பி டி சார் திரைவிமர்சனம்

நடிகர் & நடிகைகள்:- ஹிப்ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி, தியாகராஜன், K.பாக்யராஜ்,  பிரபு, R.பாண்டியராஜன், இளவரசு, முனிஷ்காந்த், பட்டிமன்றம்ராஜா, அனிகா சுரேந்திரன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், YG மதுவந்தி, RJ விக்கி, சுட்டி அரவிந்த், பிரசன்னா பாலச்சந்தர், அபிநக்ஷத்ரா, ப்ரனிக்கா, திரிஷ்வ்சாய், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- கார்த்திக் வேணுகோபாலன்‌

ஒளிப்பதிவாளர் :- மாதேஷ் மாணிக்கம்.

படத்தொகுப்பாளர் :- பிரசன்னா ஜி.கே.

இசையமைப்பாளர் :- ஹிப்ஹாப் தமிழா ஆதி.

தயாரிப்பு நிறுவனம் :- வேல்ஸ் ஃபிலிம் பிலிம் இண்டர்நேஷனல் பி லிமிடெட்.

தயாரிப்பாளர் :- டாக்டர்.ஐசரி K.கணேஷ்.

ரேட்டிங் :- 3.75/5.

கோவை மாவட்டத்தில் கல்வி தந்தையாக இருக்கும் தியாகராஜன் கல்லூரி மற்றும் பள்ளிகளை நடத்தி வருகிறார்.

அந்த தனியார் பள்ளியில் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி, உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆங்கில ஆசிரியராக இருக்கும் கதாநாயகி காஷ்மிரா பர்தேஷி மீது கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி ஒரு தலையாக காதலித்து வருகிறார்.

கல்வி தந்தையான தியாகராஜன் நடத்தி வரும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு அனிகா சுரேந்திரன் பயின்று வருகிறார்.

ஒருநாள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் நான்கு இளைஞர்கள் அனிகா சுரேந்திரனை மீது பாலியல் சீண்டலில் ஈடுபட நான்கு இளைஞர்கள் இடம் இருந்து தப்பித்து வந்து விடுகிறார்.

அவள் அணிந்திருக்கும் டிரஸ்கள் கிழிந்து ரத்த காயங்களுடன் வீட்டிற்கு அலங்கோலமாக வரும் அனிகா சுரேந்திரனை பார்த்து அவரது தந்தை இளவரசு கவலையடைய அவரது அம்மா மட்டும், நீ அணிந்த உடையால்தான் இப்படி ஒரு மிகப்பெரிய பிரச்சனை வந்திருக்கிறது என்கின்றார்.

வீட்டில் அப்பா அம்மா மட்டுமல்லாமல் அந்த தெருவில் உள்ள அனைவரும் அனிகா சுரேந்திரனின் உடை மீதான விமர்சனத்தை மனதளவில் பாதிக்கப்படும்படியாக காதுப்பட பேசுகிறார்கள்.

இதனை தொடர்ந்து, நான்கு இளைஞர்கள் அனிகா சுரேந்திரனின் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் பகிரப்படுகிறது, அனிகா சுரேந்திரனை அதனைக் கண்டு மனதளவில் பாதிக்கப்படுகிறாள்.

அந்த வீடியோ வைரலான காரணத்தினால் கல்லூரி நிர்வாகம் அனிகா சுரேந்திரனை கல்லூரியில் இருந்து நீக்க முற்படுகின்றனர்.

அச்சமயம், அந்த கல்லூரியின் சேர்மன் தியாகராஜனை அனிகா சுரேந்திரன் சந்திக்கிறார்.

அந்த கல்லூரியின் சேர்மன் தியாகராஜனை சந்தித்த மறுநாளே அனிகா சுரேந்திரன் இறந்துவிடுகிறார்.

அனிகா சுரேந்திரன் இறப்பு தற்கொலைதான் என காவல்துறையினர் மற்றும் அனைவரும் கூற, இது கொலைத்தான் என்று நீதிமன்றத்தில் கல்வி தந்தை தியாகராஜன் மீது கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி வழக்கு தொடர்கிறார்.

அனிகா சுரேந்திரன் கொலை செய்தது அந்தக் கல்லூரியின் சேர்மன் கல்வித்தந்தை தியாகராஜன்தான் என்று அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி.

இந்த நிலையில் இறுதியாக கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி அந்த வழக்கில் வெற்றி பெற்றாரா? வெற்றி பெறவில்லையா?

அனிகா சுரேந்திரனை கொலை செய்த கொலையாளி யார்?

கல்வி தந்தை தியாகராஜன் மீது கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி தொடர்ந்து வழக்கில் தண்டனை பெற்றாரா? தண்டனை பெறவில்லையா? என்பதுதான் இந்த PT சார் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த PT சார் திரைப்படத்தில் கதாநாயகனாக ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி, கனகவேல் கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

கனகவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி, வழக்கம் போல் குழந்தைகளையும், பெண்களையும் ஈர்க்கும் விதத்தில் கலகலப்பாக நடித்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக உள்ள காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார்.

இந்த PT சார் திரைப்படத்தில் கதாநாயகியாக காஷ்மீரா பரதேசி நடித்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் காஷ்மீரா பரதேசிக்கு இந்த திரைப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.

கதையின் மையப்புள்ளியாக பயணித்திருக்கும் அனிகா சுரேந்திரனின் மிக அருமையான நடிப்பு திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

பள்ளி கல்லூரி நிறுவனங்களின் உரிமையாளர் கதாபாத்திரத்தில் கல்வித் தந்தையாக நடித்திருக்கும் தியாகராஜன், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் தைரியமாக மட்டும் இன்றி மிரட்டலாகவும் நடித்துள்ளார்.

நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் K.பாக்யராஜ், கதாநாயகி காஷ்மீரா பரதேசியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளையதிலகம் பிரபு, பள்ளி தலைமை ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் R.பாண்டியராஜன், அனிகா சுரேந்திரனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, பள்ளியில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முனிஷ்காந்த், கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பட்டிமன்றம்ராஜா, கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி, அனிகா சுரேந்திரனின் தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோதினி வைத்தியநாதன், வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் YG மதுவந்தி, RJ விக்கி, சுட்டி அரவிந்த், பிரசன்னா பாலச்சந்தர், அபிநக்ஷத்ரா, ப்ரனிக்கா, திரிஷ்வ்சாய் என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், இளரவசு மற்றும் தேவதர்ஷினி இருவர் மட்டுமே திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவின் மூலம் காட்சிகளை பிரமாண்டமாக திரைப்படம் ஆக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

அதிலும் அச்சமில்லை பாடல் சிலிரிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம் போலவே இந்த PT சார் திரைப்படத்தையும் சமூக அக்கறையோடு வைத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பற்றியும், எப்படி எல்லாம் அதை சமூகம் எப்படி எல்லாம் பார்க்கிறது, என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்.

மொத்தத்தில் –  இந்த ‘PT சார்’ பெண்களின் பிரச்சனைகளை பேசும் படமாக குடும்பத்துடன் சென்று கொண்டாட வேண்டிய திரைப்படம்.