்டிங் :- 3.5./5.
கொல்லிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் காயத்ரி சங்கர், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் ஆகிய ஐந்து பேரும் டிரக்கிங் செல்கிறார்கள்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாலசரவணன் அவர்களுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் வழிகாட்டுவதற்காக அவரும்
செல்கிறார்.
இவர்கள் அனைவரும் செல்லும் வழியில் “இது தடை செய்யப்பட்ட பகுதி” என்ற பலகை ஒன்று இருக்க அதை பார்த்தத காயத்ரி சங்கர், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் நண்பர்கள் அனைவரும் அந்த பகுதிக்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள் .
அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தி, அது ஆபத்தான பகுதி செல்ல வேண்டாம் என பால சரவணன் எச்சரிக்கிறார்.
பால் சரவணன் எச்சரிக்கையை மீறி அந்த தடை செய்யப்பட்டுள்ள பகுதிக்குள் நுழையும் நண்பர்கள் எதிர்பார்க்காத பல பயங்கரமான சம்பவங்களை சந்திக்கிறார்கள்.
இந்த பயங்கரமான சம்பவங்களை அரங்கேற்றியது பேச்சியின் செயல் என்பதை அறிந்துக்கொண்டு, அனைவரையும் காப்பாற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபடும் பாலசரவணன், அனைவரையும் காப்பாற்றினாரா?, காப்பாற்றவில்லையா?, அந்த தடை செய்யப்பட்டுள்ள பகுதிக்குள் நுழையும் காயத்ரி சங்கர், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா, மகேஷ் நண்பர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பகுதிகள் சென்றவர்கள் உயிர் தப்பினார்களா,’ தப்பில்லையா?, அந்தப் பேச்சு என்பவர் யார்? என்பதுதான் இந்த பேச்சு திரைப்படத்தின் மீதிக்கதை
இந்த பேச்சி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காயத்ரி சங்கர், ப்ரீத்தி நெடுமாறன், தேவ் ராம்நாத், ஜனா மற்றும் மகேஷ் ஆகிய ஐந்து பேரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
அடர்ந்த காட்டுப் ப்பகுதிக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அச்சத்தோடு பயணிக்கும் நண்பர்கள் பயணம் ரசிகர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தை கொடுக்கும்.
பாலசரவணன் காமெடி கதாபாத்திரங்களை மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தன்னால் கண்டிப்பாக முத்திரை பதிக்க முடியும் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பார்த்திபன், ஒளிப்பதிவு மூலம் காட்சியிலேயே திரையில் பிரமாண்டத்தை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இசையமைத்திருக்கிறார்.
இப்படி ஒரு கதையை யோசித்து வித்தியாசமான திரை கதையை ஒரு பேச்சி என்கின்ற பேய்க்கு கதை எழுதி மிகவும் அழகான ஒரு திகில் திரைப்படமாக கொடுத்திருக்கும் இயக்குனர் பி. ராமச்சந்திரன் அவர்களுக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள்.
தமிழ் திரைப்பட உலகில் பல வருடங்களுக்குப் பிறகு திகில் அனுபவத்தை கொடுக்கும் திரைப்படமாக வெளிவந்திருக்கும் ‘பேச்சி’ நிச்சயம் ரசிகர்களை பேச வைக்கும் திரைப்படமாக அமையும்.
திகில் திரைப்படங்கள் வரிசையில் இரவுகளில் பயம் படுத்தும் படங்கள் அதிகம் அனால் இந்த பேச்சி திரைப்படத்தில் பகலில் பயம் படுத்தியிருக்கிறார்கள்.
மொத்தத்தில், இந்த ‘பேச்சி’ படம் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை அலற வைக்கவில்லை .











