‘பணி’ திரைப்பட விமர்சனம்
நடிகர் & நடிகைகள் :- ஜோஜு ஜார்ஜ், அபிநயா ஆனந்த், சீமா ஐவி சசி, சுஜித் சங்கர், பிரசாந்த் அலெக்சாண்டர், ஜுனாயஸ் வி.பி , சாகர் சூர்யா, ரஞ்சித் வேலாயுதன், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ், மற்றும் பலர்.
எழுத்து & இயக்கம் :- ஜோஜு ஜார்ஜ்.
ஒளிப்பதிவாளர் :- வேணு ISC & ஜின்டோ ஜார்ஜ்.
படத்தொகுப்பாளர் :- மனு ஆண்டனி.
இசையமைப்பாளர் :- விஷ்ணு விஜய் & சாம் சி எஸ்.
தயாரிப்பு நிறுவனம் :- அப்பு பது பப்பு & ஸ்ரீ கோகுலம் மூவிஸ் & அட்ஸ் ஸ்டுடியோஸ்.
தயாரிப்பாளர்கள் :- எம் ரியாஸ் ஆடம் & சிஜோ வடக்கன்.
ரேட்டிங் :- 4.5./5.
அதன் பிறகு நடிகராக தயாரிப்பாளராக பின்னணி பாடகராகவும் மலையாள திரைப்பட உலகில் மிகப்பெரிய நட்சத்திர நடிகராகவும் இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ், இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம்தான் ‘பணி’.
மலையாளத் திரைப்பட உலகில் 24 அக்டோபர் 2024 அன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதால், தமிழ் திரைப்பட உலகிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு 22 நவம்பர் 2024 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்படுகிறது.
திருச்சூரில் உள்ள பைக் மெக்கானிக் கடையில் ஒன்றில் இரண்டு சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் வேலை பார்த்து வருகின்றனர்.
பைக் மெக்கானிக் கடையில் விடுமுறை சொல்லிவிட்டு செல்லும் சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் இருவரும் ஒருவரை ATM குள் குத்தி கொலை செய்து விடுக்கிறார்கள்.
அதன்பிறகு, கதாநாயகன் ஜோஜூஜார்ஜின் மனைவியாக வரும் அபிநயாவிடம் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில வைத்து சாகர் சூர்யா அபிநயா அழகில் மயங்கி இடுப்பில் தடவி சில்மிஷம் செய்கிறார்.
இதனால் கோபம் கொண்ட கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜ், சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் இருவரையும் சரமாரியாக அடித்து துவைத்து எடுக்கிறார்.
இதனால் வெறி கொண்ட இருவரும் சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் இருவரும் கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜையும் அவருடைய மனைவியையும் அபிநயாவையும் பழிவாங்க துடிக்கிறார்கள்.
பல வருடங்களுக்கு முன் கல்லூரியில் ஒன்றாக படித்த கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜும் மற்றும் அவருடைய முன்று நண்பர்களும் மிகப்பெரிய தாதாவாக வலம் வந்தவர்கள்.
இந்த நிலையில் திருமணத்திற்குப் பின்பு அனைவரும் எந்த ஒரு ரவுடித்தனமும் இல்லாமல் அமைதியாகவும் வாழத் தொடங்கினார்கள்.
தன் மனைவி அபிநயா மீது அளவு கடந்த அன்பும் காதலும் கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜ் வைத்திருப்பவர்.
கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜ் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, அவரது வீட்டிற்குள் சென்று அபிநயாவை சாகர் சூர்யா ஜூனாய்ஸும் இருவரும் சேர்ந்து கற்பழித்து விடுகின்றனர்
இதனால், இருவரையும் கொல்ல நினைக்கிறார்கள் கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜும் அவரது முன்று நண்பர்களும் தனது நண்பனின் மனைவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய சாகர் சூர்யாவும் அவனது நண்பர் ஜூனாய்ஸு இருவரையும் கொலை செய்வதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இருவரையும் கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜும் அவரது முன்று நண்பர்களும் பழி வாங்கினார்களா?, பழி வாங்கவில்லையா?, என்பதுதான் இந்த பணி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தப் ‘பணி’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஜோஜூ ஜார்ஜ் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜோஜூ ஜார்ஜின் நடிப்பு மிகவும் சாதுவாக இருந்து கொண்டு மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜ் தன் கண் பார்வையிலும், உடல் மொழியிலும் தனக்கே உரித்தான மாஸ்சான நடிப்பை கொடுத்து அதிரடியான ஆக்ஷனில் பட்டையை கிளப்பியுள்ளார்.
கதாநாயகன் ஜோஜூ ஜார்ஜ் மனைவியாக நடித்திருக்கும் அபிநயாவின் அருமையான, அழகிலும் நடிப்பிலும் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கட்டிப் போட்டுவிட்டார்.
வில்லன்களாக நடித்திருக்கும் சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் இருவரும் திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.
இளம் வயதாக இருந்தாலும் தங்களது மிரட்டலாக நடித்திருப்பதால் தான் ஜோஜூ ஜார்ஜின்ன் ஹீரோயிசம் பலம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
வில்லன் நடித்திருக்கும் சாகர் சூர்யா & ஜுனாய்ஸ் இவர்கள் இருவரும் வெறித்தனமான நடிப்பை கொடுத்து திரைப்படத்தை வெற்றி பெற இவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.
மற்ற கதாபாத்திரம் எடுத்திருக்கும் ஆனந்த், சீமா ஐவி சசி, சுஜித் சங்கர், பிரசாந்த் அலெக்சாண்டர், ரஞ்சித் வேலாயுதன், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ், இவர்களின் அனைவருடைய நடிப்பும் திரைப்படத்திற்கு மிக பக்க பலமாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர்கள் வேணு ISC & ஜின்டோ ஜார்ஜ் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசை மிகவும் மிரட்டலாக இருக்கிறது.
தனது முதல் முதலாக இயக்கிய திரைப்படத்தில் இப்படி ஒரு அதிவேகமான திரைக்கதையை அமைத்து அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் இயக்குநர் ஜோஜூ ஜார்ஜ் அவர்களுக்கு எமது இணையதளம் சார்பாக மிகப்பெரிய பாராட்டுக்கள்.
பெண்களை தொட்டால் என்ன நடக்கும் என கூறும் இடத்தில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களால் கைதட்டல் பெறுகிறார்.
மொத்தத்தில், பணி திரைப்படம் அனைத்து திரைப்பட ரசிகர்களும் பாராட்டும் வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கிறது.